Latest Updates
-
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா?
உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? அப்ப உங்க விந்தணுக்களில் என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா?
நீரிழிவு என்பது உடலில் இன்சுலின் அளவு சமநிலையின்மையால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை. இது இனப்பெருக்க ஹார்மோன் அளவையும் பாதிக்கிறது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலட்டுத்தன்மை பிரச்சனைகள் அதிகரிப்பதற்கு பல காரணிகள் காரணமாக உள்ளன. இந்த காரணிகளில் சில மரபணு கோளாறுகள், உடல் பருமன் மற்றும் குடிப்பழக்கம் ஆகியவை அடங்கும். கூடுதலாக, வாழ்க்கைமுறையில் ஏற்படும் மாற்றங்களும் குழந்தையின்மைக்கான அதிக நிகழ்வுகளுக்கு பங்களிக்கின்றன. சமீபத்திய ஆய்வுகளின்படி, கருவுறாமைக்கு நீரிழிவு நோய் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறுகிறது. சர்க்கரை நோய் என்பது நம் உடல் தேவையான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாத அல்லது செல்லுலார் அளவில் இன்சுலினை உறிஞ்சாமல் இருக்கும் நிலை. அதிகரித்து வரும் நவீன வாழ்க்கை முறையால் குறிப்பாக, இளைய தலைமுறையினர் நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்டுகிறார்கள்.

நீரிழிவு நோய் உயிருக்கு ஆபத்தான பிரச்சினை அல்ல. இருப்பினும், இது உடலில் பல கோளாறுகளை ஏற்படுத்தும். இது குழந்தையின்மைக்கு வழிவகுக்கும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்து குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டால், நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு முயற்சி செய்வதற்கு முன், நீரிழிவு நோயாளிகள் சரியான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க வேண்டும். ஆண்களின் கருவுறுதலில் நீரிழிவு நோயின் தாக்கங்களைத் தவிர்க்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

அதிக வெப்பநிலைக்கு வெளிப்படுவதைத் தவிர்க்கவும்
நீரிழிவு ஆண்களின் கருவுறுதலை சில வழிகளில் பாதிக்கலாம், இதில் விந்தணுக்களின் தரம் குறைதல், விந்துணுக்கள் எண்ணிக்கை குறைவு மற்றும் மைட்டோகாண்ட்ரியல் பாதிப்பு ஆகியவை அடங்கும். ஆதலால், ஆண்கள் அதிக வெப்பநிலைக்கு வெளிப்படுவதைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

சோர்வு நீங்கும்
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான ஆண்கள் உடல் சோர்வை அதிகம் அனுபவிக்கிறார்கள். குறிப்பாக உடலுறவின் போது, அதிகமாக சோர்வடைகிறார்கள். அதிர்ஷ்டவசமாக, இவை ஆண்களின் கருவுறுதலில் நீரிழிவு நோயின் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தாது. மேலும் சிறிய முன்னெச்சரிக்கையுடன், இந்த சிக்கல்களை மிகக் குறுகிய காலத்தில் சமாளிக்க முடியும். இந்த பிரச்சனையை நீங்கள் சந்தித்தால், உடனே மருத்துவரை பாருங்கள்.

ஹார்மோன் சமநிலையின்மை
நீரிழிவு என்பது உடலில் இன்சுலின் அளவு சமநிலையின்மையால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை. இது இனப்பெருக்க ஹார்மோன் அளவையும் பாதிக்கிறது. எனவே மருத்துவ ஆதரவைப் பெறுவதன் மூலம் ஹார்மோன்களின் இயல்பான அளவைப் பராமரிப்பது முக்கியம்.

ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகள்
நீரிழிவு நோய், ஆண் கருவுறுதலோடு தொடர்புடையதாக உள்ளது. ஏனெனில் உயர் இரத்த சர்க்கரை அளவுகள் ஃப்ரீ ரேடிக்கல்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது மரபணு பாதிப்பு மற்றும் கருவுறாமைக்கு வழிவகுக்கும். ஒரு குழந்தைக்கு முயற்சிக்கும் முன் உங்கள் உணவில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும்.

உடற்பயிற்சி
இன்சுலின் எதிர்ப்பின் அதிகரிப்பு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களை பருமனாக மாற்றக்கூடும். மேலும் இது அவர்களின் பெற்றோராகும் திறனை பாதிக்கலாம். வழக்கமான உடற்பயிற்சி நீரிழிவு ஆண்களில் கருவுறுதலை அதிகரிக்க உதவுகிறது.

மருத்துவ ஆதரவு
ஆண்களின் கருவுறுதலில் நீரிழிவு நோயின் விளைவுகளில் ஒன்று பிற்போக்கு விந்துதள்ளல் ஆகும். இதில் விந்து கருப்பையை விட சிறுநீர்ப்பைக்கு செல்கிறது. சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால், தேவையான மருத்துவ ஆலோசனையுடன் இந்த பிரச்சனையை தீர்க்கலாம்.

உணர்ச்சி ஆதரவு
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் லிபிடோ இழப்பை அனுபவிக்கிறார்கள். இது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. இந்த பிரச்சனையுள்ள ஆண்கள் தங்கள் துணை அல்லது ஆலோசகருடன் திறந்த விவாதம் மூலம் பயனடைவார்கள், அவர்கள் பெற்றோருக்கான பயணத்தில் அவர்களுக்கு உதவுவார்கள். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்கள் விறைப்புத்தன்மையை பராமரிப்பதில் அடிக்கடி சிரமப்படுகிறார்கள். ஒரு குழந்தைக்குத் தந்தையாவதற்கான உங்கள் முயற்சிகளைப் பாதிக்கும் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க, உங்கள் துணையுடன் வெளிப்படையான உறவைப் பேணுவது அவசியம்.

இறுதிக் குறிப்பு
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், கருத்தரிக்க முயற்சிக்கும் முன் குறைந்தது மூன்று மாதங்களுக்கு நீரிழிவு நோயை நன்கு கட்டுப்படுத்த வேண்டும். இது கர்ப்பத்துடன் தொடர்புடைய நீரிழிவு தொடர்பான அபாயங்களைக் குறைக்கும். கூடிய விரைவில் உங்கள் பொது பயிற்சியாளர் (GP) அல்லது நீரிழிவு நிபுணரை அணுகவும். கர்ப்பம் ஏற்பட்டால், தகுந்த சிகிச்சையைப் பெறுவதற்கு விரைவில் மருத்துவ நிபுணரை அணுகுவது அவசியம். ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடல் செயல்பாடு மற்றும் வழக்கமான நீரிழிவு கட்டுப்பாட்டு சோதனைகள் இனப்பெருக்க விளைவுகளை பெரிதும் மேம்படுத்தும். நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவை கருவுறுதல் தொடர்பான பிரச்சனைகளுடன் தொடர்புடையது என்பது அனைவரும் அறிந்ததே.



Click it and Unblock the Notifications











