Latest Updates
-
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா?
Diabetes: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழம் சாப்பிடலாம்-ன்னு தெரியுமா?
Diabetes: சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோய் என்பது ஒரு நோயல்ல ஒரு கோளாறு ஆகும். உடலில் இன்சுலின் என்னும் ஹார்மோன் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் போது, இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால், சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதோடு தினமும் தவறாமல் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இப்படி செய்யும் போது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கலாம்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் சர்க்கரை, கிளைசீமிக் இன்டெக்ஸ், கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக பழங்களை சாப்பிடுவதாக இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில பழங்கள் தித்திப்பாக இருப்பதோடு, கிளைசீமிக் இன்டெக்ஸை அதிகம் கொண்டுள்ளன.
அப்படி சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்று கூறப்படும் ஒரு பழம் தான் வாழைப்பழம். உண்மையிலேயே வாழைப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாதா என்றால் அது தான் இல்லை. சர்க்கரை நோயாளிகளும் வாழைப்பழத்தை சாப்பிடலாம். அப்படியானால் சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்பதை அறிய தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வாழைப்பழத்தின் நன்மைகள்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதய பிரச்சனைகள் வரும் அபாயத்தைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவி புரியும். இது தவிர, வாழைப்பபழமானது பக்கவாதம் வரும் அபாயத்தை குறைக்கிறது மற்றும் எலும்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் வாழைப்பழத்தில் ப்ரீபயோடிக்குகளுடன், ஏராளமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தை சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தை சாப்பிடலாம். ஆனால் அது அவற்றின் முதிர்ச்சியைப் பொறுத்தது. அதாவது, பச்சை அல்லது பழுக்காத வாழைப்பழம் ஒட்டுமொத்த மெட்டபாலிச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆனால் நன்கு கனிந்த வாழைப்பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு அவ்வளவு நல்லதல்ல.
கனியாத வாழைப்பழத்தில் அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்தும் குறைவான சர்க்கரையும் உள்ளது. இவை சிறுகுடலில் ஜீரணிப்பதை எதிர்க்கின்றன. இதனால் இவை பெருங்குடலில் நொதித்து, பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாகின்றன. ஆனால் நன்கு கனிந்த வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரித்துவிடும். எனவே சற்று கவனமாக இருங்கள்.
ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்?
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரை நோயாளிகளும் வாழைப்பழத்தை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும். வாழைப்பபழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிய அளவில் தீங்கை ஏற்படுத்திவிடாது.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 1-2 மீடியம் சைஸ் வாழைப்பழத்தை சாப்பிடலாம். இருப்பினும், இரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்களை அனுபவிப்பவர்கள், ஒரு உணவியல் நிபுணர் அல்லது மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே வாழைப்பழங்களை உட்கொள்ள வேண்டும்.
அதே சமயம், வாழைப்பழத்தினால் சந்திக்கும் மோசமான விளைவைத் தடுக்க சர்க்கரை நோயாளிகள் ஒருசிலவற்றை பின்பற்ற வேண்டும். அவை பின்வருமாறு:
* இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்க, சிறிய அளவிலான வாழைப்பழத்தை ஆசைக்காக சாப்பிடலாம்.
* அளவுக்கு அதிகமாக கனிந்த வாழைப்பழத்தை தவிர்த்து, லேசாக பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடவும்.
* வாழைப்பழம் சாப்பிடும் போது, மற்ற பழங்களை அதிகம் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள். இதனால் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்கலாம்.
* வாழைப்பழத்தை சாப்பிடும் போது நட்ஸ், யோகர்ட், சூரியகாந்தி விதைகள் அல்லது வேர்க்கடலை வெண்ணெய் போன்ற புரோட்டீன் உணவுகளுடன் எடுக்கும் போது, சர்க்கரையை உறிஞ்சும் திறன் தாமதப்படுத்தப்படும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications