தைராய்டு நோயை வரவிடாமல் தடுக்கும் 4 ஆரோக்கிய குறிப்புகள்!!

By: Peveena Murugesan
Subscribe to Boldsky

தைராய்டு சுரப்பியானது பழுப்பு-சிவப்பு நிறத்தில் அதிக ரத்த நாளங்களைக் கொண்டுள்ளது.இவற்றின் வழியாக உள்ள நரம்புகள் குரலிற்கு முக்கியமானதாக உள்ளது.

4 Healthy tips to cure thyroid disorders

முன் கழுத்தில் தைராய்டு சுரப்பி வண்ணத்து பூச்சி வடிவில் உள்ளது. இரு பக்கமும் சிறு நுரையீரல் வடிவமும் அதை இணைக்கும் ஒரு பாலமும் போன்ற வடிவமைப்பில் உள்ளது.தைராய்டு சுரப்பி சாதாரணமாக உள்ள போது அதை நம்மால் உணர முடியாது.

இந்த சுரப்பி நிறைய ஹார்மோன்களை சுரக்கிறது.இவையே தைராய்டு ஹார்மோன்கள் ஆகும்.முக்கிய ஹார்மோன்கள் தைராக்சின் (T4) ஆகும். உடலில் வளர்ச்சிதை மாற்றம்,வளர்ச்சி மற்றும் தூண்டுதல் மற்றும் உடலின் வெப்பநிலை ஆகியவற்றிற்கு உதவுகிறது மற்றும் போதுமான தைராய்டு ஹார்மோன் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.சாப்பிடும் வேகத்தை மெதுவாக்க வேண்டும்

1.சாப்பிடும் வேகத்தை மெதுவாக்க வேண்டும்

உணவை வேகமாக உண்ணும் போது உணவானது விரைவாக,நேரடியாக வயிற்றுக்குள் செல்கிறது.இவ்வாறு செய்யும்போது மூளையையும்,உடலையும் இணைக்கும் பாலம் வலுவிலக்கிறது.இதனால் வயிற்றின் தொடர்ச்சியாக செய்யும் பணி தடை படுகிறது.

எனவே அமர்ந்து நிதானமாக உணவை மென்று சாப்பிட வேண்டும்.தைரொய்டு சுரப்பியானது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேற்கூறியவாறு உண்பதால் சுரப்பியானது வயிற்றுக்குள் உணவு நுழைவதை பதிவு செய்து வயிற்றின் தொடர்ச்சியான வேலையைத் தூண்டுகிறது.

2.கைபேசி அதிகமாக உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

2.கைபேசி அதிகமாக உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

தொலைபேசிக்கும்,மூளையில் உள்ள கட்டிகளுக்கும் தொடர்பு இருப்பது ஏற்கனவே நமக்கு தெரிந்த விஷயம் தான் ஆனால் அந்த சிறிய தொலைபேசியில் பேசுவதால் அவற்றில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் தைராய்டு சுரப்பியை பாதிக்கிறது.இதற்கு ஒரு நல்ல மாற்று என்னவெனில் கைபேசியில் நேரடியாக பேசாமல் ஹெட் செட் மூலம் பேசலாம்.

3.உங்கள் உண்மையை கண்டுபிடியுங்கள்.

3.உங்கள் உண்மையை கண்டுபிடியுங்கள்.

நமது உடற்கூறியல் அமைப்பின் அடிப்படையில் தைராய்டு சுரப்பியானது உடலில் தொண்டையில் அமைந்துள்ளது.ஹைபோ-தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் தனது பிரச்சனைகளை வெளியில் சொல்லாமல் விழுங்க முனைகின்றனர்.அவர்கள் தங்கள் உண்மைகளை சொன்னால் மட்டுமே குணமடைய வாய்ப்பு உள்ளது.

4.யோகா செய்ய வேண்டும்.

4.யோகா செய்ய வேண்டும்.

யோகாசனங்கள் நாளமில்லா சுரப்பிகளை தூண்டி,சுரப்பினைஅதிகரிக்கிறது.குறிப்பாக சர்வாங்காசனம் தைராய்டு சுரப்பியை தூண்டி பயன் அளிப்பதாக உள்ளது.

தைராய்டு நோய்கள் :

தைராய்டு நோய்கள் :

காய்டர் - அயோடின் குறைபாட்டால் ஏற்படுகிறது.அதிகம் பாதிக்காது.

தைராய்டு அலர்ஜி - வைரஸ் தொற்று மூலம் ஏற்படுகிறது.வலியை ஏற்படுத்தும்.

ஹைப்பர் தைராய்டு - சுரப்பி அதிக அளவு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பதால் ஏற்படும்.

ஹைபோ தைராய்டு-: சுரப்பி குறைந்த அளவு தைரொய்டு ஹார்மோன்களை சுரப்பதால் ஏற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

4 Healthy tips to cure thyroid disorders

4 Healthy tips to cure thyroid disorders
Story first published: Wednesday, February 22, 2017, 19:00 [IST]
Subscribe Newsletter