Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
இனி மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இலவச சிகிச்சை!இந்த காப்பீட்டிற்கு எப்படி அப்ளை செய்யணும்?
இன்றைய சூழலில் வயதானவர்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகள் பெரும் கவலையை அளிக்கிறது.. ஆனால் அந்த கவலைகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், ஆயுஷ்மான் பாரத் இலவச சிகிச்சை திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.. இந்த திட்டம் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது..
மேலும் இந்தத் திட்டத்தை பெற வருமானம் ஒரு அளவுகோல் அல்ல. 70 வயது உடைய அனைவருக்கும் பாரம்பட்சம் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சை வழங்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பயன்பெறும் பல குடும்பங்களில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கும் கூடுதலாக வருமானத்தை கருத்தில் கொள்ளாமல் ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைக்கு டாப்-அப் செய்து கொள்ளலாம்" என்றார்.
இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள 4.5 கோடி குடும்பங்களில் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான மூத்த குடிமக்களுக்கு இதற்கென பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு யார் தகுதியானவர்?
தற்போதைய அறிவிப்பின்படி, 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடிமக்களும் நாட்டில் இலவச சிகிச்சை பெற தகுதியுடையவர்கள். குடும்ப அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்படும். மேலும், தற்போது ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா சுகாதார காப்பீட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கூடுதல் சிகிச்சை பலன் கிடைக்கும். இது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களிடையே பகிரப்படக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் என்பது உலகின் மிகப்பெரிய அரசு வழங்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தற்போது 12 கோடி குடும்பங்கள் பயனடைகின்றன. இந்த திட்டம் நாட்டின் பொருளாதாரத்தில் பின்தங்கிய 40 சதவீத மக்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற காப்பீடுகள் உள்ளவர்கள் இந்த திட்டத்தை பெறலாமா?
தனியார் மருத்துவக் காப்பீடு அல்லது மாநில அரசின் காப்பீட்டுத் திட்டம் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆயுஷ்மான் பாரத் இலவச சிகிச்சையின் பலன்களைப் பெறலாம். ஒரு குடும்பத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட இருவர் இருந்தால், அவர்களுக்கு ரூ.5 லட்சம் பகிர்ந்து அளிக்கப்படும்.
எத்தனை பேர் பயனடைவார்கள்?
அரசாங்க தரவுகளின்படி, நாட்டில் உள்ள 4.5 கோடி குடும்பங்களில் சுமார் 6 கோடி பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் இலவச சிகிச்சை திட்டத்தின் பலன் கிடைக்கும். தகுதியானவர்களுக்கு புதிய காப்பீட்டு அட்டை வழங்கப்படும். அரசாங்கத்திற்கு செலவு 70 வயது நிரம்பிய அனைவருக்கும் இலவச சிகிச்சைக்கான அணுகலை வழங்குவதன் மூலம், 3,437 கோடி ரூபாய் ஆரம்ப பொறுப்பு அரசுக்கு ஏற்படும். 40 சதவீத செலவை மாநில அரசுகள் ஏற்க வேண்டும். ஆனால் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப்பாங்கான மாநிலங்களில் திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
நீங்கள் இத்திட்டத்திற்குத் தகுதி பெற்றவரா என்று எப்படி அறிவது?
1. நீங்கள் இத்திட்டத்திற்குத் தகுதி பெற்றவரா என்பதை ஆன்லைனிலேயே செக் செய்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் பிரதான் மந்திரி ஜன்ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும்.
2. அங்கு Am I Eligible என்பதை கிளிக் செய்ய வேண்டும். மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை டைப் செய்து Generate OTP என்பதைக் கொடுக்க வேண்டும்.
3. பிறகு உங்கள் மொபைலுக்கு வரும் ஒடிபியை பதிவிடுங்கள். அதில் தேவையான தகவல்களைக் கொடுத்து சம்மிட் என்பதைக் கிளிக் செய்யவும்.
இதற்கு எப்படி அப்ளை செய்ய வேண்டும்?
நோய் வாய்ப்பட்ட நபரை அருகே உள்ள PMJAY kioskக்கு அழைத்துச் செல்லவும். உங்கள் ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டை ஆதாரமாக சமர்ப்பிக்கவும். நீங்கள் இத்திட்டத்திற்குத் தகுதி பெறும் நபராக இருந்தால் அவர்களே AB-PMJAY ஐடியை தந்துவிடுவார்கள். அதை வைத்து நாம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications