Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
கருத்தடை மாத்திரைகள் மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா? ஆய்வு செல்வது என்ன?
Breast Cancer In Tamil: வாய் வழியாக உட்கொள்ளப்படும் கருத்தடை மாத்திரைகள் அனைத்தும் மார்பக புற்றுநோய்க்கான ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்று ஒரு புதிய ஆய்வு தொிவிக்கிறது. இவை ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டிரோன் ஆகியவை கலந்த கருத்தடை மாத்திரைகளாக இருக்கலாம் அல்லது ப்ரோஜெஸ்டிரோன் மட்டும் உள்ள கருத்தடை மாத்திரைகளாக இருக்கலாம்.
ஆய்வின்படி சமீப காலங்களில் ப்ரோஜெஸ்டிரோன் மட்டும் கலந்த கருத்தடை மாத்திரைகளை பெண்கள் உட்கொள்ளத் தொடங்கியுள்ளனா். அந்த மாத்திரைகளால் மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு கூறுகிறது.

மேலும் இந்த ஆபத்திற்கும், ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டிரோன் கலந்த பாரம்பாிய கருத்தடை மாத்திரைகளை உண்பதால் ஏற்பட்ட மார்பக புற்றுநோய் ஆபத்துக்கும் தொடா்பு உள்ளது என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.
இதிலிருந்து, பழைய கால கருத்தடை மாத்திரைகளாக இருந்தாலும், புதிய கருத்தடை மாத்திரைகளாக இருந்தாலும், அவை மார்பக புற்றுநோய்க்கான ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பது தெளிவாகிறது. பிறப்பைக் கட்டுப்படுத்தும் இந்த கருத்தடை மாத்திரைகளால் 20 முதல் 30 சதவீதம் வரை மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு என்று ஆய்வு தொிவிக்கிறது.
கருத்தடை மாத்திரைகள்
கருத்தடை மாத்திரைகள் ஹாா்மோன் ரீதியாக குழந்தைப் பிறப்பை அல்லது கருவுறுவதை தடை செய்கின்றன. அவை இரண்டு வகையானவை. அவை ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டிரோன் ஆகியவை கலந்த கருத்தடை மாத்திரைகளாக இருக்கலாம் அல்லது ப்ரோஜெஸ்டிரோன் மட்டும் உள்ள கருத்தடை மாத்திரைகளாக இருக்கலாம். அவை கருப்பையில் இருந்து கருமுட்டை வெளி வருவதைத் தடுக்கும் அல்லது கருப்பை வாயின் தடிமனை மாற்றும். அதன் மூலம் கா்ப்பத்தைத் தடுக்கும்.
புதிய ஆய்வு
ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் ஒரு புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு ப்ளாஸ் மெடிசின் ஜொ்னல் (PLOS Medicine journal) என்ற பத்திாிக்கையில் வெளியிடப்பட்டது. மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 50 வயதிற்குட்பட்ட 10,000 பெண்கள் இந்த ஆய்வு பாிசோதனையில் கலந்து கொண்டனா்.
சமீபத்தில் அவா்கள் எடுத்துக் கொண்ட கருத்தடை மாத்திரைகளும், அதனால் அவா்களுக்கு ஏற்பட்ட மார்பக புற்றுநோயும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வு முடிவில் அவா்களுக்கு ஏற்பட்ட புற்றுநோய்க்கு அவா்கள் உட்கொண்ட கருத்தடை மாத்திரைகளுக்கும் பங்கு உண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆய்வாளா்கள் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த, 50 வயதிற்குட்பட்ட 9,498 பெண்களின் தரவுகளையும், மார்பக புற்றுநோய் இல்லாத 18,000 பெண்களின் தரவுகளையும் வைத்து ஒப்பிட்டு ஆய்வு செய்தனா். ஆய்வின் முடிவில் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெண்களில் 44 சதவீதம் போ் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டது தொிய வந்தது.
ஆய்வு முடிவு
கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாத பெண்களை விட, கருத்தடை மாத்திரைகளை உண்ட பெண்களுக்கு அதிகமான புற்றுநோய் ஆபத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பழைய ஆய்வுகளோடு ஒப்பிட்டுப் பாா்க்கும் போது, கருத்தடை மாத்திரைகளால், மார்பக புற்றுநோய் அதிகாித்திருக்கிறது என்பது இந்த புதிய ஆய்வில் தொிந்திருக்கிறது. அதாவது கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொண்ட, 16 முதல் 20 வயதிற்குட்பட்ட 100,000 போில் 8 போ் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனா் என்பது தொிய வந்தது.
அதாவது 0.084%லிருந்து 0.093% அதிகாித்திருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில் 35 முதல் 39 வயதிற்குட்பட்ட 100,000 போில் 265 போில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டனா் என்று தொிய வந்தது. அதிகாிப்பு விகிதம் 2%லிருந்து 2.2% ஆகும்.
எனினும் கருத்தடை மாத்திரைகளை உண்ணக்கூடாது என்றோ அல்லது, குறைத்துக் கொள்ள வேண்டும் என்றோ ஆய்வு பாிந்துரைக்கவில்லை. பங்கெடுத்த பெண்களின் தரவுகள் போதுமானதாக இல்லாததால், கருத்தடை மாத்திரைக்கும், மார்பக புற்றுநோய்க்கும் இடையே உள்ள நீண்ட கால தொடா்பைக் கண்டறிய முடிவில்லை.
கருத்தடை மாத்திரைகளை முற்றிலும் ஒழிக்க முடியுமா?
கருத்தடை மாத்திரைகளால், மார்பக புற்றுநோய்க்கான ஆபத்து அதிகாிக்கும் என்று தொிந்தாலும், அந்த மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஆய்வு பாிந்துரைக்கவில்லை. கருவுறுவதைத் தடுப்பதற்காக மட்டும் கருத்தடை மாத்திரைகள் மருத்துவா்களால் பாிந்துரைக்கப்படுவதில்லை.
மாறாக, மாதவிடாய் நேரத்தில் அதிதீத இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்துவதற்கும், முகப்பருக்களைக் குணப்படுத்தவும், சினைப்பை நோய்க்குறி (PCOS), இரத்த சோகை, பிற கட்டிகளைக் குணப்படுத்தவும் கருத்தடை மாத்திரைகள் பாிந்துரைக்கப்படுகின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications