Latest Updates
-
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்..
இரத்த சர்க்கரை அளவு எகிறாமல் இருக்கணுமா? அப்ப இதுல ஒரு பானத்தை தினமும் காலையில குடிங்க...
ஒருசில பானங்களை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். கீழே இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் சில அற்புதமான பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சர்க்கரை நோய் என்பது உலகளவில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் ஒரு பொதுவான வாழ்க்கைமுறை நோயாகும். சர்க்கரை நோயானது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால் வரக்கூடியது. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிவிடும். எனவே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்வதோடு மட்டுமின்றி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியதும் அவசியம். குறிப்பாக ஒருசில பானங்களை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். கீழே இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் சில அற்புதமான பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றை தினமும் குறித்து வந்தாலே, இரத்த சர்க்கரை அளவை எகிறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

துளசி நீர்
துளசி மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடி. இந்த துளசியானது ஹைப்போகிளைசீமிக் பண்புகளை கொண்டுள்ளதால், இது உடலில் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுகிறது. அதற்கு துளசியை தினமும் மென்று சாப்பிடலாம். இல்லாவிட்டால் ஒரு டம்ளர் நீரில் 6-8 துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிக்கலாம்.

இஞ்சி நீர்
இஞ்சி அன்றாட சமையலில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருத்துவ குணம் வாய்ந்த பொருள். இதில் ஜிங்க் உள்ளது. இது இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. ஆகவே இஞ்சியை ஒரு டம்ளர் நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடித்து வருவது, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

வெந்தய நீர்
வெந்தயம் இன்சுலின் எதிர்ப்பை சமாளிக்க உதவுகிறது. எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கான மிகச்சிறந்த உணவுப் பொருள். சிறிது வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

பட்டை நீர்
பட்டை கணையத்திற்கு இன்சுலினை வெளியிட உதவி புரிந்து, உடலில் குளுக்கோஸ் செயல்முறையை ஊக்குவிக்கிறது. எனவே ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளை ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி செய்வதனால் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

வேப்பிலை நீர்
வேப்பிலை உடலில் மாயங்களை செய்யக்கூடிய திறன் கொண்டது. அதுவும் சர்க்கரை நோயாளிகளுக்கு வேப்பிலை ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். ஏனெனில் வேப்பிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுகிறது. அதற்கு வேப்பிலையை மென்று சாப்பிடலாம் அல்லது 7-8 வேப்பிலையை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications