Latest Updates
-
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
Dengue: தமிழகம் மற்றும் பெங்களூருவில் அதிகரிக்கும் டெங்கு: இந்த அறிகுறி தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க...
Dengue Fever: இதுவரை கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நிலையில், சமீப நாட்களாக தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் பெங்களூவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் டெங்குவால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர, தமிழகத்தில் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இப்படி திடீரென்று டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புள்ளிவிவரங்ளின் படி, கடந்த மே 13 ஆம் தேதி வரை பெங்களூருவில் சுமார 2, 877 டெங்கு வழங்குகள் பதிவாகியிருப்பது தெரிய வந்துள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, டெங்கு வழக்குகள் அதிகரிப்பதற்கு திடீரென்று வானிலை மாற்றமடைந்திருப்பது தான் என்கிறார்கள்.

கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளைச் சுற்றியுள்ள பள்ளங்களில் நீர் அதிகம் தேங்கி நிற்கிறது. இப்படி நீர்தேங்கும் பகுதிகளானது கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக உள்ளன. முக்கியமாக இந்த மாதிரியான பகுதிகளில் தான் டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.
அதுவும் மழை பெய்தால், நீர் நிறைய இடங்களில் தேங்கி, கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமும் அதிகரித்து, அதன் விளைவாக டெங்கு காய்ச்சல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. முக்கியமாக இந்த வகை கொசுக்கள் அதிகாலையில் அல்லது தாமதமான இரவில் கடிக்கும். சரி, ஒருவருக்கு டெங்கு இருந்தால், அது எம்மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்தும் என்று கேட்கலாம். கீழே டெங்கு காய்ச்சலின் எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அதிக காய்ச்சல்
டெங்கு காய்ச்சலின் முதன்மையான அறிகுறிகளுள் ஒன்று திடீரென்று அதிக காய்ச்சல் வரும். அதுவும் இந்த காய்ச்சல் 2 முதல் 7 நாட்கள் வரை நீடித்திருக்கும். முக்கியமாக காய்ச்சலுடன் அடிக்கடி வியர்வையையும், குளிர்ச்சியையும் சந்திக்க நேரிடும்.
2. கடுமையான தலைவலி
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான தலைவலியை சந்திப்பார்கள். இந்த தலைவலியால் மிகவும் பலவீனமாகக்கூடும். அதுவும் இந்த தலைவலிகள் முன் அல்லது பின்புறத்தில் ஏற்படும். முக்கியமாக ஊசியால் குத்துவது போன்று இருக்கும்.
3. கண்களுக்கு பின் வலி
டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் கண்களுக்கு பின்புறத்தில் வலியை சந்தித்துள்ளனர். இந்த வலி ரெட்டரோ ஆர்பிட்டல் வலி என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதிரியான வலியின் போது கண்களை அசைத்தால் கூட கடுமையான வலியை சந்திக்க நேரிடுமாம்.
4. தலை மற்றும் மூட்டு வலி
டெங்கு காய்ச்சல் ஒருவருக்கு கடுமையான காய்ச்சலை மட்டுமின்றி, தசை மற்றும் மூட்டு வலியையும் உண்டாக்கும். இப்படி தீவிரமாக எலும்புகளையும், தசைகளையும் பாதிப்பதால், இதை எலும்பு முறிவு காய்ச்சல் என்றும் அழைப்பர். டெங்குவாய் ஏற்படும் இந்த தசை, மூட்டு வலி பல நாட்களாக தொடர்ந்து நீடித்திருக்கும்.
பிற எச்சரிக்கை அறிகுறிகள்...
* வாந்தி
* தோல் தடிப்புகள்
* இரத்தப்போக்கு
* இரத்த பிளாஸ்மா கசிவு
* குறைந்த இரத்த அழுத்தம்
* இரத்தவட்டுக்களின் எண்ணிக்கை குறைவது
டெங்குவைப் பரப்பும் கொசுக்கடியில் இருந்து பாதுகாப்புடன் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்:
* டெங்கு காய்ச்சலைத் தடுக்க மிகச்சிறந்த வழி கொசுவிரட்டியைப் பயன்படுத்துவது தான். தற்போது ஏராளமான கொசு விரட்டிகள் கடைகளில் விற்கப்படுகின்றன. எனவே அவற்றை பயன்படுத்துங்கள்.
* கொசுக்கள் கடிக்காமல் இருக்க உடலை மறைக்கக்கூடிய அளவில் முழு ஆடைகளை அணியுங்கள்.
* வீட்டைச் சுற்றி நீர் தேங்கியிருந்தால், ஜன்னல் கதவுகள் மற்றும் வாசல் கதவுகளை எப்போதும் மூடி வைத்திருங்கள். முக்கியமாக பகல் வேலையில் கொசுக்கள் சுறுசுறுப்பாக இருக்கும் என்பதால், இந்த வேளைகளில் மூடியே வைத்திருங்கள்.
* வீட்டில் உள்ள குப்பைகளை தினமும் அப்புறப்படுத்திவிடுங்கள். வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.
* ஒரு பௌல் நீரில் கற்பூரத்தை போட்டு வீட்டில் வைத்திருங்கள். இது கொசுக்களைத் தடுக்க உதவி புரியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
