Latest Updates
-
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
பெருங்குடல் புற்றுநோய் வரப்போகுதுன்னா... இந்த 2 அறிகுறி 6 மாசத்துக்கு முன்னாடி இருந்தே தெரியுமாம்..
Colorectal Cancer: உலகளவில் இதய நோய்க்கு அடுத்தப்படியாக அதிகளவு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நோய் என்றால் அது புற்றுநோய் தான். புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இவை புற்றுநோய் செல்கள் தாக்கும் பகுதியைப் பொறுத்தது. புற்றுநோய்களிலேயே பெருங்குடல் புற்றுநோயால் தான் ஏராளமானோர் பாதிக்கப்படுவதோடு, மரணத்தையும் சந்திக்கிறார்கள்.
என்ன தான் புற்றுநோய்க்கான சிகிச்சைகள், மருந்துகள் கண்டுபிடித்துவிட்டாலும், அதற்கு புற்றுநோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆனால் நிறைய பேருக்கு இன்னும் புற்றுநோயின் அறிகுறிகள் சரியாக தெரிவதில்லை.

மேலும் புற்றுநோயின் பல அறிகுறிகள் தினசரி நாம் சந்திக்கும் பிரச்சனைகளைப் போன்றே உள்ளன. இதனால் மக்கள் குழப்பமடைந்து, பெரும்பாலும் புறக்கணித்துவிடுகிறார்கள். பின் நிலைமை முற்றிய நிலையில் மருத்துவரை அணுகி போதுமான சிகிச்சையைப் பெற முடியாமல் மரணத்தை சந்திக்கிறார்கள்.
இந்நிலையில் சமீபத்திய ஆய்வு ஒன்றில் பெருங்குடல் புற்றுநோயின் இரண்டு முக்கியமான மற்றும் ஆரம்ப கால அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளானது பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுள் பாதி பேருக்கு தெரிந்துள்ளது. அந்த 2 அறிகுறிகள் வயிற்று வலியும், இரத்தம் கலந்த மலமும் ஆகும்.
அமெரிக்காவிலும் சரி, உலகளவிலும் சரி, பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் மத்தியில் மலம் கலந்த இரத்தம், வயிற்று வலி, குடலியக்கத்தில் மாற்றம் போன்றவை இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுவும் இந்த அறிகுறிகளானது புற்றுநோய் வருவதற்கு 4 முதல் 6 மாதங்களுக்கு முன்பிருந்தே தெரியத் தொடங்குவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 1.9 மில்லியனுக்கும் அதிகமானோர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதோடு, 9,30,000-க்கும் அதிகமானோர் பெருங்குடல் புற்றுநோயால் இறந்துள்ளனர்.
ஒருவருக்கு பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. இருப்பினும், தற்போதைய வாழ்க்கை முறையினாலும், பழக்கவழக்கங்களினாலும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் பல காரணிகள் உள்ளன.
அதில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகம் உண்பது, பழங்கள் மற்றும் காய்கறிகளை குறைவாக உண்பது, உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை, உடல் பருமன், புகைப்பழக்கம், அதிகப்படியான மது பழக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்போது பெருங்குடல் புற்றுநோயின் பிற அறிகுறிகளைக் காண்போம்.
பெருங்குடல் புற்றுநோயின் பிற அறிகுறிகள்
* வயிற்றுப்போக்கு
* அடிவயிற்று பிடிப்புகள்
* மலச்சிக்கல்
* மலத்தின் நிறத்தில் மாற்றம்
* ஆசனவாயில் இருந்து இரத்தக்கசிவு
* அதிகமாக வாயு வெளியேறுவது
* மிகுதியான வயிற்று உப்புசம்
பெருங்குடல் புற்றுநோய் தீவிரமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்
* மிகுந்த உடல் சோர்வு
* உடல் பலவீனம்
* எடை இழப்பு
* எப்போதும் மலம் வருவது போன்ற உணர்வு
* வாந்தி
புற்றுநோய் செல்கள் உடலின் பிற பகுதிகளுக்கு பரவியிருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்
* எலும்பு முறிவு
* மூச்சுத்திணறல்
* நாள்பட்ட தலைவலி
* கை மற்றும் கால்களில் வீக்கம்
* கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறத்தில் தென்படுவது
* பார்வை பிரச்சனை
மேலே கொடுக்கப்பட்ட அறிகுறிகள் அனைத்தும் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகளாகும். எனவே உடலில் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சனையையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், அதை கவனித்து உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications