Latest Updates
-
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
அடிக்கடி சளி, இருமல் பிடிச்சு பாடாய்படுத்துதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 விதமான உணவுகளை தினமும் சாப்பிடுங்க.. -
டைனோசர்கள் உருவாவதற்கு முன்பே பூமியில் உருவான நதி எது தெரியுமா? இப்பவும் இதில் தண்ணீர் இருக்காம் -
செப்டம்பரில் உருவாகும் பல அரிய ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும்.. உங்க ராசி என்ன? -
துவரம் பருப்பும், தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம் -
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
பெருங்குடல் புற்றுநோய் வரப்போகுதுன்னா.. இந்த 4 அறிகுறியும் 2 வருஷத்துக்கு முன்னாடியே தெரிய ஆரம்பிக்குமாம்..
Colon Cancer In Tamil: இதய நோய்க்கு அடுத்தப்படியாக உலகளவில் அதிக இறப்பை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு கொடிய நோய் தான் புற்றுநோய். இந்த புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. அவை புற்றுநோய் கட்டிகள் வளரும் பகுதியைப் பொறுத்தது.
இவற்றில் குடல் புற்றுநோயைக் கண்டறிவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதுவும் இந்த வகை புற்றுநோயை பெரும்பாலும் முற்றிய நிலையிலேயே கண்டறிய முடிகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த வகை புற்றுநோயின் அறிகுறிகள் நாம் தினசரி சந்திக்கும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்றிருக்கும்.

சமீப காலமாக பெருங்குடல் புற்றுநோயால் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்நிலையில் புதிய ஆய்வானது, பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளை வெளியிட்டுள்ளது.
தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், இளைஞர்களிடையே பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்து வருவதால், 4 அறிகுறிகளைக் கொண்டு ஆரம்ப காலத்திலேயே அதை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அந்த அறிகுறிகளில் வயிற்று வலி, மலக்குடல் இரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கு, இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்தசோகை போன்றவை அடங்கும். முக்கியமாக இந்த 4 அறிகுறிகளும் பெருங்குடல் புற்றுநோய் கண்டறியப்படுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே தோன்ற தொடங்குவதாக கூறப்படுகின்றன.
இதுக்குறித்து பொது சுகாதார அறிவியல் பிரிவில் அறுவை சிகிச்சையின் இணை பேராசிரியரும், பார்ன்ஸ்-யூத மருத்துவமனை மற்றும் வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசன் சைட்டேன் புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சி உறுப்பினருமான யின் காவ் கூறுகையில், பெருங்குடல் புற்றுநோய் வயதானவர்களை மட்டும் தாக்கக்கூடிய நோய் அல்ல. இது இளைஞர்கள், பெரியவர்கள் என்று அனைவரையும் பாரபட்சம் பாராமல் தாக்கக்கூடிய கொடிய நோய். இந்த நோயின் ஆரம்ப கால அறிகுறிகளை ஒவ்வொருவரும் அறிந்து செயல்பட வேண்டும். முக்கியமாக 50 வயதிற்குட்பட்டபவர்கள் இந்த புற்றுநோய்க்கு அதிக ஆபத்தில் இருப்பதால், அவர்கள் அவ்வப்போது பெருங்குடல் புற்றுநோய் பரிசேதனையை செய்வது நல்லது." என்றார்.
செயிட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசன் ஆராய்ச்சியாளர்கள், 5000 நோயாளிகளின் ஹெல்ட் இன்சூரன்ஸ் தரவுகளை சோதித்ததில், 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் இருப்பது தெரிய வந்ததாக கூறுகின்றனர். அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் கூற்றுப்படி, 1995 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 55 மற்றும் அதற்குட்பட்ட வயதினர்களிடையே 11-20 சதவீதம் வரை அதிகமாக பெருங்குடல் புற்றுநோய் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதுவும் இந்த புற்றுநோய் இருப்பதை அறிவதற்கு 3 மாதங்கள் முதல் ஆண்டுகள் வரை ஒருவர் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மலக்குடல் இரத்தப்போக்கு, இரும்புச்சத்து குறைபாட்டினால் இரத்த சோகை போன்ற அறிகுறிகளை சந்தித்திருப்பதும் தெரியதுள்ளது. ஆகவே உங்களுக்கு இந்த மாதிரியான அறிகுறிகள் தெரிந்தால், அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, சிகிச்சை மேற்கொள்ளத் தொடங்குங்கள்.
பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கும் வழிகள்
* உங்கள் குடும்பத்தில் அல்லது பரம்பரையில் யாருக்கேனும் பெருங்குடல் புற்றுநோய் இருந்தால், அவர்கள் இளம் வயதிலேயே புற்றுநோய் பரிசோதனையை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும். இப்படி செய்யும் போது ஆரம்பத்திலேயே பெருங்குடல் புற்றுநோயைக் கண்டறிந்து தடுக்க முடியும்.
* ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கு உடல் பருமனும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதால், உடல் எடையை பராமரிக்க வேண்டும். எனவே உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரக்கூடாது என்று விரும்பினால், உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
* உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியானால் முதலில் அதை நிறுத்துங்கள். ஏனெனில் சிகரெட் பழக்கமானது ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோயை மட்டுமின்றி, 15 வகையான புற்றுநோய்களையும் உண்டாக்க வாய்ப்புள்ளது.
* குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு குடல் புற்றுநோயின் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே குடல் புற்றுநோய் வரக்கூடாதெனில் குடிப்பழக்கத்தை அறவே கைவிட வேண்டும்.
* அளவுக்கு அதிகமாக மாட்டிறைச்சி, குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்வதனாலும், பெருங்குடல் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கிறது. ஆகவே பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க விரும்பினால், இந்த வகையான இறைச்சிகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
* முழு தானியங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தால், அது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எனவே பழங்கள், காய்கறிகள், முழு தனியங்கள் போன்றவற்றை தினசரி உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications