Latest Updates
-
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?
ஆண்களே! இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்குன்னு அர்த்தம்..
Diabetes Symptoms In Men: சர்க்கரை நோய் என்பது ஒரு நாள்பட்ட கோளாறு. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும் போது அல்லது இன்சுலின் போதுமான அளவு உற்பத்தி செய்யாமல் இருந்தால் ஏற்படும். ஒருவரது இரத்தத்தில் சர்க்கரை அளவுக்கு அதிகமானால், அது உடலில் பலவிதமான பிரச்சனைகளை வரத் தூண்டும்.
சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை டைப்-1 மற்றும் டைப்-2. இதில் டைப்-1 சர்க்கரை நோயின் அறிகுறிகள் கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரப்பதை நிறுத்திய உடனே தெரியும். ஆனால் டைப்-2 சர்க்கரை நோயில் உடலில் இன்சுலின் உணர்திறன் உருவாகிறது. இதனால் இந்த வகை சர்க்கரை நோயின் அறிகுறிகள் தெரிய நேரம் எடுக்கும்.

சர்க்கரை நோயின் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதுவும் ஆண்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அவர்களிடம் குறிப்பிட்ட அறிகுறிகள் தெரியும். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
1. ஆண் இனப்பெருக்க மண்டலம் தொடர்பான பிரச்சனைகள்
ஆண்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அவர்கள் விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே திடீரென்று விறைப்புத்தன்மை பிரச்சனையை ஆண்கள் சந்தித்தால், அவர்களுக்கு சர்க்கரை நோய் முற்றிக் கொண்டிருக்கிறரு என்று அர்த்தம். எப்படியெனில், இரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும் போது, அது இனப்பெருக்க மண்டலத்தில் உள்ள நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தி, விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்க வைக்கும்.
2. டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவு
சர்க்கரை நோயானது ஆண்களின் ஹார்மோன்களில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் இது டெஸ்டோஸ்டிரோன் அளவை பாதித்து, விந்தணு எண்ணிக்கை, தரம் அல்லது ஒட்டுமொத்த கருவளத்தையும் பாதிக்கிறது. மேலும் குறைவான டெஸ்டோஸ்டிரோன், உடலின் ஆற்றலை குறைப்பதோடு, விறைப்புத்தன்மை கோளாறு அல்லது கருவுறுதல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
3. கருவுறுதல் பிரச்சனைகள்
சர்க்கரை நோயானது ஒரு ஆணின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பலவாறு பாதிக்கும். அதில் விறைப்புத்தன்மை கோளாறு, குறைவான விந்தணு எண்ணிக்கை, விந்தணுக்களின் தரம் குறைவது, குறைவான டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் போன்றவை அடங்கும்.
4. தசை இழப்பு
சர்க்கரை நோயானது ஆண்களிடையே தசை இழப்பு ஏற்பட வழிவகுக்கும். ஏனென்றால், இந்நிலையில் உடலால் சர்க்கரையை ஆற்றல் உற்பத்திக்கு பயன்படுத்த முடியாது. அதற்கு பதிலாக உடலில் உள்ள தசைகளை உடைத்து உடல் ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக தசை இழப்பு ஏற்படுகிறது.
5. எடை இழப்பு
ஆண்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அது உடல் தசைகளை இழக்கச் செய்வதோடு, எடை இழப்புக்கும் வழிவகுக்கும். எனவே எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளாமல் உடல் எடை குறைவதை நீங்கள் உணர்ந்தால், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்க நிறைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி இரத்த சர்க்கரை பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications