நீங்க மதிய உணவு இப்படி சாப்பிடுறீங்களா? அப்ப உங்க இரத்த சர்க்கரை அளவு எக்கச்சக்கமா அதிகரிக்குமாம்!

Diabetes In Tamil: மாறி வரும் வாழ்க்கை முறை காரணிகளால் சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நாள்பட்ட நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சர்க்கரை நோய், வளர்சிதை மாற்றக் கோளாறானது, தற்போது 100 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களை அதன் இறுக்கமான பிடியில் கொண்டுள்ளது.

உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது, பரம்பரை வரலாறு ஆகிய காரணிகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Diabetes: Poor Lunch Habits Which Likely Increase Blood Sugar Level In Tamil

சமீபத்திய ஆய்வின்படி, 136 மில்லியனுக்கு அருகில் உள்ள இந்திய மக்கள் தொகையில் 15.3% பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளதாக அதிர்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன. உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

காலை உணவை தவிர்க்கக்கூடாது என மருத்துவர்கள் நமக்கு பரிந்துரைக்கிறார்கள். அன்றைய நாளின் மிக முக்கியமான உணவாக காலை உணவு உள்ளது. காலை உணவு மட்டுமல்ல, மதிய உணவும் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மோசமான மதிய உணவுப் பழக்கம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். அவற்றை தடுப்பது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

மதிய உணவு நேரம் முக்கியமானது

நீரிழிவு நோயின் பல ஆபத்து காரணிகளில், மிகவும் பொதுவான ஒன்று மற்றும் நிச்சயமாக மாறக்கூடிய ஒன்று உணவுமுறை. நாளின் மிகப்பெரிய உணவாகக் கருதப்படும் மதிய உணவு நேரத்தில் மக்கள் செய்யும் பொதுவான தவறுகளைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காணலாம். நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

ஆதலால், நீங்கள் எடுத்துக்கொள்ளும் மதிய உணவைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் இது நாளின் மிகப்பெரிய உணவாகக் கருதப்படுகிறது மற்றும் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் திறன் கொண்டது.

அன்றைய நாளின் முதல் உணவாக மதிய உணவு இருப்பது

காலை உணவைத் தவறவிடுவது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் பெரிய ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தாமதமாக மதிய உணவு சாப்பிடும் போது, உங்கள் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.

காலை உணவை உட்கொள்வதன் மூலம், உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நல்ல மற்றும் ஆரோக்கியமான உணவுடன் ஒரு நாளைத் தொடங்குவது நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் அதனால் ஏற்படும் சிக்கல்களை குறைக்கிறது.

ஊட்டச்சத்து உணவில் கவனம் செலுத்துங்கள்

பலர் மதிய உணவு நேரத்தில் தங்கள் வயிற்றை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்கள் உட்கொள்ளும் உணவின் ஊட்டச்சத்தை பொருட்படுத்துவதில்லை. இது சர்க்கரை நோயை அதிகரிக்கும் மற்றொரு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்.

ஆரோக்கியமான உணவைத் திட்டமிடுங்கள் மற்றும் கார்ப்ஸ் முதல் புரதம் மற்றும் கொழுப்பு வரை அனைத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மதிய உணவு நேரத்தில் சரிவிகித உணவை உண்ணுங்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்

இந்த நாட்களில், உணவு தயாரிப்பதை விட சூப்பர் மார்க்கெட்டுகளில் முன்பே தயாரிக்கப்பட்ட சப்பாத்தி, பரோட்டா, சாண்ட்விச்களை வாங்குவது எளிது. இந்த பதப்படுத்தப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட உணவுகள் உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்க உதவும்.

ஆனால் நீண்ட காலத்திற்கு, அவை உடலில் தீங்கு விளைவிக்கும் மற்றும் அதற்கு பல காரணங்கள் உள்ளன. தொகுக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உணவின் சுவையை மேம்படுத்த உப்பு நிறைய பயன்படுத்தப்படுகிறது. அதேபோல உணவின் அடுக்கு ஆயுளை அதிகரிக்க பாதுகாப்புகளை பயன்படுத்துவது நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு பங்களிக்கிறது.

சுவையான பானங்களை உட்கொள்வது

மதிய உணவுக்கு முன் அல்லது பின் சுவையான பானங்களை உட்கொள்வது நல்லதல்ல. உணவுடன் கார்பனேட்டட், இனிப்பு, சுவையூட்டப்பட்ட பானங்களை குடிப்பது இந்த நாட்களில் பொதுவான நடைமுறையாகும். ஆனால், இது ஆரோக்கியமானது அல்ல. உணவுக்கு பின் பானங்கள் அருந்துவதை ஏன் நிறுத்த வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

முதலில், இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இரண்டாவதாக, இவை வெற்று கலோரிகளை உங்கள் உடலில் சேர்க்கிறது மற்றும் ஊட்டச்சத்து மதிப்புகள் அதில் இல்லை. மூன்றாவதாக, அவை பசியின்மையைக் குறைப்பதோடு, நீங்கள் சாப்பிடக்கூடிய சத்தான உணவுகளை சாப்பிடுவதைத் தடுக்கின்றன.

நடைப்பயிற்சி

ஒவ்வொருவரும் மதிய உணவுக்குப் பிறகு உடனடியாக உங்கள் மேசைக்கு சென்று வேலையை பார்க்கிறீர்கள் அல்லது மதிய உணவு இடைவெளியை செல்போனில் செலவிடுகிறீர்கள். இந்நிலையில், மதிய வேளையில் சிறிது நேரத்தை சரியாக பய்னபடுத்துங்கள். உணவிற்குப் பிறகு அலுவலக கட்டிடத்தின் வளாகத்திற்குள் அல்லது வெளியில் 10 நிமிட நடைப்பயிற்சி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, July 19, 2023, 17:45 [IST]
Desktop Bottom Promotion