Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சர்க்கரை நோயாளிகளே! இரத்த சர்க்கரை அளவு எகிறாமல் இருக்கணுமா? அப்ப இந்த டீயை தினமும் குடிங்க...
ஏலக்காயை அன்றாட சமையலில் சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
உலகிலேயே சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடு என்றால் இந்தியாவைக் கூறலாம். சர்க்கரை நோய் ஒருவருக்கு உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் பரம்பரையில் யாருக்கேனும் இருந்தால் வரக்கூடும். ஆனால் சர்க்கரை நோய் குறித்து அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இப்பிரச்சனை வந்தால், அதை சரியான உணவுப் பழக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஒருசில உணவுப் பொருட்களின் உதவியுடன் கட்டுப்பாட்டில் வைத்து, நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியும்.

வீட்டு சமையலறையில் இருக்கும் நறுமணமிக்க மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பொருள் தான் ஏலக்காய். நம் அனைவருக்குமே ஏலக்காய் ஒரு ஆரோக்கியமான பொருள் என்பது தெரியும். ஏலக்காயை அன்றாட சமையலில் சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். ஏலக்காய் உணவிற்கு நல்ல மணத்தை வழங்குவதோடு, அதற்கு பல உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்தும் திறன் உள்ளது.
இப்போது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஏலக்காயை எப்படி உட்கொள்ளலாம் என்பது குறித்து விரிவாக காண்போம்.

ஏலக்காய் வகைகள்
ஏலக்காயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை கருப்பு ஏலக்காய் மற்றும் பச்சை ஏலக்காய். ஆனால் இவற்றில் கருப்பு ஏலக்காயை விட பச்சை ஏலக்காய் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவை இரண்டிலுமே ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும் குணங்கள் உள்ளன. சர்க்கரை நோயை நிர்வகிக்க இவற்றில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இப்போது ஏலக்காயை உண்பது ஏன் சர்க்கரை நோய்க்கு உதவுகிறது என்பதைப் பார்ப்போம்.

உயர் இரத்த சர்க்கரை அளவு மற்றும் ஏலக்காய்
ஏலக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டிபயாடிக் பண்புகள் உள்ளன. இது எடையைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், மனச்சோர்வைத் தடுக்கவும் உதவுகிறது. பல்வேறு ஆய்வுகளில் ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஹைப்போலிபிடெமிக் பண்புகள் உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். இது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாமல், சர்க்கரையின் மீதான உங்கள் ஏக்கத்தை பூர்த்தி செய்யக்கூடியது. தினமும் ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடியை உட்கொள்வது, பிரீடியாபயாட்டீஸ் நிலையின் எதிர்மறையான விளைவுகளையும் எதிர்கொள்ள உதவும்.
நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால், கீழே சர்க்கரை சேர்க்காமல் தயாரிக்கப்படும் 3 விதமான ஏலக்காய் டீ கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றை தேர்வு செய்து தினமும் குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு எகிறாமல் இருப்பதுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.

ஏலக்காய் மற்றும் பால் டீ
* முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் ஒரு ஏலக்காயை தட்டிப் போட்டு அத்துடன் சிறிது டீ தூளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் காய்ச்சிய கெட்டியான பாலை சேர்த்து, குறைவான தீயில் சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
* பின்பு அதில் இஞ்சி, சிறிது துளசி இலைகளையும் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டினால், ஏலக்காய் பால் டீ தயார்.
* இஞ்சி, துளசி போன்றவை டீயின் சுவையை மேம்படுத்துவதோடு, இன்னும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் மாற்றும்.

ஏலக்காய் மற்றும் ப்ளாக் பெப்பர் டீ
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் ரை ஊற்றி கொதிக்க விடவும்.
* பின் அதில் 2 ஏலக்காயைத் தட்டிப் போட்டு, 2 சிட்டிகை மிளகுத் தூள் மற்றும் சிறிய பட்டை துண்டு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* பின்பு அதை வடிகட்டி, அப்படியே குடிக்கவும். விருப்பமிருந்தால், இதனுடன் பால் சேர்க்கலாம். ஆனால் பால் சேர்க்காமல் இருந்தால் தான், சுவை நன்றாக இருக்கும்.

ஏலக்காய் ப்ளாக் டீ
ஏலக்காய் ப்ளாக் டீ தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை ஊற்றி அதில் 2 ஏலக்காயைத் தட்டிப் போட்டு, சிறிது டீ தூளை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடிக்கவும். விருப்பமுள்ளவர்கள், இத்துடன் பட்டை, இஞ்சி, கிராம்பு போன்ற மசாலா பொருட்களையும் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.

முடிவு
நீங்கள் டீ பிரியர் என்றால், நிச்சயம் ஏலக்காய் டீ உங்களுக்கு பிடிக்கும். சொல்லப்போனால், அன்றாட உணவில் ஏலக்காயை சேர்ப்பதற்கான ஒரு சிறந்த வழி என்றால் அதைக் கொண்டு டீ போட்டுக் குடிப்பது தான். எனவே இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், இனிமேல் நீங்கள் குடிக்கும் டீயில் ஏலக்காயை சேர்த்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
