Latest Updates
-
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சுவர்ணா அரிசி!

மேலும் இந்த ஆய்வு நீரிழிவு ஏற்படுவதற்கு காரணமான கிளைசீமிக் இண்டெக்சை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிகமாக அரிசி உணவை உண்பவருக்கு அதிகமாக நீரிழிவு ஏற்படுகின்றது. ஏனெனில் அரிசியில் கிளைசீமிக் இண்டெக்ஸ் அதிகமாக இருக்கிறது. ஆகவே அவர்கள் அரிசியில் ஆய்வு செய்தனர். அதற்காக உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விளையும் அரிசிகளின் மீது ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் மொத்தம் 235 அரிசிகளின் மீது ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இந்திய அரிசி வகையான சுவர்ணா, ஆஸ்திரேலிய அரிசி வகையான டூங்கரா மற்றும் பாஸ்மதி, பிலிப்பைன்ஸ் அரிசி வகையான மெலிசா பிட்ஜ்ஜெரால்டு உள்ளிட்ட அரிசி வகைகள் இந்த ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வில் இந்திய அரிசி வகையான சுவர்ணாவில் குறைவான கிளைசீமிக் இண்டெக்ஸ் இருக்கிறது என்றும், மற்ற ஆஸ்திரேலிய அரிசி வகையான டூங்கரா மற்றும் பாஸ்மதி, பிலிப்பைன்ஸ் அரிசி வகையான மெலிசா பிட்ஜ்ஜெரால்டு ஆகியவற்றில் சுவர்ணாவை விட அதிகமாகவும் கிளைசீமிக் இண்டெக்ஸ் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த ஆய்வில், அதிகமான அளவு கிளைசீமிக் இண்டெக்ஸ் இருக்கும் அரிசியை உண்பதால், எளிதாக விரைவில் செரித்து, அதனை உடலானது ஒரேநேரத்தில் முற்றிலும உறிஞ்சி, இறுதியில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்குகிறது. இதனாலேயே அரிசியை உண்பதால் நீரிழிவு ஏற்படுகின்றது என்றும், ஆனால் குறைவான அளவு கிளைசீமிக் இண்டெக்ஸ் இருக்கும் அரிசியை உண்பதால், செரிமானத்தின் அளவு குறைவாக இருப்பதோடு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது மெதுவாக, தேவையான அளவு உடலில் ஏறும், ஆகவே அதனால் நீரிழிவு ஏற்படுவது கட்டுப்படும் என்றும் கூறுகின்றனர். மேலும் உலகளவில் சாப்பிடுவதற்கு சத்தான அரிசியாக இந்திய அரிசியான சுவர்ணாவையே அந்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஆகவே நீரிழிவு நோய் இருப்பவர்கள், அரிசி உணவை உண்ணாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. தினமும் அரிசி உணவானது உடலுக்கு கொஞ்சமாவது வேண்டும். ஆகவே அவர்கள் இந்த சுவர்ணா அரிசியை வாங்கி உண்டால், சர்க்கரை நோயானது கட்டுப்படுவதோடு, ஆரோக்கியமாகவும் வாழலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
