Latest Updates
-
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..! -
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க! -
ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
தினமும் சிறிது முருங்கை இலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
பட்டாணி சாதமும், கத்திரிக்காய் கிரேவியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்று ஒரே நாளில் உருவாகும் ஹன்ஸ், கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்!
Dengue: பெங்களூருவில் கிடுகிடுவென உயரும் டெங்கு: விரைவில் குணமாக எந்த மாதிரியான உணவை சாப்பிடணும்?
Dengue Cases Rise In Bangalore: மழைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், தென்னிந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவிதமான நோய்த்தொற்றுகள் பரவியவாறு உள்ளன. குறிப்பாக கர்நாடகாவை எடுத்துக் கொண்டால், அங்கு டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது.
அதுவும் பெங்களூருவில் மட்டும் சுமார் 3,000-க்கும் அதிகமான டெங்கு வழங்குகள் பதிவாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக கர்நாடகாவில் இந்த ஆண்டு மட்டும் 9,500-க்கும் அதிகமான டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 9 பேர் டெங்குவால் இறந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இவ்வளவு கொடிய டெங்கு காய்ச்சலானது ஏடிஸ் கொசுக்கள் மூலமாக பரவக்கூடியது. இந்த வகை கொசுக்கள் பகலில் தான் கடிக்கும். அதுவும் சூரிய உதயமாகி 2 மணிநேரம் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு சில மணிநேரம் இந்த வகை கொசுக்கள் சுறுசுறுப்பாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இந்த கொசுக்கள் கணுக்கால் மற்றும் முழங்கைகளில் தான் அதிகம் கடிக்கும்.
ஒருவருக்கு டெங்கு என்றால், அந்நபர் அதிக காய்ச்சலை சந்திப்பார். அதோடு தலைவலி, தசை வலி, மூட்டு வலி போன்றவற்றையும் அனுபவிப்பார். இந்த டெங்கு காய்ச்சல் ஒருவருக்கு தீவிரமான நிலையில் இருந்தால், அதை டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் என்று அழைப்பர். இந்த நிலையில் கடுமையான இரத்தப்போக்கு , உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில சமயங்களில் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.
டெங்கு காய்ச்சலுக்கு என்று எந்த பிரத்யேக சிகிச்சையும் இல்லை. அறிகுறிகளைப் பொறுத்து, அவற்றைக் கட்டுப்படுத்த சிகிச்சை வழங்கப்படும். எனவே மழைக்காலத்தில் காய்ச்சல் வந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து விரைவில் குணமாக எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை இப்போது காண்போம்.
1. பப்பாளி இலைச் சாறு
பப்பாளி பழத்தின் இலைச் சாறு டெங்கு காய்ச்சலுக்கு மிகவும் பிரபலமான ஒரு பானம். பப்பாளி இலையில் டெங்கு காய்ச்சலை சரிசெய்யும் பண்புகள் உள்ளன. அதாவது இந்த இலையானது இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவுகிறது. அதற்கு பப்பாளி இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதை ஒரு நாளைக்கு 2 முறை சிறிது குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
2. காய்கறி ஜூஸ்கள்
காய்கறிகளில் அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த சத்துக்களை முழுமையாக பெற வேண்டுமானால், பல்வேறு காய்கறிகளை ஒன்றாக அரைத்து சாறு எடுத்து, அவற்றைக் குடிப்பது தான். இப்படி காய்கறி ஜூஸை தயாரித்து, அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, விரைவில் டெங்குவில் இருந்து விடுபடலாம்.
3. இளநீர்
டெங்கு நோயாளிகள் இளநீரை குடித்து வந்தால், உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்கலாம். மேலும் இது உடலுக்கு வேண்டிய சத்துக்களை வழங்கி, உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும். அதற்கு டெங்கு நோயாளிகள் ஒரு நாளைக்கு 2 டம்ளர் இளநீரைக் குடிப்பது நல்லது.
4. மூலிகை டீ
டெங்கு நோயாளிகள் மூலிகை டீக்களை குடித்து வருவது, ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் இஞ்சி டீ, ஏலக்காய் டீ, பட்டை டீ போன்ற டீக்களை தயாரித்து குடித்து வந்தால், விரைவில் டெங்குவில் இருந்து குணமாகலாம். இந்த புத்துணர்ச்சியான மணத்தைக் கொண்ட மூலிகை டீக்களை குடிப்பதன் மூலம், மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
5. வேப்பிலை
வேப்பிலை ஏரளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது. இது பாரம்பரிய இயற்கை வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக டெங்குவில் இருந்து விடுபட வேப்பிலை பெரிதும் உதவி புரிகிறது. அதுவும் இது டெங்கு வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதோடு, அதன் வளர்ச்சியையும் தடுக்க உதவுகிறது. எனவே வேப்பிலை ஜூலை தயாரித்துக் குடிக்கலாம்.
டெங்கு நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்
டெங்கு இருப்பவர்கள் குறிப்பிட்ட உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் சிகிச்சை பெற்று வரும் போது அந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது சிகிச்சையில் இடையூறை ஏற்படுத்தும். எனவே எண்ணெயில் பொரித்த உணவுகள், காப்ஃபைன் நிறைந்த பானங்கள், காரமான உணவுகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications