Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ மார்பக புற்றுநோயாக இருக்கலாம்..!
மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று. இது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும். உலகெங்கும் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில், 10.4% மார்பகப் புற்றுநோயால் ஏற்படுகிறது என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது... இந்த மார்பக புற்றுநோய் என்பது உலக அளவில் மக்களை அச்சுறுத்தி வரும் ஒரு மோசமான நோயாக இருந்து வருகிறது.
இந்த மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் ஆரம்பத்தில் அதனை கண்டறிவதற்கான முக்கியத்துவம் போன்றவை நோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் இதைத் தடுக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

மார்பக புற்றுநோய்க்கான காரணங்கள் என்ன?
மார்பக புற்றுநோய்க்கான சரியான காரணங்களைக் கண்டறிவது கடினம். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் கூட அடிக்கடி குழப்பமடைகிறார்கள். இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணி இல்லை. அடிப்படையாக உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாகத் தோன்றுகிறது. பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின் போது இயல்பைவிட அதிக ரத்தப்போக்கு, இறுதி மாதவிடாய் (post menopause) நின்ற பிறகும் ரத்தப்போக்கு ஆகிய அறிகுறிகள் இருந்தால் அது மார்பக புற்றுநோயாக இருக்கும்..
மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
மார்பக புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று மார்பகத்தில் கட்டி இருப்பது. ஒழுங்கற்ற விளிம்புகளைக் கொண்ட கடினமான மற்றும் வலியற்ற கட்டி புற்றுநோயாக இருக்கலாம், இருப்பினும் மார்பக புற்றுநோய்கள் மென்மையாகவும், அல்லது வட்டமாகவும் இருக்கலாம். சில சமயங்களில் அவை வலியையும் ஏற்படுத்தலாம்.. மேலும் தாமதமாக மாதவிடாய் வருவது, தாய்ப்பால் இல்லாதது அல்லது 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் குழந்தையைப் பெற்றெடுப்பது ஆகிவை முக்கியமான அறிகுறிகளாகும்..
மற்ற அறிகுறிகள்
1. மார்பகத்தின் அனைத்து அல்லது பகுதியளவு வீக்கம் இருத்தல்
2. தோலில் ஏற்படும் மாற்றங்கள்
3. மார்பகத்தில் உள்ள முளைக்காம்புகள் உள்நோக்கி திரும்பியவாறு காணப்படுவது
4. மார்பகத்தில் சிவத்தல் அல்லது சொறி
தோலின் பள்ளம் ஏற்படுதல்
5. மார்பக முளைக்காம்புகளில் ரத்தம் அல்லது ஏதேனும் திரவங்கள் வெளியேறினால் உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
6. அக்குள் பகுதியில் திடீர் வீக்கம் ஏற்படுவது
மார்பகச் சுயபரிசோதனை
பெண்கள் மார்பகங்களைச் சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலமாக முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். மருத்துவர் மூலமும் அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வதன் மூலமும், மேமோகிராபி (mammography) மூலம் பரிசோதனை செய்து கொள்வதன் மூலமும் மார்பகக் கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வாய்ப்புகள் உள்ளது.. அதனால் 40 வயதை கடந்த பெண்கள் அனைவரும் இந்த சுய பரிசோதனையை மருத்துவர் மூலமாக எடுத்துக் கொள்வது நல்லது..
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு
இந்தியா உட்பட அனைத்து இடங்களில்லும் மார்பக புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு மக்களிடையே இல்லை .. புற்றுநோய் என்றாலே அது வலி மிகுந்ததாக இருக்கும் என்று தாங்களாகவே எண்ணிக் கொண்டு, வலி இல்லாத கட்டிகளை பலர் அலட்சியப்படுத்தி விட்டு இருக்கின்றனர். இதனால் நோய் தீவிரமடைந்த பிறகு கண்டறியப்பட்டு அதற்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலானதாக அமைகிறது. அதனால் பெண்கள் மிகவும் சிரமத்திர்க்கு ஆளாவார்கள்...
மார்பகப் புற்று நோய் - தடுக்கும் வழிமுறைகள்
1. ஒரு சில யோகப் பயிற்சிகள் செய்வதன் மூலமும் உங்கள் ஹார்மோன்கள் சுரக்கும் அளவை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.
2. வந்துவிட்டாலே இறப்பு உறுதிதான் என்ற நிலை மாறி, அதற்கான சிகிச்சைமுறைகள் வந்துவிட்டாலும், மக்களிடம் பயமும் பாதிப்பும் அதிகமாக தான் இருக்கிறது
3.வழக்கமான முறையில் உடற்பயிற்சி செய்து உடலை ஆக்டிவாக வைத்துக் கொள்ளுங்கள்.
4. மது அருந்துவதை குறைத்துக்கொள்வதும், புகைப்பிடிப்பதை தவிர்ப்பதும் மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான முக்கியமான விஷயங்கள்.
5. தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வது, அதனால் தாமதமாக குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது, மார்பக புற்றுநோய் அபாயத்தை தூண்டலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications