Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
சர்க்கரை நோயாளிகள் எலுமிச்சையை சேர்த்து கொள்ளலாமா? அப்படி சாப்பிட்டால் அவங்க உடலில் என்ன நடக்கும்?
சர்க்கரை நோயை நிர்வகிப்பதற்கான சிறந்த வழி உணவு கட்டுப்பாடாகும். சர்க்கரை மற்றும் சர்க்கரை உணவுகள் / பானங்கள் மட்டுமல்ல, உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உங்கள் உணவில் இருந்து சில உணவுகளை நீக்க வேண்டியதும் அவசியமாகும்.
உணவு கட்டுப்பாடு என்பது உணவை நீக்குதல் மற்றும் சேர்த்தல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. எலுமிச்சை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். இந்த பதிவில், நீரிழிவு நோயாளிகள் எலுமிச்சையை பயன்படுத்தலாமா மற்றும் எப்படி பயன்படுத்த வேண்டும் மற்றும் அதன் நன்மைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

எலுமிச்சையின் ஊட்டச்சத்துக்கள்
எலுமிச்சையில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது எடை இழப்பு நன்மைகளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அது மட்டும் அதன் பலன்கள் அல்ல. எலுமிச்சம்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது.
இரத்த சர்க்கரையை குறைக்கிறது
ஆய்வுகளின் படி, எலுமிச்சையில் குறைந்த ஜிஐ உள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. எலுமிச்சையில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அவை உடலில் உள்ள மாவுச்சத்து மற்றும் சர்க்கரையை உறிஞ்சுவதைத் தடுக்கின்றன. எலுமிச்சை சாப்பிடுவதால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது. எனவே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த எலுமிச்சை சிறந்தது.
நார்ச்சத்துக்கள் நிறைந்தது
எலுமிச்சையில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு அவசியம். நீரிழிவு நோயாளிகள் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் நார்ச்சத்து அதிகம் உட்கொள்ள வேண்டும்.
எலுமிச்சையில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இன்சுலின் சார்பு குறைகிறது. கூடுதலாக, எலுமிச்சை ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கும், இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.
இதயத்தைப் பாதுகாக்கும்
நீரிழிவு நோய் இலவச இணைப்பாக இதய பிரச்சினையை அழைத்து வரக்கூடியது, ஏனெனில் சர்க்கரை நோயாளிகள் இதய பிரச்சனைகளால் பாதிக்கப்படும் அதிக ஆபத்தில் உள்ளனர். எலுமிச்சையில் பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும், இது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட இதய பிரச்சினைகளின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது.
செரிமானத்தை ஊக்குவிக்கும்
சர்க்கரை நோய் சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால், அது மற்ற உறுப்புகளையும் பாதிக்கத் தொடங்குகிறது, எனவே, செரிமானப் பிரச்சினைகள் உட்பட அதிக சிக்கல்களை அனுபவிக்கலாம். நீரிழிவு நோய் அஜீரணம், வாயு, அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். செரிமான அமைப்பை மேம்படுத்த எலுமிச்சை இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.
எலுமிச்சை இயற்கையாகவும் விரைவாகவும் குடலைக் காலியாக்க உதவுகிறது, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது. எலுமிச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் எடை அதிகரிப்பு, வயிற்றுப் பிரச்சினைகள் மற்றும் இதுபோன்ற பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் எலுமிச்சையை எப்படி உணவில் சேர்த்துக் கொள்ளாலாம்?
எலுமிச்சை தண்ணீர்: காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீரைக் குடிப்பது உங்கள் நாளை சிறப்பாகத் தொடங்கவும், வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் ஒரு சிறந்த வழியாகும். இது உடலை சுத்தப்படுத்தவும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் நச்சுத்தன்மையை நீக்குகிறது.
உணவின் மீது எலுமிச்சை சாறு பிழிவது: சாலட், சூப், கறி அல்லது பருப்பு என எந்த உணவிலும் எலுமிச்சை சாற்றை சேர்க்கலாம். இது அதன் சுவையை அதிகரிக்கும் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கும்.
மாவுச்சத்து நிறைந்த உணவுகளில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்: இவை அதிக கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டிருக்கின்றன, அவை இரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம். எலுமிச்சை இந்த உணவுகளால் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

