Latest Updates
-
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க
ஆபிஸ் போறவரா நீங்க? உங்களோட இந்த தவறுகள் உங்களுக்கு தீராத முதுகுவலியை உண்டாக்குமாம்...!
அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு முதுகு வலி ஏற்படுவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இருப்பினும், பொதுவானதாகவும் பரவலாகவும் இருப்பதால் அது சாதாரணமானதாகிவிடாது. பெரும்பாலான அலுவலக பணியாளர்கள் முதுகு, கழுத்து அல்லது மூட்டு வலி போன்ற சில வகையான உடல் வலிகளால் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

பயங்கரமான முதுகுவலியானது நீங்கள் வேலையில் கவனம் செலுத்துவதைப் பாதிக்கிறது மற்றும் வேலைக்கு வெளியில் உள்ள உங்கள் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இது இறுதியில் வலி நிவாரணிகளை நோக்கி உங்களை அழைத்துச் செல்கிறது. அலுவலக நேரங்களில் மக்கள் செய்யும் சில பொதுவான தவறுகள், முதுகுவலி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது
உங்கள் மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க நீரேற்றம் அவசியம், இது முதுகில் வலியைக் குறைக்க உதவுகிறது. உங்கள் மேஜையில் ஒரு பெரிய தண்ணீர் பாட்டிலை வைத்து, நாள் முழுவதும் தண்ணீரைப் பருகிக்கொண்டே இருங்கள்.
புரோட்டின் குறைபாடு
உங்கள் உணவில் வருதல், போதுமான புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும் உங்கள் முதுகுவலியை மோசமாக்கும். உடலுக்குள் வளர்ச்சி மற்றும் உறுப்புகளின் சேதத்தை சரிசெய்ய புரதம் அவசியம்.
அதிகளவு சர்க்கரை நுகர்வு
உங்கள் அலுவலக நேரத்தில் இனிப்புகளை சாப்பிடும் பழக்கம் அல்லது சர்க்கரை கலந்த பானங்கள் அருந்தும் பழக்கம் இருந்தால், உங்கள் உணவுமுறை உங்கள் முதுகு வலிக்கு காரணமாக இருக்கலாம். அதிகப்படியான சர்க்கரை வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் முதுகில் வலிமையை உருவாக்க தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கும்.
நீண்ட நேரம் அமர்ந்திருப்பது
உங்கள் முதுகுவலிக்கு நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது மிகவும் வெளிப்படையான காரணங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் குறைந்தது 10 நிமிடங்களுக்கு நகர்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வேலையில் மூழ்கி, நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால், உங்கள் மொபைலில் எழுந்து நடப்பதற்கான அலாரமை வைக்கவும். தொடர்ந்து உட்கார்ந்திருப்பதால் சிறிது காலமாக பயன்படுத்தப்படாத தசைகளை செயல்பாட்டில் ஈடுபடுத்த நடைபயிற்சி ஒரு எளிய வழியாகும்.
மனஅழுத்தம்
உங்கள் மனமும் உடலும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டவை, அதனால்தான் உங்கள் மன அழுத்தம் உடல் வலியாக வெளிப்படும். மன அழுத்தத்தில் இருக்கும் போது, உங்கள் உடல் முதுகெலும்புகளைச் சுற்றியுள்ள குறுகிய தசைகளை இறுக்குகிறது, இதனால் அவை சீரமைக்கப்படாமல் பாதிக்கப்படலாம் மற்றும் முதுகுவலிக்கு வழிவகுக்கும். பொதுவாக, அதிகமான பணிச்சுமை மற்றும் மோசமான வேலை காரணமாக மக்கள் வேலையில் மன அழுத்தத்தை அனுபவிக்கின்றனர். மனஅழுத்தத்தை நிர்வகிக்க ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தல் போன்றவற்றை நாடுவது பாதிப்பை அதிகரிக்கும். உங்கள் மன அல்லது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில் உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான வழிகளைக் கண்டறிவது அவசியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


