Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
இரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை நீங்க சாப்பிடுறீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்து ஏற்படலமாம்!
கோடையில் வெயிலை விட மிகவும் பிரபலமானது மாம்பழம். கோடை காலம் தொடங்கியதிலிருந்து மாம்பழத்தை நாம் சுவைத்து கொண்டிருக்கிறோம். அவை, நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறன என்பது நம் அனைவரும் அறிந்ததே.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், நல்ல இனிப்பு சுவையை கொண்டுள்ளதால், சியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை சாப்பிட விரும்புவார்கள். இவற்றின் நுகர்வு அதிகமாக இருப்பதால், சந்தைகளில் சில இடங்களில் இரசாயனங்களால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன.

வலுக்கட்டாயமாக பழுக்க வைக்கப்படும் இந்த மாம்பழங்கள் இயற்கையாக பழுத்த மாம்பழத்திற்கு வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால் அதை உட்கொண்டால் பல உடல்நல அபாயங்கள் ஏற்படலாம். செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால், ஏற்படும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மிகவும் பொதுவான உடல்நல அபாயங்கள்
ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை ஒருவர் சாப்பிடும்போது, வாந்தி, வயிற்றுப்போக்கு, சில சமயங்களில் இரத்தப்போக்கு, தீவிர பலவீனம், மார்பில் அமிலத்தன்மை போன்ற உணர்வு, தலைவலி போன்ற பக்கவிளைவுகள் காணப்படுகின்றன.
சில சமயங்களில், ரசாயனங்கள் மனித உடலுக்குள் மிகத் தீவிரமாக செயல்படும் போது, ஒரு நபருக்கு தோலில் புண்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கண்களில் பாதிப்பு ஏற்படலாம் மற்றும் தொண்டையில் சிரமம் ஏற்படலாம். மேலும், இது உணவு விழுங்கும் திறனைக் குறைக்கிறது மற்றும் கண்களில் எரியும் உணர்வை ஏற்படுத்தலாம்.
கவனமாக இருக்க வேண்டிய பிற பக்க விளைவுகள்
இரசாயனம் கலந்த பழுத்த மாம்பழங்களை உட்கொள்வதால் ஏற்படும் நேரடியான பக்கவிளைவுகளைத் தவிர, இருமல், புண்கள் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளும் இருக்கலாம். மாம்பழம் சாப்பிட்ட உடனே மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், உடனே தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம்
இரசாயனம் கலந்த பழுத்த மாம்பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் பொதுவான பக்க விளைவு ஹைபோக்ஸியா. ஹைபோக்ஸியா என்பது போதுமான ஆக்ஸிஜன் திசுக்களை அடையாத ஒரு நிலை மற்றும் பெரும்பாலும் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும் போது ஏற்படுகிறது.
ஹைபோக்ஸியா மயக்கம், தூக்கம், நினைவாற்றல் இழப்பு, கால்களில் உணர்வின்மை, குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் வலிப்பு போன்ற தனித்துவமான அறிகுறிகளை ஏற்படுத்தும்.
மாம்பழங்களை பழுக்க வைக்கும் ரசாயனங்கள் என்ன?
பொதுவாக மாம்பழங்களை பழுக்க கால்சியம் கார்பைடு பயன்படுத்தப்படுகிறது. தாவர வளர்ச்சி சீராக்கியான எத்தஃபோன் மாம்பழங்களை பழுக்க வைக்கவும் பயன்படுகிறது. இந்த இரசாயனங்கள் அசிட்டிலீனை உற்பத்தி செய்கின்றன, இது மாம்பழங்களை அதன் சரியான நேரத்தை விட விரைவாக பழுக்க வைக்க உதவுகிறது.
இந்த இரசாயனங்கள் மாம்பழத்தில் உள்ள தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உடைக்கிறது. அதோடு, ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் போன்ற நச்சுத் தனிமங்களும் அதில் நிறைந்துள்ளன.
இயற்கையாக பழுக்கவைக்கப்பட்டதா இல்லையா என்பதை எப்படி அறிவது?
இயற்கையாகப் பழுத்த மாம்பழங்கள் என்றால், அவை முழுமையாகப் பழுக்கும் வரை மரத்தில் இருக்கும், பின்னர் மரத்தில் இருந்து பறித்து உண்ணப்படும். இல்லையெனில், மாம்பழங்கள் பச்சையாக இருக்கும்போது மரங்களிலிருந்து பறிக்கப்பட்டு, விரைவாக பழுக்க வைக்க ரசாயனங்கள் கொடுக்கப்படுகின்றன.
இயற்கையான மாம்பழங்கள் பழுக்க வைப்பதற்காக வானிலை, பறவைகள் மற்றும் பிற கூறுகள் போன்ற இயற்கையின் தாக்கத்தை எதிர்கொள்கின்றன. இரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், பார்க்க கவர்ச்சியாக இருக்கலாம். ஆனால், அவை உடலுக்கு பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
இயற்கையான மாம்பழங்கள் மரத்தில் இருந்து பெறப்படும்போது, ஒரு தனித்தன்மையான வாசனை மற்றும் சுவையை கொண்டது. செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கூர்மையான சுவை கொண்டவை. இதற்கு பெரும்பாலும் இரசாயனங்கள் காரணமாகும்.
சீசன் இல்லாத போது மாம்பழங்களை வாங்க வேண்டாம். சீசனுக்கு முன்னதாகவோ அல்லது சீசன் முடிந்த பிறகும் பழங்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். சீசன் காலத்தில் மாம்பழங்களை வாங்கி சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













