Latest Updates
-
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்
இரவு உணவு சாப்பிட்ட பின்பு... இந்த ஸ்நாக்ஸை தெரியாம கூட சாப்பிடாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க!
இரவு உணவை சாப்பிட்டுவிட்டு, படுக்கைக்குச் செல்லும்போது, நீங்கள் மீண்டும் சாப்பிட விரும்புகிறீர்களா? உங்களுக்கு பசி உணர்வு இரவு நேரங்களில் எழுகிறதா? பெரும்பலான மக்களுக்கு இரவு நேரங்களில் சிற்றுண்டிகள் சாப்பிட விருப்பமாக இருக்கலாம்.
மக்கள் இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சியை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது, சாப்பிட விரும்பலாம். ஏதாவது சிற்றுண்டி சாப்பிட விரும்புவதாலும் இருக்கலாம் அல்லது உங்களுக்கு சில ஏக்கங்கள், மன அழுத்தம் அல்லது பசியின் காரணமாக கூட இன்னும் சாப்பிட விரும்பலாம்.

அப்படியானால் நள்ளிரவில் சாப்பிடுவது சரியா? என்றால், அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஆம், தொழில்நுட்ப ரீதியாக, நீங்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உணவு அல்லது அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் நள்ளிரவில் பசி எடுத்தால் ஏதாவது சாப்பிட வேண்டும்.
சரியான வகையான உணவுகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை குறைக்காது மற்றும் எடை அதிகரிப்பை ஊக்குவிக்காது. நள்ளிரவு சிற்றுண்டிக்கான சில நல்ல உணவு விருப்பங்கள் பற்றியும் நீங்கள் சாப்பிடக்கூடாத சிற்றுண்டிகள் பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
வால்நட்ஸ்
இயற்கையாகவே ஆரோக்கியமான தூக்கத்தை ஆதரிக்கும் மெலடோனின் என்ற கலவை இருப்பதால், வால்நட்ஸ் சரியான இரவு நேர சிற்றுண்டியாக உங்களுக்கு இருக்கும். வால்நட்ஸில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.
இது நரம்பு செயல்பாட்டை அமைதிப்படுத்தவும் ஆரோக்கியமான தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இது உங்கள் மனம் மற்றும் வயிறு இரண்டையும் நல்ல ஓய்வில் வைத்து, நல்ல தூக்கத்தை கொடுக்க உதவுகிறது.
தயிர்
தயிர் இரவு நேர சிற்றுண்டிக்கான மற்றொரு ஆரோக்கியமான விருப்பமாகும். இதில் குடலுக்கு ஏற்ற புரோபயாடிக்குகள் மற்றும் புரோட்டீன்கள் நிறைந்துள்ளன. இது உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கவும் இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்தவும் செய்கிறது. உங்கள் குளிர்சாதனப்பெட்டியில் உள்ளவற்றின் அடிப்படையில் சில செர்ரிகள் அல்லது பெர்ரிகளை தயிரோடு சேர்த்து நீங்கள் இரவு நேரத்தில் சாப்பிடலாம்.
பாப்கார்ன்
நள்ளிரவில் சாப்பிடக்கூடிய ஒரு வேடிக்கையான சிற்றுண்டி பாப்கார்ன். வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து பேக் செய்யப்பட்ட பாப்கார்ன்களைப் சாப்பிடக்கூடாது. ஏனெனில், அது ஆரோக்கியமானது அல்ல. அதற்கு பதிலாக, உப்பு சேர்க்காத பாப்கார்ன் கர்னல்களை வாங்கி, சிறிய எண்ணெய் மற்றும் மூலிகைகளைப் பயன்படுத்தி அவற்றை நீங்களே தயாரிக்க வேண்டும். பாப்கார்னில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த சிற்றுண்டி காலை வரை உங்களை திருப்தியாக உணர வைக்கும்.
பீட்சா
இரவு நேரங்களில் பீட்சா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், வயிற்று வலி, அசௌகரியம் மற்றும் வீக்கம் ஏற்படலாம். பீட்சாவில் அதிக கொழுப்புள்ள சீஸ், அமில சாஸ் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு ஆகியவை சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. இவை ஒன்றாக உங்கள் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
தானியங்கள்
இந்த காலை உணவை இரவில் தாமதமாக சாப்பிடுவதால் எந்தத் தீங்கும் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். இருப்பினும், இந்த முறுமுறுப்பான தானியங்களில் பெரும்பாலானவை சர்க்கரை நிறைந்தவை, படுக்கைக்கு முன் அதை உட்கொள்வது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்து இன்சுலின் அளவை அதிகரிக்கும்.
சிப்ஸ்
மோசமான இரவு நேர சிற்றுண்டிகளைப் பற்றி நாம் பேசும்போது சிப்ஸைத் தவறவிட முடியாது. இந்த சிற்றுண்டியில் உப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளில் அதிகமாக உள்ளது. 12 சிப்ஸில் உள்ள அதே கலோரிகள் 3 கப் பாப்கார்னில் உள்ளது. ஆதலால், உங்கள் சமையலறையில் சிப்ஸ்களை சேமித்து வைப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் நீங்கள் இரவு நேரத்தில் ஒரு பாக்கெட் அல்லது இரண்டை பாக்கெட்டுகளை கூட சாப்பிட நேரிடலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
