Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
பெங்களூருவில் குழந்தைகளிடம் பரவும் டெங்கு போன்ற காய்ச்சல்.. குழந்தைகளை பாதுகாக்க இத ஃபாலோ பண்ணுங்க..
Dengue-Like Fever Spreading Among Kids In Bangalore: தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் பரவிக் கொண்டிருப்பதை அடுத்து, தற்போது பெங்களூருவில் டெங்கு போன்ற காய்ச்சல் (Dengue-Like Illness) குழந்தைகளிடம் பரவிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளிடம் பரவும் காய்ச்சல் டெங்குவாக இருக்குமோ என்று பரிசோதனை செய்து பார்த்தால், சோதனையில் டெங்குவிற்கு எதிர்மறை முடிவு வருவதால், இது பெற்றோர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. என்ன தான் சோதனையில் டெங்குவாக இல்லாவிட்டாலும், அதன் அறிகுறிகளானது அப்படியே டெங்கு போன்று அதிக காய்ச்சல், கடுமையான உடல் வலி, மிகுந்த உடல் சோர்வு போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.

கர்நாடகாவில் மட்டும் இந்த ஆண்டு இதுவரை சுமார் 559 குழந்தைகளுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 4 குழந்தைகளுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பெங்களூருவைச் சேர்ந்த குழந்தை மருத்துவர் ஒருவர் இதுக்குறித்து கூறுகையில், வாரந்தோறும் சுமார் 10-20 புதிய டெங்கு போன்ற காய்ச்சல் வழக்குகள் பதிவாகி வருகின்றன.
அதுவும் கடுமையான நீரிழப்பு, அதிகமான காய்ச்சல், வாந்தி போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகளை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர். சில சமயங்களில் கடுமையான சுவாசப் பிரச்சனை, வயிற்று வலி, மனநிலை மாற்றங்கள் போன்ற கடுமையான டெங்கு அறிகுறிகளும் தென்படுகின்றன. எனவே இப்படியான வழக்குகளை கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.
ஏனெனில் என்ன தான் டெங்கு போன்ற காய்ச்சல் அறிகுறிகள் டெங்குவின் பல அறிகுறிகளை பிரதிபலித்தாலும், மற்ற வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் சிக்கன்குனியா, மலேரியா போன்றவற்றின் அறிகுறிகளையும் கொண்டுள்ளதால், இது நோயறிதலை தந்திரமானதாக்குகிற்து. இதன் விளைவாக சிகிச்சையை தாமதப்படுத்துகிறது மற்றும் சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
இப்படியான காய்ச்சலுக்கு முக்கிய காரணியாக கொசுக்கள் கருதப்படுகின்றன. அதுவும் டெங்குவை உண்டாக்கும் ஏடிஸ் இனங்கள் மூலம் பரவும் வைரஸ்கள் தான் இதன் அபாயத்தை அதிகரிக்கின்றன. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொசுக்களிடம் இருந்து முதலில் பாதுகாக்க வேண்டும். அதற்கு பின்வரும் சிலவற்றை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
1. கொசு விரட்டிகளை பயன்படுத்தவும்
குழந்தைகளை கொசுக்கள் கடிக்காமல் இருக்க கொசு விரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் தற்போது கொசுக்களை விரட்டுவதற்கு ரோல்-ஆன்கள் இருப்பதால், அவற்றை வாங்கி அவர்களின் ஆடைகளின் மேல் ஆங்காங்கு தடவி விடுங்கள். முக்கியமாக ஏடிஸ் கொசுக்கள் அதிகமாக கடிக்கும் நேரங்களான அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் தவறாமல் பயன்படுத்துங்கள்.
2. முழு கை, கால் ஆடைகள்
சருமம் வெளியே தெரியாத வகையில், கை மற்றும் கால்கள் முழுமையாக மறையும்படியான ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவிக்க வேண்டும். முக்கியமாக அடர் நிற ஆடைகளைத் தவிர்த்து, வெளிர் நிற ஆடைகளை அணிவித்து விடுங்கள்.
3. கொசு வலைகள் மற்றும் திரைகள்
கொசுக்கள் வீட்டிற்கு நுழையாமல் இருக்க, நுழைவாயில் மற்றும் ஜன்னல்களில் கொசு திரைகளை பயன்படுத்துங்கள். தூங்கும் போது கொசு வலைக்குள் தூங்குங்கள். இதன் மூலம் கொசுக்கள் கடிப்பதைத் தவிர்க்கலாம்.
4. தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்தவும்
நீர் தேங்கியிருந்தால், கொசுக்கள் அதிகமாக இனப்பெருக்கம் செய்யும். எனவே வீட்டைச் சுற்றி நீர் தேங்கி நிற்காமல் பார்த்க் கொள்ளுங்கள். மேலும் வீட்டில் திறந்த வாளியில் நீரை சேமித்து வைப்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இவை கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக மாறிவிடும்.
5. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும்
குழந்தைகளை கொசுக்கள் அதிகமாக கடிக்கக்கூடாதெனில், நமது சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும். அசுத்தமான இடங்களில் கொசுக்கள் அதிகம் இருக்கும் என்பதால், உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.
6. குழந்தைகளுக்கு கற்பிக்கவும்
குழந்தைகளுக்கு கொசுக்களால் ஏற்படும் ஆபத்து குறித்து சிறு வயதில் இருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும் எந்த பகுதியில் விளையாட வேண்டும், எங்கு விளையாடக்கூடாது என்பதையும் கற்பிக்க வேண்டும். இதன் மூலம், அவர்கள் அவர்களையே பாதுகாத்துக் கொள்வார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications