Latest Updates
-
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்
மழையால் சளி, இருமல் உங்களை பாடாய் படுத்துதா? இந்த கை வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க...
குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. ஆங்காங்கு மழையும் பெய்து வருகிறது. காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், நிறைய பேர் இருமல், தும்மல், சளி, காய்ச்சல், தொண்டைப் புண் போன்ற பல பிரச்சனையால் அதிகம் அவதிப்பட நேரிடும். அதோடு பலர் தினமும் மருத்துவமனைக்கு அலைந்து திரிந்து கொண்டிருப்பார்கள் மற்றும் நிறைய மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கு எடுத்தவுடனேயே மருத்துவரை அணுகி மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, முதலில் கை வைத்தியங்களை முயற்சித்துப் பார்ப்பதே நல்லது. முந்தைய காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் இதுப்போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே தீர்வு கண்டார்கள்.

எனவே நீங்கள் இந்த பிரச்சனைகளால் அவதிப்படுபவராயின், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒருசில இயற்கை வைத்தியங்களை முதலில் முயற்சி செய்யுங்கள். இந்த வைத்தியங்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, கிருமிகளை அழித்து விரைவில் குணமாக வழிவகை செய்யும்.
உப்பு நீரால் கொப்பளிக்கவும்
நீங்கள் தொண்டை புண், தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல் போன்ற பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் இதில் இருந்து விரைவில் குணமாக, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரை வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளியுங்கள். இப்படி உப்பு நீரால் தினமும் 2 வேளை கொப்பளித்தால், தொண்டையில் பிரச்சனைகளை உண்டாக்கும் கிருமிகள் அழிந்துவிடும்.
மஞ்சள் பால்
சளி, இருமல் போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இது பாரம்பரியமாக இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் சளி, இருமலுக்கு மேற்கொள்ளப்படும் ஒரு வைத்தியமாகும். ஏனெனில் மஞ்சளில் உள்ள குர்குமின், பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் கொண்டது மற்றும் மிளகுத் தூளில் உள்ள பண்புகள், சளியைக் கரைத்து வெளியேற்றும்.
நீரை அதிகம் குடிக்கவும்
பொதுவாக உடல் நலம் சரியில்லாவிட்டால், நிறைய பேர் நீர் அருந்துவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் சளி, இருமலில் இருந்து விரைவில் விடுபட வேண்டுனால் நீரை அதிகம் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீரைக் குடிக்க பிடிக்காவிட்டால், மூலிகை டீ, கசாயம் போன்றவற்றை அடிக்கடி தயாரித்து குடியுங்கள். இது சளியைக் கரைத்து வெளியேற்றுவதோடு, விரைவில் சளி, இருமலில் இருந்து விடுவிக்கும்.
தேன்
அனைவரது வீட்டின் சமையலறையிலும் இருக்கும் மருத்துவ பண்புகள் அதிகம் நிறைந்த பொருள் தான் தேன். இந்த தேன் இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான பொருளும் கூட. இனிப்புச் சுவையைக் கொண்டே தேன், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்யும் திறனைக் கொண்டது. முக்கியமாக தொண்டை கரகரப்பு, தொண்டைப் புண் ஆகியவற்றால் அவதிப்படுபவர்கள், தேனை உட்கொண்டு வந்தால், உடனடி நிவாரணத்தைப் பெறலாம். இதற்கு தேனில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.
ஆவி பிடிப்பது
சளி, இருமல் பிரச்சனைகளின் போது ஆவி பிடித்தால், அது சுவாசப் பாதையில் உள்ள சளியை இளகச் செய்து, இப்பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும். அதுவும் நன்கு கொதிக்க வைத்த நீரில், சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை சேர்த்து, அந்நீரை 10-15 நிமிடங்கள் ஆவி பிடிக்கும் போது, சுவாசப் பாதை சுத்தமாகி, சுவாசிப்பதில் உள்ள அசௌகரியங்கள் நீங்கும்.
சூடான சூப்
சளி, இருமலால் அவதிப்படும் போது நல்ல சூடான சூப்புகளை தயாரித்துக் குடிப்பது நல்ல நிவாரணத்தைத் தரும். அதுவும் சூப் தயாரிக்கும் போது அத்துடன் பூண்டு, இஞ்சி, காய்கறிகள் அல்லது ஆட்டுக்கால் போன்றவற்றை சேர்ப்பதால், அவற்றில் உள்ள சத்துக்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, விரைவில் இப்பிரச்சனையில் இருந்து விடுபட உதவி புரியும்.
வைட்டமின் சி பழங்கள் மற்றும் காய்கறிகள்
வைட்டமின் சி சளி, மற்றும் இருமலுக்கு காரணமான வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவி புரிவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலுவாக்கும். எனவே சளி பிடித்திருக்கும் போது வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications