Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
வெங்காயத்தை சுற்றி இருக்கும் கருப்பு அச்சு.. சாப்பிட நல்லதா? இல்லை கெட்டதா? தெரிஞ்சுக்கோங்க..!
வெங்காயம்தான் சமையலுக்கு சுவை கொடுக்க முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. அதுவும் குறிப்பாக, வெங்காயத்தை வதக்கும்போது அதன் சுவை அதிகரிக்கும்.. நம் தமிழகத்தில் வெங்காயம் இல்லாத உணவுகளே செய்ய மாட்டார்கள்.. அந்த அளவிற்கு வெங்காயம் முக்கியத்துவம் வாய்ந்தது..
அதுமட்டுமல்ல, வெங்காயம் ஆரோக்கியத்திற்கும் பலவிதமான நன்மைகளை தருகிறது. அதாவது செரிமான ஆற்றலை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் உதவுகிறது. மேலும் இது குடல் இயக்கத்திற்கும் நல்லது. இப்படி இதன் நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அதுபோல நம் உடலில் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சினைகளான கண் அரிப்பு, தொண்டை அரிப்பு, சளி, இருமல் போன்ற பல பிரச்சனைகளை தீர்க்க வெங்காயம் உதவுகிறது.

அந்த வகையில் வெங்காயத் தோலின் மேல் கருப்பு அச்சு இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதுவும் சமீபக்காலமாக அந்த கருப்பு அசூ வெங்காயத்தில் அதிகமாக இருந்து வருகிறது.. இப்படி இருக்கு வெங்காயத்தை சாப்பிடலாமா.. கூடாதா..? அதனால் பாதிப்பு ஏற்படுமா..? என்று சந்தேகம் பலருக்கும் உண்டு. அது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
பொதுவாக வெங்காயத்தில் காணப்படும் இந்த கருப்பு அச்சு ஆஸ்பெர்கிலஸ் நைகர் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை பூஞ்சை மண்ணில் காணப்படுகிறது. அதுதான் வெங்காயத்திலும் வருகிறது. இந்த கருப்பு அச்சு இது மியூகோர்மைகோசிஸ் அல்ல. ஆனால் இந்த கருப்பு அச்சு ஒரு வகையான நச்சுவை வெளியிடும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உயிரை பறிக்கும் அளவுக்கு ஆபத்தை உண்டாக்காது என்றாலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஏற்கெனவே அலர்ஜி இருப்பவர்கள் இந்த கருப்பு அச்சு இருக்கும் வெங்காயத்தை தவிர்ப்பது நல்லது என்கின்றனர். அதேபோல் ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் இது காற்றில் பறந்து அதை நுகரும்போது பாதிப்பை உண்டாக்கலாம் என கூறப்படுகிறது. எனவே அப்படி கருப்பு அச்சு இருக்கும் லேயரை மட்டும் உறித்து எடுத்த பின் பயன்படுத்தலாம். ஆனால் பயன்படுத்தும் வெங்காய லேயரில் அந்த கருப்பு அச்சு படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் வெங்காயத்தை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்கிறீர்கள் எனில் இந்த கருப்பு அச்சை நீக்கிவிட்டு செய்ய வேண்டும். அதை அப்படியே வைப்பது மற்ற உணவுப்பொருட்களுடன் கலந்து உணவு விஷமாக மாற்றலாம். அதனால் கருப்பு அசூ உள்ள வெங்காயத்தை உரிக்கும்போதே நீக்கி விடுவதும் அல்லது நன்றாக கழுவி விடுவதும் நல்லது..
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications