Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் திராட்சை சாப்பிடலாமா?
ஒரு நபரின் கணையம் போதிய இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாத நிலை டைப் 2 நீரிழிவு பாதிப்பு என்று கருதப்படுகிறது. திராட்சையில் காணப்படும் கூறுகள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
ஒரு நபரின் கணையம் போதிய இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாத நிலை டைப் 2 நீரிழிவு பாதிப்பு என்று கருதப்படுகிறது. இதனால் உடலின் இரத்த சர்க்கரை அளவில் உயர்வு ஏற்படுகிறது. இதன் காரணமாக இதய நோய் மற்றும் வாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே கால அட்டவணைக்கு ஏற்ற விதத்தில் இரத்த சர்க்கரை அளவை கண்காணிப்பது அவசியம்.

டைப் 2 நீரிழிவு பாதிப்பைக் கொண்டவர்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம். மேலும் இதன் அளவை கண்காணிப்பில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். சில வகை உணவுகள் குறிப்பாக பழங்கள், இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றன.
எனவே உங்கள் உணவு அட்டவணையில் சில வகை உணவுகளை சேர்த்துக் கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் இந்த பிரபலமான பழத்தை நீங்கள் எடுத்துக் கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க முடியும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அது என்ன பழம்?
திராட்சை. திராட்சையில் காணப்படும் கூறுகள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. ஒரு ஆய்வில் 38 நபர்களுக்கு 16 வாரங்கள் 20 கிராம் திராட்சை சாறு ஒவ்வொரு நாளும் செலுத்தப்பட்டது. மற்ற வழக்கமான குழுக்களுடன் ஒப்பிடும் போது இவர்களின் இரத்த சர்க்கரை அளவு குறைந்து காணப்பட்டதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

திராட்சையின் தோல்
திராட்சை தோலில் காணப்படும் ரெஸ்வெராட்ரோல் எனப்படும் ஒரு கூறு இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஒரு நபரின் உடலில் க்ளுகோஸ் செயல்பாடு மேம்படுகிறது. இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு குறைகிறது என்று பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ரெஸ்வெராட்ரோல் அதிகரிப்பதால், அணுக்களின் குழுக்களில் க்ளுகோஸ் ஏற்பிகளின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவில் நன்மையான தாக்கம் உண்டாகிறது என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன .

திராட்சை நல்லதல்ல என்றொரு நம்பிக்கை
திராட்சையில் சர்க்கரை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை உட்கொள்ளக் கூடாது என்ற ஒரு நம்பிக்கை இருப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சர்க்கரை சேர்க்கப்பட்ட பழங்கள் ஒரு நபரின் இரத்த க்ளுகோஸ் அளவை அதிகரிப்பதாக டயாபட்டீஸ் யூகே ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது .

நீரிழிவு மற்றும் திராட்சை
நீங்கள் திராட்சையை தொடர்ந்து உட்கொண்டு வருவதால் நீரிழிவு பாதிப்பிற்கு உள்ளாக மாட்டீர்கள். காரணம் நீரிழிவில் இருந்து உங்களை பாதுகாக்கும் மூலப்பொருட்கள் திராட்சையில் உள்ளது. நீரிழிவிற்கு முக்கிய காரணமான வளர்சிதை மாற்ற நோய்க்குறி உண்டாகும் அபாயத்தை தடுக்க திராட்சை உதவுகிறது. உடலின் க்ளுகோஸ் அளவை ஒழுங்குபடுத்த திராட்சை உதவுகிறது. தொடர்ந்து திராட்சை பழம் உட்கொள்பவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் அபாயம் குறைவதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. திராட்சை போன்ற தாவர ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்களை உட்கொள்வதால் மக்கள் அதிக நன்மை அடைகின்றனர் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நீரிழிவு நோயாளிகள் வைட்டமின், மினரல், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ள பழங்களை உட்கொள்வது மிகவும் நல்லது.

சிவப்பு திராட்சை
அரை கப் திராட்சையில் 52 கலோரிகள் உள்ளன. திராட்சை இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது மற்றும் இதில் சர்க்கரை இல்லை. இயற்கையாக இனிப்பு சுவை கொண்ட பழங்களை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்வதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. சிவப்பு திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது தவிர பல்வேறு வகையான கார்போஹைட்ரேட் உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதில்லை. திராட்சையில் காணப்படும் க்ளுகோஸ் , இரசாயன செயல்பாடு மூலமாக உடலால் உறிஞ்சப்படுகிறது. எனவே திராட்சை உட்கொண்டவுடன் நீங்கள் ஆற்றல் மிக்கவராக உணர்கிறீர்கள். காலையில் வெறும் வயிற்றில் திராட்சை உட்கொள்வதால் அதிக நன்மைகள் கிடைக்கின்றன. திராட்சை பழம் உட்கொள்வதால் இதயமும் ஆரோக்கியமாக விளங்குகிறது. நீரிழிவு போல், இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளும் தவிர்க்கப்படுகிறது. நீரிழிவுடன் இதய நோய் மற்றும் இரத்த அழுத்த பாதிப்பு இணையும்போது அபாயம் அதிகரிக்கிறது.

திராட்சையின் மற்ற நன்மைகள்
* திராட்சை பழம் மூளைக்கு அதிக நன்மையைத் தருகிறது. பொதுவாக பெற்றோர்கள் தேர்வு காலத்தில் குழந்தைகளுக்கு திராட்சை சாப்பிடக் கொடுப்பதால் அவர்கள் மூளை புத்துணர்ச்சி பெற்று, கவனத்திறன் வலிமையடைகிறது.
* புற்றுநோய் போன்ற பாதிப்புகளை எதிர்த்து போராடும் சக்தி திராட்சைக்கு உள்ளது. எனவே புற்றுநோயைக் கட்டுப்படுத்த திராட்சை உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.
* திராட்சை பழம் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
* ஒற்றைத்தலைவலிக்கு திராட்சை சாறு மிகவும் நன்மை அளிக்கிறது.
* சிறுநீரக பாதிப்பிற்கு திராட்சை சாறு பருகுவது நல்லது. சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்ற திராட்சை உதவுகிறது.



Click it and Unblock the Notifications