Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
இந்த பழத்தின் விதைகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்குமாம்..! அது எந்த பழம்..?
நாவல் பழத்தின் பெருமையை சொல்லி மாளாது. இன்று பெரும்பாலான மக்கள் அவதிப்படும் ஒரு கொடிய நோய்க்கு தீர்வாக இந்த பழம் இருக்கின்றது என்றால் அது எவ்வளவு அற்புதமான விஷயம் என எண்ணி பாருங்கள்.
ஒவ்வொரு நோய்களுக்கும் ஒவ்வொரு விதமான தீர்வை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து கொண்டே இருக்கின்றனர். அன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சி என்பது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இருப்பினும் அப்போதும் மக்கள் இதை விட ஆரோக்கியமாகத்தான் இருந்தனர். காரணம், அவர்கள் எடுத்து கொண்ட உணவும், இயற்கையோடு இணைந்து அவர்கள் மேற்கொண்ட வாழ்வும்தான். இயற்கை என்பதை, ஒவ்வொரு கனி முதல் காய் வரை அவர்கள் நன்கு பயன்படுத்தினர். அந்த வகையில் அதிக மருத்துவ குணம் கொண்ட இந்த நாவல் பழமும் அடங்கும்.

நாவல் பழத்தின் பெருமையை சொல்லி மாளாது. இன்று பெரும்பாலான மக்கள் அவதிப்படும் ஒரு கொடிய நோய்க்கு தீர்வாக இந்த பழம் இருக்கின்றது என்றால் அது எவ்வளவு அற்புதமான விஷயம் என எண்ணி பாருங்கள். இந்த பதிவில் நாவல் விதைகள் எவ்வாறு சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது என்பதை பற்றி முழுமையாக அறிவோம்.

அற்புத நாவல் பழம்..!
இன்று பெரும்பாலான மக்கள் நம் பண்டைய உணவு முறையை மறந்தே போய்விட்டனர். இதன் விளைவு எண்ணற்ற நோய்களின் தாக்கத்தால் இடர்படுதலே. இதே போன்று சில பழங்களின் வகைகளையும் நாம் மறந்து போய்விட்டோம். அதில் நாவல் பழம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். நாவல் மிகவும் சத்துமிக்க பழமாகும். அதிக மருத்துவ குணங்களை இந்த பழங்கள் தனக்குள்ளே ஒளித்து வைத்துள்ளன.

நாவலின் எண்ணற்ற சத்துக்கள்...
ஒரு சிறிய பழத்துக்குள் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றதா..! என்பதே மிக ஆச்சரியத்திற்குரிய ஒன்று. 100 g அளவிலான பழத்தில் உள்ள ஊட்டசத்துக்கள்...
கால்சியம் 15 mg
இரும்பு சத்து 1.41 mg
மெக்னீசியம் 35 mg
பாஸ்பரஸ் 15 mg
சோடியம் 26.2 mg
வைட்டமின் சி 18 mg
கரோட்டின் 48 ug
நீர்சத்து 84.75 gm

மருத்துவ விதை..!
ஒரு சில பழங்களின் விதைகளுக்குள் மட்டுமே பல நன்மைகள் இருக்கும். அந்த வகையில் நாவல் விதை சற்றே உயர்ந்தது. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றது. பல ஆயுர்வேத மருத்துவத்திலும் இந்த விதையின் பெருமையை பற்றி குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக இவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என்பதே முதன்மையான குறிப்பாகும்.

நீரிழிவும் நாவல் விதையும்...
இந்த நாவல் விதையில் jamboline மற்றும் jambosine என்ற மூல பொருட்கள் உள்ளன. இதுதான் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது. குறிப்பாக இது இன்சுலின் அளவை உயர்த்தி நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கிறது. நாவல் பழத்தில் எந்த அளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றதோ அதே அளவு இதன் விதைகளிலும் காணப்படுகின்றது.

சர்வதேச ஆராய்ச்சியின் முடிவு...
எந்த ஒரு பொருளை பற்றிய குறிப்பையும் மருத்துவ ஆராய்ச்சியே முடிவு செய்யும். அந்த வகையில் இந்த நாவல் விதைகளில் பல வகையான மருத்துவ குறிப்புகள் இருப்பதாக Asian Pacific Journal of Tropical Biomedicine என்ற ஆய்வின் முடிவுகள் சொல்கின்றன. அதாவது, நாவல் விதைகளில் hyperglycaemia வை குணப்படுத்தும் தன்மை இருப்பதாக கூறுகின்றனர்.

நாவலும் ஆயுர்வேதமும்...
எவ்வாறு அயல்நாட்டு மருத்துவத்தில் நாவல் விதையின் பெருமையை குறிப்பிட்டுள்ளனரோ அதே போன்று ஆயர்வேதத்திலும் பயன்படுத்து கின்றனர். இவை ஆயர்வேத மருத்துவத்தில் பிரதான இடத்தை பிடித்துள்ளது. இவை சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதோடு சிறுநீர் பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது.

ஆரோக்கியமான இதயத்திற்கு...
பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த இதய நோயும் கூடவே சேர்ந்து வருகின்றது. இது மிகவும் கடினமான நிலையாக அவர்களுக்கு அமைந்து விடுகின்றது. இந்த நாவல் பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த மருந்தாகும். உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது.

வயிற்று புண்களை குணப்படுத்த...
சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் பசி எடுக்காமல் இருந்தால் அவர்களுக்கு நாவல் பெரிதும் உதவும். ஜீரண கோளாறுகள், வயிற்று புண், வயிற்று எரிச்சல் போன்றவற்றை இது சரி செய்யும். நாவல் இலைகளை நன்கு கழுவி அவற்றை மென்று சாப்பிட்டால் அல்சர் குணமடையும்.

ஹீமோகுளோபினை உயர்த்த...
இவற்றில் உள்ள அதிக படியான இரும்புசத்து மற்றும் வைட்டமின் சி ரத்தத்தின் சிவப்பு அணுக்களை உயர்த்துகின்றது. இது ஹீமோகுளோபின் அளவை உயர்த்த வழி செய்கிறது. அத்துடன் ரத்தத்தை சுத்திகரிக்கவும் இந்த நாவல் பெரிதும் உதவுகிறது. மாதவிடாய் கோளாறுகள் உள்ள பெண்களுக்கு மிக சிறந்த முறையில் இது பயன்படும்.

எவ்வாறு இதனை தயாரிப்பது..? #1
முதலில் நாவல் பழத்தை உரித்து அவற்றின் உள் இருக்கும் விதையை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பின் விதைகளை சுத்தமாக கழுவி அவற்றை வெயிலில் 4 நாட்கள் உலர விட வேண்டும். அவை நன்கு காய்ந்த பிறகே வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

செய்முறை #2
அடுத்து அந்த தோலை உடைத்து எடுத்தால், பச்சை நிறத்தில் சிறிய கோட்டை அதனுள் இருக்கும். இதனை மறுபடியும் 2 நாட்கள் வெயிலில் உலர விட்டு எடுத்து, நன்றாக அரைத்து கொள்ளவும். பின் இவற்றை சலித்து கொண்டு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த பொடியை நீரில் 1 டீஸ்பூன் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வர தொடங்கும்.

எச்சரிக்கை...
- இந்த நாவல் விதை எடுத்து கொள்ளும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். பொதுவாக எந்த ஒரு உணவையும் புதிதாக நீங்கள் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
- மரபணு மாற்றம் பெற்ற நாவல் பழத்தை கட்டாயம் தவிர்த்தல் வேண்டும்.
- அத்துடன் கர்ப்பிணிகள் இந்த நாவலை சாப்பிடுதல் உகந்தது அல்ல.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications