Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
Chennai Rains: மழை நேரத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா? இந்த டீயை அடிக்கடி செஞ்சு குடிங்க...
Chennai Rains: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை வெளுத்து கொண்டிருக்கிறது. தற்போது சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழைக்காலங்களில் உடலின் நோயெதிர்ப்பு சக்தி சற்று பலவீனமாக இருக்கும். இதனால் தான் காலநிலை குளிர்ச்சியாகும் போது, பலரும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
இந்நிலையில் மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஒருசில டீக்களை தயாரித்து குடிப்பதே சிறந்த வழி. அதுவும் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகளைக் கொண்டு டீ தயாரிக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி வலுவடையும். இப்போது மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எந்த மாதிரியான டீக்களைக் குடிக்கலாம் என்பதைக் காண்போம்.

இஞ்சி டீ
அனைவரது வீட்டின் சமையலறையிலும் இருக்கும் ஒரு மருத்துவ குணம் வாய்ந்த பொருள் தான் இஞ்சி. இந்த இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதோடு, செரிமான பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது. இப்படிப்பட்ட இஞ்சியைத் துருவி கொதிக்கும் நீரில் சேர்த்து, சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடித்து வாருங்கள்.
துளசி டீ
துளசி அதன் மருத்துவ குணங்களுக்காக ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. துளசியில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் இருப்பதால், இந்த துளசியைக் கொண்டு டீ தயாரித்து குடிக்கும் போது, அது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, மன அழுத்தத்தைக் குறைத்து, சுவாச ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதற்கு கொதிக்கும் நீரில் ஒரு கையளவு துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.
மசாலா டீ
மசாலா டீ மழைக்காலங்களில் குடிக்க ஏற்ற அற்புதமான பானம். மசாலா டீயில் ஏலக்காய், பட்டை, கிராம்பு, மிளகு போன்ற உடலுக்கு இதமளிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் இருப்பதால், இந்த டீயை மழைக்காலத்தில் குடித்து வந்தால், செரிமானம் மேம்படும், சளி, இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
புதினா டீ
புதினா டீ மழைக்காலத்தில் புத்துணர்ச்சி அளித்து, உடலை இதமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆய்வு ஒன்றின் படி, புதினாவில் உள்ள பண்புகள் செரிமான பிரச்சனைகளை சரிசெய்யவும், தலைவலியைக் குறைக்கவும், நெஞ்சில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றவும் உதவுவதாக தெரிய வந்துள்ளது. முக்கியமாக இந்த புதினா உடலை மட்டுமின்றி, மனதையும் அமைதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதற்கு கொதிக்கும் நீரில் சிறிது புதினா இலைகளை சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.
லெமன்கிராஸ் டீ
லெமன்கிராஸ் டீயின் சுவையானது சிட்ரஸ் ப்ளேவரைக் கொண்டிருக்கும் மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கும். குறிப்பாக இந்த டீ செரிமானத்தை சரிசெய்யும், மன இறுக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளன. இப்படிப்பட்ட லெமன்கிராஸ் டீயை மழைக்காலத்தில் குடித்து வருவது மிகவும் நல்லது. இந்த டீயைத் தயாரிப்பதற்கு கொதிக்கும் நீரில் சிறிது லெமன்கிராஸ் இலைகளை கிள்ளிப் போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications