Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
அமெரிக்காவின் இந்த 12 பிராண்ட் பட்டை தூளில் ஈயம் இருக்காம்.. இது ஆரோக்கியத்தை எப்படி சீரழிக்கும் தெரியுமா?
Lead Found In Cinnamon: உலகளவில் இனிப்புச் சுவைக்காக பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள் தான் பட்டை. இந்த பட்டை பொடி வடிவில் பல பொருட்களை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் பேக்கிங், ஹாட் சாக்லேட், காபி, ஓட்ஸ் போன்றவற்றின் மேல் தூவி பரிமாறப்படுவதுண்டு.
ஆனால் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள நுகர்வோர் அறிக்கைகள் என்னும் இலாப நோக்கமற்ற அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில், அமெரிக்காவில் விற்கப்படும் பட்டை தூள் மற்றும் பட்டை கலந்த மசாலா பொருட்களில் ஈயத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. அதுவும் 12 பிராண்ட்டுகளின் பட்டை மற்றும் பட்டை கலந்த மசாலா பொருட்களில் அதிக அளவு ஈயம் இருப்பதாக நுகர்வோர் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

உணவு பாதுகாப்பு விஞ்ஞானிகள் 36 பிராண்டுகளின் பட்டை தூள் கலந்த பொருட்களை சோதனை செய்தனர். அந்த மசாலா பொருட்கள் அனைத்தும் கனெக்டிகட், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் ஆன்லைனில் உள்ள 17 கடைகளில் இருந்து வாங்கப்பட்டன. இந்த 36 பொருட்களில் 12 பிராண்ட்டுகளின் பட்டை தூள் கலந்த பொருட்களில் 1 ppm-க்கும் அதிகமான அளவில் ஈயம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பிராண்டுகளின் பட்டை பொடியை வெறும் 1/4 டீஸ்பூனை எடுப்பது, ஒரு நாள் முழுவதும் நீங்கள் உட்கொள்ள வேண்டியதை விட அதிக ஈயம் உள்ளது என்று நுகர்வோர் அறிக்கையின் உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் சோதனை இயக்குனர் ஜேம்ஸ் ரோஜர்ஸ் கூறுகிறார். எனவே உங்களிடம் இந்த பிராண்ட்டுகளில் ஒன்று இருந்தாலும், அவற்றை தூக்கி எறிந்து விடவும் அவர் கூறுகிறார். ஏனெனில் பொதுவாக ஈயத்தை சிறிது எடுத்தாலே அது ஆபத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த ஈயமானது அப்படியே உடலில் தங்கி எதிர்பாராத பல மோசமான விளைவுகளை உண்டாக்கும்.
நுகர்வோர் அறிக்கையின் படி, மக்கள் தவிர்க்க வேண்டிய பட்டை தூள் மற்றும் பட்டை கலந்த மசாலா பொருட்களை விற்கும் பிராண்ட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை:
1. பராஸ் இலவங்கப்பட்டை தூள் (3.52 ppm)
2. EGN இலவங்கப்பட்டை தூள் (2.91 ppm)
3. மிமியின் தயாரிப்புகள் கிரவுண்ட் இலவங்கப்பட்டை (2.03 ppm)
4. பௌல் & பேஸ்கட் கிரவுண்ட் இலவங்கப்பட்டை (1.82 ppm)
5. ராணி பிராண்ட் இலவங்கப்பட்டை (1.39 ppm)
6. ஜாரா ஃபுட்ஸ் இலவங்கப்பட்டை தூள் (1.27 ppm)
7. த்ரி ரிவர்ஸ் இலவங்கப்பட்டை தூள் (1.26 ppm)
8. யூ யீ பிராண்ட் ஃபைவ் மசாலா தூள் (1.25 ppm)
9. BaiLiFeng ஃபைவ் மசாலா தூள் (1.15 ppm)
10. ஸ்பைசி கிங் ஃபைவ் மசாலா தூள் (1.05 ppm)
11. பாடியா இலவங்கப்பட்டை தூள் (1.03 ppm)
12. டீப் இலவங்கப்பட்டை தூள் (1.02 ppm)
மேலும் எந்த பிராண்ட் பட்டை தூளைப் பயன்படுத்தலாம் என்றும் நுகர்வோர் அறிக்கைகள் பட்டியலிட்டுள்ளன. அந்த பிராண்ட்டுகளாவன:
1. 365 ஹோல் ஃபுட்ஸ் மார்கெட் கிரவுணட் இலவங்கப்பட்டை (0.12 ppm)
2. 365 ஹோல் ஃபுட்ஸ் மார்கெட் ஆர்கானிக் கிரவுணட் இலவங்கப்பட்டை (0.02 ppm)
3. லோயிசா ஆர்கானிக் இலவங்கப்பட்டை (0.04 ppm)
4. மார்டன் & பாசெட் சான் பிரான்சிஸ்கோ ஆர்கானிக் கிரவுண்ட் இலவங்கப்பட்டை (0.04 ppm)
5. சதாஃப் இலவங்கப்பட்டை தூள் (0.04 ppm)
6. சதாஃப் செவன் மசாலா கலவை (0.15 ppm)
ஈயத்தை அதிகம் உட்கொண்டால் சந்திக்கும் பிரச்சனைகள்
ஈயத்தை ஒருவர்அதிகமாக உட்கொண்டால், அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை மிகவும் கடுமையாக பாதிக்கும்.
குழந்தைகள் ஈயத்தை அதிகம் எடுக்கும் போது, அது அவர்களின் வளர்ச்சியை தாமதப்படுத்தும், கற்பதில் சிரமத்தை உண்டாக்கும், எரிச்சலுணர்வை அதிகரிக்கும், எடை இழப்பு மற்றும் காது கேளாமை பிரச்சனைகளை உண்டாக்கும். அதுவும் குழந்தைகள் நீண்ட காலமாக ஈயத்தை உட்கொண்டு வந்தால், அது அறிவாற்றலைக் குறைக்கும், கவனக்குறைவு குறைபாடுகள் மற்றும் நடத்தை சிக்கல்கள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
பெரியவர்கள் ஈயத்தை அதிகமாக உட்கொண்டால், அது உயர் இரத்த அழுத்தம், மூட்டு மற்றும் தசை வலி, நினைவாற்றல் அல்லது கவனிப்பதில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக கடுமையான தலைவலியால் அவதிப்படக்கூடும். இன்னும் தீவிரமான சந்தர்ப்பங்களில், இது அடிவயிற்று வலி, மனநிலை கோளாறுகள், இனப்பெருக்க பிரச்சனை, ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறையலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் ஈயத்தை அதிகமாக எடுத்தால், அது கருச்சிதைவு, குறைமாதத்தில் குழந்தை பிறப்பது மற்றும் வளர்ச்சியில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் நீண்ட காலமாக ஒருவர் ஈயத்தை உட்கொண்டு வந்தால், அது சிறுநீரக சேதம் மற்றும் பலவீனமான நரம்பியல் செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications