Latest Updates
-
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிடணும்? எவ்வளவு சாப்பிடணும்?
Diabetes In Tamil: உலகளவில் சர்க்கரை நோயால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள். தரவுகளின் படி, உலகளவில் சர்க்கரை நோயாளிகளை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் ஒரு நிலையாகும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவைப் பராமரிப்பது என்பது சவாலான காரியம்.

ஏனெனில் இரத்த சர்க்கரை அளவு வரம்புகளை விட மிகவும் குறைந்து போதுனால், அது வலிப்பு மற்றும் நரம்பு மண்டலத்தில் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே இந்த நிலையைத் தவிர்க்க சர்க்கரை நோயாளிகள் நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க, எத்தனை முறை சாப்பிட வேண்டும் என்பதை சரியாக திட்டமிட வேண்டும்.
பொதுவாக ஒருவரது உடலுறுப்புக்கள் சீராக இயங்கவும், உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்கவும், ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டுமென கூறுவார்கள். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வெறும் மூன்று வேளை உணவு போதுமானதாக இருக்காது.
சர்க்கரை நோயாளிகள் எத்தனை முறை சாப்பிட வேண்டும்?
டைப்-2 சர்க்கரை நோயைக் கொண்டவர்கள் தங்கள் இரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, கொஞ்சம் கொஞ்சமாக கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் குளுக்கோஸை எடுக்க வேண்டும். அதாவது மூன்று வேளையாக சாப்பிடுவதற்கு பதிலாக, 4-5 வேளையாக கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். ஒரே வேளையில் அதிகளவில் உணவுகளை உட்கொண்டால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்கக்கூடும்.
இதுக்குறித்த ஆய்வு கூறுவது என்ன?
சர்க்கரை நோய் மற்றும் மெட்டபாலிசம் என்னும் இதழில் 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆய்வின் படி, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக உணவுகளை உட்கொள்வதே சிறந்தது என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் முன்கூட்டிய சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 47 பேரைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இதில் பங்கேற்றவர்களை மூன்று குழுவாக பிரித்தனர். இதில் 2 குழுக்களில் முன்கூட்டிய சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும், மூன்றாவது குழுவின் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இருந்தனர்.
இந்த ஒவ்வொரு குழுவில் உள்ளவர்களையும் 12 வாரங்களுக்கு உடல் எடையைப் பராமரிக்கும் டயட்டை பின்பற்ற வைத்தனர். அதில் அவர்கள் ஒரு நாளைக்கு 3 அல்லது 6 முறைக்கு மேல் உணவுகளை உட்கொள்ளலாம். 12 வாரங்கள் கழித்து அவர்களின் உணவுப் பழக்கம் மாற்றப்பட்டது. 24 ஆவது வாரங்களின் முடிவில், குறைவான அளவில் அதிக வேளை உணவு உட்கொண்டவர்களின் இரத்த சர்க்கரை அளவு எளிதில் நிர்வகிக்க முடிந்தது தெரிய வந்தது.
குறைவான அளவில் அதிக வேளை உணவுகளை உண்பதால் பெறும் நன்மைகளும், தீமைகளும்...
குறைவான அளவில் உணவுகளை உட்கொள்ளும் போது, இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிப்பது தடுக்கப்படுவதோடு, இரத்த சர்க்கரை அளவு சமநிலையில் பராமரிக்கப்படுகிறது. மேலும் குறைவான அளவிலான உணவுகளை சீரான இடைவெளியில் உட்கொள்ளும் போது, நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதான நாட்டம் தடுக்கப்படும்.
ஆனால் நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவரானால், இப்படி குறைவான அளவிலான உணவுகளை அடிக்கடி உண்பது சிறந்ததாக இருக்காது. இப்படி சாப்பிடுவதன் மூலம், உடலில் கலோரிகள் எளிதில் அதிகரிக்கலாம். எனவே இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











