Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
பல முயற்சிகளுக்கு பிறகும் எடை குறையவில்லையா? கவலைய விடுங்க.. இனி இந்த தவறுகளை செய்யாதீர்கள்!
அதிக எடை காரணமாக பலர் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். எனவே, பெரும்பாலானோர் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிதாகத் தெரிந்தாலும், பலருக்கு இது ஒரு சவாலாகதான் இருக்கிறது.
இன்றைய நவீன யுகத்தில் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவரும் என்னென்னவோ வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். ஆனால் அனைத்தும் கை கொடுக்கின்றதா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். எந்தளவிற்கு உணவு பழக்கங்களை கட்டுப்படுத்தினாலும், குறிப்பிட்ட வகை உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டாலும் சிலரால் எடையை குறைக்கவே முடிவதில்லை. அதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வராததுதான். ஏனெனில் உடல் எடையை குறைப்பது மிகவும் கடினமான பணி. இந்த எடை இழப்பு பயணத்தில் செய்யக்கூடாத சில தவறுகள் உள்ளன. எனவே உடல் எடையை குறைக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

போதுமான தூக்கம்: இரவில் சீக்கிரமாக உறங்க சென்று விட வேண்டும். அவ்வாறு செய்வதினால் வழக்கத்தை விட அதிக நேரம் தூங்க முடிவதுடன் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், உடல் தன்னை ரீசார்ஜ் செய்து கொள்ளவும் மிகவும் உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் குறைவான நேரம் தூங்கினால், தூங்காத நேரத்தில் உடலை புத்துணர்ச்சியோடு வைக்க நாம் அதிக உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். இது உடலில் அதிக அளவுகள் கலோரிகள் சேர்ந்து எடை குறைப்பதற்கு தடையாக இருக்கும். எனவே குறைந்தபட்சம் 8 மணி நேர தூக்கமாவது அவசியம்...
ஜீ நியூஸ் அறிக்கையின்படி, உங்களுக்கு போதுமான தூக்கம் வரவில்லை என்றால், உங்கள் உடல் கிரெலின் என்ற ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்கிறது, இது உங்களுக்கு பசியை உண்டாக்குகிறது. மேலும், தூக்கமின்மை உங்கள் உடலில் லெப்டின் என்ற ஹார்மோனின் உற்பத்தியைக் குறைக்கும். இது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
சரியாக சாப்பிடாமல் இருப்பது: குறைவாக சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இது பொய். குறைந்த கலோரி உணவை உட்கொள்வதன் மூலம் ஆரம்பத்தில் உடல் எடையை குறைக்கலாம். ஆனால் நீங்கள் சாதாரண உணவை உங்கள் உணவாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தவுடன், உங்கள் எடையில் ஏற்ற இறக்கம் ஏற்படும். எனவே, உடல் எடையை குறைக்கும் போது சமச்சீரான உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஒரே மாதிரியான உணவு உட்கொள்ளல்: உடல் எடையை குறைக்க ஒரே உணவை சாப்பிட்டு சலிப்படையலாம். அப்படி சலிப்படையும் போது ந்அப்படி மற்ற உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை உடனே கூடும். எனவே உங்கள் உணவில் பலவகையான உணவுப் பொருட்களைச் சேர்த்து சாப்பிடுங்கள். இது சலிப்பைக் குறைக்கவும், உணவை நன்கு ஜீரணிக்க உங்கள் சமநிலைக்கு உதவும். உதாரணமாக புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை அகற்ற வேண்டாம். இவை அனைத்தையும் சமசீராக எடுத்துக் கொள்ளலாம் என்கின்றனர் ஊட்டசத்து நிபுணர்கள்.
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார வேண்டாம்: ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். வழக்கமான உடற்பயிற்சி, நடைபயிற்சி உங்கள் எடை இழப்பு பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இதன் காரணமாக உடலின் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் இது உங்களை ஆற்றலுடன் வைத்திருக்க உதவுகிறது.
காலையில் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும் : காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் செரிமானத்திற்கும் உதவுகிறது. நம்முடைய கலாச்சாரங்களில் இந்த சுடு தண்ணீர் குடிப்பது என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே இருந்து வந்துள்ளது.
புரதங்கள் நிறைந்த காலை உணவு : காலை உணவு எடுத்து கொள்ளும்போது புரதங்கள் அதிக அளவு சேர்த்து கொள்வது நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடும், சக்தியுடனும் இருக்க உதவும். புரதங்கள் நிறைந்த காலை உணவிற்கு முட்டைகள், முளைகட்டிய பயறு வகைகள் ஆகியவற்றை தேர்ந்தெடுத்துக் உண்ணலாம்.
சூரிய ஒளியில் சிறிது நேரம் செலவழியுங்கள் : ஒரு நாளைக்கு சிறிது நேரம் ஆவது சூரிய ஒளி நம் மீது படுமாறு செய்ய வேண்டும். அது எப்படி சூரிய ஒளியினால் எடை குறையும் என்ற கேள்வி வரலாம். சூரிய ஒளி நம்முடைய சருமத்தின் மீது நேரடியாக விழும்போது அது தோலுக்கு அடியில் உள்ள கொழுப்புகளை சிதைத்து எடை குறைப்பிற்கு உதவுகிறது.
ஆரோக்கியமான உடலுக்கு அனைத்து வகையான உணவுகளும் அவசியம்: நீங்கள் எந்த உணவு வகையையும் முற்றிலும் தவிர்த்துவிட்டால், உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகலாம். எனவே, உணவியல் நிபுணரின் ஆலோசனையின்படி புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு நிறைந்த சரிவிகித உணவை உண்ணுங்கள். மேலே கூறிய விஷயங்களை தொடர்ந்து கடைபிடித்து வர உடல் எடையை மிக எளிதாக குறைக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











