Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
காலையில் 1 டம்ளர் சுடுநீரில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Ghee With Hot Water Benefits: உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நல்ல பழக்கவழக்கங்கள், உணவு முறைகள் போன்றவற்றை கொண்டிருக்க வேண்டும். அதுவும் ஆரோக்கியத்தை மேம்படுத்த காலையில் எழுந்ததும் ஒருசில பழக்கங்களைக் கொண்டிருப்பது மிகவும் நல்லது.
அனைவருக்குமே உணவில் நெய் சேர்த்து சாப்பிட பிடிக்கும். இந்த நெய் வெறும் உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிப்பது மட்டுமின்றி, உடலுக்கு ஏராளமான நன்மைகளையும் அளிக்கிறது. அதுவும் நெய்யை வெறுமனே உணவில் சேர்த்து சாப்பிடுவதை விட சுடுநீரில் கலந்து குடித்தால் இன்னும் நல்லது.

நெய்யில் DHA மற்றும் CLA போன்ற ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் உடலில் பல மாயங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இவை செரிமான செயல்முறை மேம்படுத்துவதோடு, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கீழே காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சுடுநீரில் 1 ஸ்பூன் நெய் கலந்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. செரிமான ஆரோக்கியம் மேம்படும்
ஆயுர்வேதத்தின் படி, நெய் உடலில் செரிமானத் தீயை தூண்டிவிட்டு, உணவுகள் சீராக செரிமானமாக உதவுகிறது. மேலும் நெய் குடலின் சுவற்றில் ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கி, செரிமான செயல்முறை மென்மையாக நடைபெற உதவுகிறது மற்றும் அசிடிட்டி, வயிற்று உப்புசம் போன்றவை ஏற்படுவதைத் தடுக்கிறது. சுடுநீர் செரிமான பாதையை மென்மையாக்க உதவி புரிந்து, குடலியக்கம் சீராக நடைபெற ஊக்குவிக்கிறது.
2. மலச்சிக்கல் நீங்கும்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடுநீரில் நெய் கலந்து குடித்து வந்தால், அதில் உள்ள மலமிளக்கும் பண்புகளால் குடலில் உள்ள நச்சுக்கள் சிரமமின்றி வெளியேற்றப்படும். இப்படி உடலில் இருந்து கழிவுகள் முறையாக வெளியேறினால் நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகள், உடல் சோர்வு மற்றும் மந்தநிலை போன்றவை தடுக்கப்படும்.
3. எடை இழப்புக்கு உதவும்
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், காலையில் எழுந்ததும் சுடுநீரில் நெய் கலந்து குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, வயிற்றைச் சுற்றியுள்ள விடாப்பிடியான கொழுப்புக்கள் கரைந்து வெளியேறும் மற்றும் உடல் எடையும் குறையும். அதோடு இது பசி ஏற்படாமல் தடுக்கும் மற்றும் உணவுகளின் மீதான அதிகப்படியான நாட்டத்தைக் குறைக்கும். மேலும் நெய்யில் உள்ள கொழுப்பு அமிலம் உடலில் ஆற்றலுக்காக பயன்படுத்தப்பட்டு, உடலில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுக்கும். ஆயினும் நெய்யை அளவாக உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. சருமத்திற்கு நல்லது
நெய்யில் உள்ள மாய்ஸ்சுரைசிங் பண்புகள் சருமத்தை நீரேடற்றத்துடனும், உடலினுள்ளே பொலிவாக இருக்கவும் உவுகிறது. அதுவும் இதில் உள்ள கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின்கள் சருமத்திற்கு இயற்கை பொலிவை அளிக்கிறது. அதோடு நெய்யில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், செல்களை மீண்டும் உருவாக்கவும், சருமத்தில் தோன்றும் முதுமைக்கான அறிகுறிகளைத் தடுக்கும். எனவே சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க சுடுநீரில் நெய் சேர்த்து குடியுங்கள்.
5. மூளை ஆரோக்கியம் மேம்படும்
நெய் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இது அறிவாற்றல் செயல்பாடு, நினைவாற்றல் மற்றும் செறிவு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. அதுவும் சுடுநீரில் நெய் கலந்து குடிக்கும் போது, நீண்ட ஆற்றல் கிடைக்கிறது. மாணவர்கள் நெய்யை தவறாமல் உட்கொண்டு வந்தால், அது குழந்தைகள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு, கற்றல் திறன் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும்.
6. மூட்டுகளுக்கு நல்லது
மூட்டு வலியால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் காலையில் சுடுநீரில் நெய் கலந்து குடியுங்கள். இதனால் நெய் மூட்டுகளை நன்கு உயவூட்டவும், நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், மூட்டு விறைப்பைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின்கே2 உள்ளது, இது எலும்புகளில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது.
7. இனப்பெருக்கத்திற்கு நல்லது
நெய்யானது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் போன்ற நல்ல ஹார்மோர்களின் உற்பத்தியை ஆதரிக்கிறது. மேலும் மாதடாய் சுழற்சியை சீராக்குகிறது மற்றும் PMS அறிகுறிகள குறைக்கிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வயிற்று பிடிப்புகள், வயிற்று உப்புசம் போன்ற மாதவிடாய் கால அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications