Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
எச்சரிக்கை! வாய் துர்நாற்றம் அதிகம் வீசுதா? அப்ப உங்களுக்கு இந்த கொடிய நோய் இருக்க வாய்ப்பிருக்கு...
Bad Breath And Heart Disease In Tamil: உலகில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் வாய் துர்நாற்றம். நாம் உண்ணும் உணவுகளானது பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொண்டு, வாயில் உள்ள பாக்டீரியாக்களுடன் சேரும் போது வாய் துர்நாற்றம் வீசுகிறது.
மோசமான வாய் சுகாதாரத்தைக் கொண்டிருப்பவர்கள் இந்த பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவார்கள். இந்த வாய் துர்நாற்ற பிரச்சனையை ஹலிடோசிஸ் (Halitosis) என்றும் அழைப்பர்.

மோசமான உணவுப் பழக்கம், புகைப்பழக்கம் அல்லது நெஞ்செரிச்சல் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் வீசும். சில சமயங்களில் வாயில் இருந்து வீசும் கடுமையான துர்நாற்றம் இதய பிரச்சனைகளின் எச்சரிக்கை அறிகுறியாகவும் இருக்கலாம்.
வாய் துர்நாற்றம் மாரடைப்பை ஏற்படுத்துவதில்லை. ஆயினும் வாய் துர்நாற்றத்திற்கும், இதய நோய்க்கும் தொடர்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே நீங்கள் நீண்ட நாட்களாக கடுமையான வாய் துர்நாற்ற பிரச்சனையை சந்தித்து வந்தால், அதை புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
வாய் துர்நாற்றத்திற்கும், இதய நோய்க்கும் இடையேயான தொடர்பு
ஆய்வுகளின் படி, வாயில் உள்ள துர்நாற்றத்தை வீசும் பாக்டீரியாக்கள் ஈறுகளில் இருந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தத்தின் வழியாக பயணிக்கின்றன. அதுவும் அந்த பாக்டீரியாக்கள் ஈறுகளில் உள்ள நுண்ணிய திசுக்களில் ஊடுருவும் போது, அது உடலில் உள்ள மிகச்சிறிய ரத்த நாளங்களில் நுழைவதற்கான வழியை அறிந்து, ஒரு கட்டத்தில் அந்த பாக்டீரியாக்கள் இரத்த ஓட்ட அமைப்பிற்குள் நுழைந்து பயணிக்கத் தொடங்கும்.
இப்படி பாக்டீரியாக்கள் இரத்த ஓட்டத்தில் அதிகம் இருந்தால், அது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பை எதிர்த்துப் போராடி, ஒரு அழற்சி எதிர்வினையை உருவாக்குகிறது. ஒரு கட்டத்தில் இந்த அழற்சி எதிர்வினையால் தமனிகளில் வீக்கம் ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். எனவே தான் ஈறு நோய் உள்ளவர்களுக்கு இரத்த நாளங்கள் கடினமாவது, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான அபாயம் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
உலகெங்கிலும் சுமார் 30 சதவீத மக்கள் வாய் துர்நாற்ற பிரச்சனையை சந்திப்பதோடு, அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உள்ளனர். இன்னும் சிலர் தங்களுக்கு வாய் துர்நாற்ற பிரச்சனை இருப்பதை அறியாமல், மற்றவர்கள் கூறுவதைக் கொண்டு அறிந்து, ஒருவித அசௌகரியத்திற்கு ஆளாகிறார்கள். சில சமயங்களில் இந்த வாய் துர்நாற்ற பிரச்சனை ஒருவரது வாழ்க்கைத் தரத்தையும் மோசமாக பாதிக்கக்கூடும்.
வாய் துர்நாற்ற பிரச்சனைகளைத் தடுப்பது எப்படி?
வாய் துர்நாற்ற பிரச்சனைகளைத் தவிர்க்க வேண்டுமானால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி பற்களை சுத்தம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இப்படி செய்வதன் மூலம், ஈறுகள் மற்றும் பற்களில் உள்ள பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவற்றிற்கு சிகிச்சை மேற்கொள்ள வசதியாக இருக்கும். இது தவிர பின்வரும் ஒருசிலவற்றையும் மேற்கொள்ள வேண்டும். அவை:
* வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் புகையிலை, மது பானங்கள் மற்றும் சில உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
* மேலும் சர்க்கரை இல்லாத சூயிங் கம்மை வாயில் போட்டு மெல்ல வேண்டும்.
* பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இறைச்சிகளை அளவாக உட்கொள்ள வேண்டும்.
* தினமும் இரண்டு முறை பற்களை துலக்க வேண்டும் மற்றும் ஒருமுறை ஃப்ளாசிங் செய்ய வேண்டும்.
* சீரான இடைவெளியில் பல் மருத்துவரை அணுக வேண்டும்.
* ஆல்கஹால் இல்லா மௌத் வாஷ் கொண்டு தினமும் இரவு தூங்கும் முன் வாயை கொப்பளிக்க வேண்டும்.
* வாய் வறட்சியைத் தவிர்க்க, நாள் முழுவதும் போதுமான அளவு நீரைப் பருக வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications