For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கு விறைப்பு பிரச்சினையும், ஆண்மைகுறைவும் ஏற்பட இந்த குறைபடுதான் காரணம் தெரியுமா?

நமது உடலில் உள்ள ஹார்மோன்கள் எப்பொழுதும் தனியாக செயல்படுவதில்லை. ஹார்மோன்கள் அனைத்தும் உடலின் அனைத்து பாகங்களுடனும் இணைந்துள்ளவை.

|

நமது உடலில் உள்ள ஹார்மோன்கள் எப்பொழுதும் தனியாக செயல்படுவதில்லை. ஹார்மோன்கள் அனைத்தும் உடலின் அனைத்து பாகங்களுடனும் இணைந்துள்ளவை. இந்த ஹார்மோன்களின் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து பாகங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். பாலியல் ஹார்மோன்கள், சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவு இவை மூன்றும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டவை.

Does Diabetes Affect Men Sexual Hormones?

இதில் ஒன்றில் மாற்றம் ஏற்பட்டாலும் அது மற்ற பாகங்களை பாதிக்கக்கூடும். இது ஆண், பெண் இருவருக்குமே அவர்களின் பாலியல் ஆரோக்கியத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். சர்க்கரை நோய் ஆண்மைக்குறைவை ஏற்படுத்துமா என்ற கேள்வி இன்றைய இளைஞர்கள் பலருக்கும் இருக்கும் ஒன்றுதான். இந்த அந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

இன்சுலினின் அளவுகளில் மாற்றம் ஏற்படும் போது அது ஆண், பெண் இருவருக்குமே வித்தியாசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். சர்க்கரை அளவில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும் போது அது பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் மற்றும் முடிஉதிர்வு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆண்களை பொறுத்த வரையில் இது ஆண்களுக்கு விறைப்பு பிரச்சினையையும், மார்பத்தின் அளவையும் அதிகரிக்கும். சர்க்கரை நோய் மட்டுமின்றி வேறு சில பழக்கவழக்கங்களும் பாலியல் ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

லெப்டின் எதிர்ப்பை உருவாக்கும்

லெப்டின் எதிர்ப்பை உருவாக்கும்

லெப்டின் உங்கள் பசியின்மையுடன் தொடர்புடையது. இதுதான் உங்கள் மூளைக்கு சாப்பிட்டது போதும் என்ற உணர்வை ஏற்படுத்துவது. உங்கள் உடலில் அதிகளவு சர்க்கரை இருக்கும்போது அது லெப்டின் ஹார்மோனின் சுரப்பை கட்டுப்படுத்தும். இதனால் உங்கள் லெப்டின் சுரப்பு குறைவாக இருக்கும்போது உங்கள் மூளை உங்களுக்கு உணவு போதுமென்ற உணர்வை ஏற்படுத்தாது. இந்த லெப்டின் தடுப்பும் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். இன்சுலின் எதிர்ப்பு, லெப்டின் எதிர்ப்பு மற்றும் குறைவான டெஸ்டெஸ்ட்ரோன் போன்ற பிரச்சினைகள் இருந்தால் அது பாலியல் செயல்திறனை பாதிக்கும்.

ஹார்மோன் வளர்ச்சி உற்பத்தியை குறைக்கும்

ஹார்மோன் வளர்ச்சி உற்பத்தியை குறைக்கும்

வளர்ந்த ஹார்மோன்கள்(GH) என்பது உங்கள் இளமையின் ஊற்று ஆகும், இது பெரும்பாலும் நீங்கள் தூங்கும் நேரத்தில் உற்பத்தியாவதாகும். பிட்யூட்டரி சுரப்பியில் உற்பத்தி செய்யப்படும் இந்த ஹார்மோன் உங்களின் தசைகளின் வளர்ச்சிக்கும், லிபிடோவை சீராக பராமரிக்கவும் உதவும். இந்த GH குறையும்போது அது தசைகளின் பலவீனம், அடிவயிற்றில் பருமன், டைப் 2 சர்க்கரை நோய், ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். ஆராய்ச்சியாளர்கள் வளர்ந்த ஹார்மோன்களுக்கும், பாலியல் செயல்திறனுக்கும் நேரடி தொடர்பு உள்ளது என்று கண்டறிந்துள்ளார்கள்.

சர்க்கரை உங்களை சோர்வாக்கும்

சர்க்கரை உங்களை சோர்வாக்கும்

சர்க்கரை மற்றும் மற்ற உயர்-க்ளைசெமிக் கார்போஹைட்ரேட்டுகள் உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். இன்சுலின் பொதுவாக உங்கள் இரத்த சர்க்கரை மிகக் குறைவாக இழுத்து பசி மற்றும் சோர்வுகளுக்கு வழிவகுக்கிறது. சர்க்கரை பல வழிகளில் சோர்வாக உணரவைக்கும்.

MOST READ: நல்லவர் போல நடிச்சு ஏமாத்துறதுல இந்த ராசிக்காரர மிஞ்ச யாராலும் முடியாது...உங்கள் ராசிதானா அது?

சர்க்கரை அழுத்தம் மற்றும் பதட்டத்தை உண்டாக்கும்

சர்க்கரை அழுத்தம் மற்றும் பதட்டத்தை உண்டாக்கும்

அதிகளவு சர்க்கரை உங்கள் உடலில் பல சுவாரசியமான மாற்றங்களை உண்டாக்கும், குறிப்பாக சோர்வு மற்றும் உங்கள் பசியில் இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். உங்களுக்கு பிடித்த கேக்கை சாப்பிட்டால் அப்பொழுது உங்களுக்கு நிறைவாக தோன்றும், ஆனால் அடுத்த அரைமணி நேரத்தில் மீண்டும் பசிக்க தொடங்கும். இதற்கு காரணம் உங்கள் சர்க்கரை உங்களின் மூளையில் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும். மேலும் இதனால் மனஅழுத்தம், பதட்டம், மாறும் மனநிலை போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். சர்க்கரை உங்கள் மகிழ்ச்சி ஹார்மோனான கார்டிசோல் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

டெஸ்டெஸ்ட்ரோனின் அளவை குறைக்கும்

டெஸ்டெஸ்ட்ரோனின் அளவை குறைக்கும்

இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது அது டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோனின் அளவை கீழ்நிலைக்கு கொண்டுவரும். ஆண்களின் பாலியல் வாழ்வை சீராக வைத்திருக்க இது மிகவும் அவசியமான ஹார்மோன் ஆகும். டெஸ்டெஸ்ட்ரோன் அளவு குறைவாக இருக்கும் போது அது தசைகளின் பலவீனம், கொழுப்பு அதிகரித்தல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். இந்த அதிக கொழுப்புகள் ஈஸ்ட்ரோஜனின் உற்பத்தியை அதிகரித்து ஆண்களின் பாலியல் செயல்திறனை குறைக்கும் மேலும் விறைப்பு பிரச்சினையையும் உண்டாக்கும்.

பாலியல் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துதல்

பாலியல் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துதல்

உங்களுக்கு பாலியல் ஹார்மோன்கள் சமநிலையின்மை இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். ஆண்கள் அவர்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை சோதிக்க வேண்டும். பெண்கள் பெலிக்கிள் ஹார்மோன், லியூடினைனிங் ஹார்மோன், டெஹைட்ரோபியாண்ட்ரோஸ்டிரோன் சல்பேட், ஈஸ்ட்ராடியால், புரோஜெஸ்ட்டிரோன், பாலின ஹார்மோன் பிணைப்பு குளோபுலின் ஆகியவற்றை சோதிக்க வேண்டும். இந்த ஹார்மோன்களில் சமநிலையை ஏற்படுத்த ஆரோக்கிய உணவுதான் முதல் தேவை. இயற்கை உணவுகள், க்ளெசமிக் குறைவாக உள்ள உணவுகள், பழங்கள், பச்சை காய்கறிகள் புரோட்டின்கள், தானியங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளவும். சில சிகிச்சைகள் மூலமாகவும் இதை சரிசெய்யலாம்.

MOST READ: மாரடைப்பு வர்றதுலயும் ஆண் - பெண் வித்தியாசம் இருக்காம்... எப்படி வரும் என்ன அறிகுறிகள்னு தெரிஞ்சிக்க

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does Diabetes Affect Men Sexual Hormones?

Men with blood sugar imbalances have trouble getting or maintaining erections and often get “man boobs.”
Desktop Bottom Promotion