Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
இரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை அளவைக் குறைக்கும் அற்புத மருந்து!
இரத்தத்தில் இருக்கும் அதிகளவு சர்க்கரையைக் குறைக்க மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களால் ஒரு அற்புத பானம் தயாரித்து பருக, இரத்த சர்க்கரை அளவு விரைவில் குறையும்.
தற்போது உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் சில உடல்நல பிரச்சனைகள் தான் காரணம். இப்போது இரத்த சர்க்கரை அளவு அதிகம் இருந்தால் தென்படும் அறிகுறிகள் மற்றும் அதற்கான ஓர் இயற்கை மருந்து குறித்து காண்போம்.

அறிகுறிகள்
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், வாய் வறட்சி, வயிற்று பிரச்சனைகள், எப்போதும் தாகம், சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு, பாலியல் உறவில் நாட்டமின்மை, கவனச் சிதறல், நரம்பு பிரச்சனைகள், எந்நேரமும் பசியுணர்வுடன் இருப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரவில் சிறுநீர் கழிப்பது, நாள்பட்ட சோர்வு, மங்கலான பார்வை, அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்:
தண்ணீர் - 1 லிட்டர்
கிராம்பு - 60 கிராம்
பட்டை - 4 துண்டுகள்

தயாரிக்கும் முறை:
நீரில் கிராம்பையும், பட்டையையும் போட்டு கலந்து, ஃப்ரிட்ஜில் 5 நாட்கள் ஊற வைக்க வேண்டும். 5 நாட்கள் கழித்த பின் மருந்து தயாராகிவிட்டது என்று அர்த்தம்.
Image Courtesy: lovepastatoolbelt

எப்போது பருக வேண்டும்?
இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் 100 மிலி குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வர, உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்பட்டிருப்பதுடன், இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதையும் காணலாம்.



Click it and Unblock the Notifications