For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்றுநோய்க்கட்டி எப்படி உருவாகுதுனு தெரியுமா?... இத பார்த்து தெரிஞ்சிக்கங்க...

|

புற்றனைய கட்டி என்னும் கார்சினாய்டு ஒரு அரிய வகை புற்றுநோயக்கட்டி இரத்த ஓட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வகை ரசாயனத்தைக் கலப்பதால் சில அறிகுறிகள் வரிசையாக தென்படத் தொடங்குகின்றன.

உங்கள் வயிறு, சிறுகுடல், பெருங்குடல், குடல்முளை மற்றும் மலக்குடல் உள்ளிட்ட நுரையீரல் அல்லது இரைப்பைக் குழாயில் இந்த வகை புற்றுநோய்க் கட்டிகள் பெரும்பாலும் தோன்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் என்ன?

காரணம் என்ன?

ஒரு புற்றனையக் கட்டி செரோடோனின், பிராடிகினின்கள், டச்சிகினின்கள் மற்றும் புரோஸ்டாக்லாண்டின்கள் போன்ற ஹார்மோன் ரசாயனப் பொருட்களை இரத்த ஓட்டத்தில் வெளியிடும் போது கார்சினாய்டு நோய்க்குறி ஏற்படுகிறது. ஒரு சிறிய சதவீத புற்றுநோய்க் கட்டிகள் இந்த இரசாயனங்களை சுரக்கின்றன.

மேலும் கல்லீரல் பொதுவாக இந்த வேதிப்பொருட்களை உடலெங்கும் நகர்த்துவதற்கும் அறிகுறிகளை ஏற்படுத்துவதற்கும் முன்பாக எதிர்க்கிறது. இருப்பினும், கட்டி கல்லீரலுக்கு முன்னேறியதும், இரத்த ஓட்டத்தை அடைவதற்கு முன்பு நடுநிலைப்படுத்தப்படாத ரசாயனங்கள் வெளியிடப்படுகின்றன. கார்சினாய்டு நோய்க்குறி உள்ளவர்களுக்கு பொதுவாக கார்சினாய்டு கட்டி முற்றிய நிலையில் இருக்கும்.

 நோய்க்குறியின் அறிகுறிகள்

நோய்க்குறியின் அறிகுறிகள்

. தோல் இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது ஊதா நிறமாக மாறும்

. வயிற்றுப்போக்கு

. விரைவான இதய துடிப்பு

. மூச்சுத் திணறல் அல்லது வீசிங்

. முகத்தில் புண்கள்

. இரத்த அழுத்தத்தில் திடீர் வீழ்ச்சி

நோய்க்குறியின் சிக்கல்கள்

நோய்க்குறியின் சிக்கல்கள்

1. கார்சினாய்டு இதய நோய் - கார்சினாய்டு நோய்க்குறி உள்ளவர்களுக்கு இதய நோயும் உருவாகலாம். இதய வால்வுகள் தடிமனாக இருப்பதால் இது ஏற்படுகிறது, இதனால் அவை சரியாக செயல்படுவது கடினமாகி, இதன் விளைவாக இதய வால்வுகளில் கசிவு ஏற்படுகிறது. கார்சினாய்டு இதய நோய்க்கான அறிகுறிகள் சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை ஆகும்.

2. கார்சினாய்டு நெருக்கடி - இது சருமம் சிவந்து போவது, குழப்பம், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

3. குடல் அடைப்பு - சிறுகுடலுக்கு அடுத்த நிணநீர் மண்டலங்களுக்கு புற்றுநோய் பரவி, குடல் குறுகி, குடல் அடைப்புக்கு வழிவகுக்கும் போது இது நிகழ்கிறது.

MOST READ: காதுக்குள்ள இவருக்கு எவ்ளோ அழுக்கு சேர்ந்திருச்சு தெரியுமா? கேட்டு ஷாக் ஆகிடாதீங்க...

நோய் கண்டறிதல்

நோய் கண்டறிதல்

மருத்துவர் உடல் பரிசோதனை செய்யும்போது, உங்கள் அறிகுறிகளைப் பற்றி கேட்கலாம். நோயறிதலை உறுதிப்படுத்த அவர் மேலும் சில சோதனைகளைப் பரிந்துரைப்பார்கள். அவை பின்வருமாறு

1. இரத்தப் பரிசோதனை

உங்கள் இரத்தத்தில் சில புற்றுநோய்க் கட்டிகளால் வெளியிடப்படும் புரோட்டீன் குரோமோக்ரானின் ஏ உள்ளிட்ட சில பொருட்கள் இருக்கலாம்.

2. சிறுநீர் பரிசோதனை

உங்கள் உடல் கூடுதல் செரோடோனின் உடைக்கும்போது, அது சிறுநீரில் அதிகப்படியான பொருளை உருவாக்குகிறது, இது உடல் கூடுதல் செரோடோனின் செயலாக்குகிறது என்பதைக் குறிக்கிறது.

3. இமேஜிங் சோதனைகள்

சி.டி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்ற இமேஜிங் சோதனைகளும் முதன்மை கார்சினாய்டு கட்டியின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அது பரவியதா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது.

MOST READ: அடக்கொடுமையே! சுன்னத் செய்த போது மயக்கம் போட்டு விழுந்த சிறுவன்...

மருந்துகள்

மருந்துகள்

ஊசி வடிவில் உள்ள மருந்துகள் கார்சினாய்டு நோய்க்குறியின் அறிகுறிகளையும் அடையாளங்களையும் குறைக்கப் பயன்படுகின்றன, இதில் தோல் நிறமாற்றம் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும்.

2. அறுவை சிகிச்சை

குடல்முளை அல்லது குடல் போன்ற முழு உறுப்புக்கும் புற்றுநோய்க் கட்டியால் பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம். கட்டி இருக்கும் இடத்தைப் பொறுத்து, அறுவைசிகிச்சை ஒரு மின்சாரத்தைப் பயன்படுத்தி அதை எரிக்க அல்லது கிரையோசர்ஜரியை உறைய வைக்க பயன்படுத்தலாம்.

3. கீமோதெரபி

கீமோதெரபி மருந்துகள் புற்றுநோய்க் கட்டிகளைக் குறைக்க சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உயிரியல் சிகிச்சை இன்டர்ஃபெரான் ஆல்ஃபா என்பது உட்செலுத்தக்கூடிய மருந்தாகும், இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட தூண்டுகிறது மற்றும் புற்றுநோய்க் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கிறது மற்றும் அறிகுறிகளை நீக்குகிறது.

4. கதிர்வீச்சு சிகிச்சை

இந்த வகையான சிகிச்சையானது புற்றுநோய் செல்களைக் கொன்று அவற்றைப் பெருக்கவிடாமல் தடுக்கிறது.

MOST READ: 16 வயதில் 100 கிலோ எடை... மரணத்தை எட்டிப் பார்த்து திரும்பிய சிறுவன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Carcinoid Syndrome: Causes, Symptoms, Diagnosis and Treatment

Carcinoid syndrome occurs when a carcinoid tumour, a rare cancerous tumour secretes certain chemicals into the bloodstream, causing an array of symptoms. The carcinoid tumours mostly appear in the lungs or gastrointestinal tract including your stomach, small intestine, colon, appendix, and rectum.
Story first published: Thursday, August 1, 2019, 16:45 [IST]