ஃபேஷன் விரும்பிகளா நீங்க? அடுத்த ட்ரெண்ட் இது தான்!

Posted By: Aashika
Subscribe to Boldsky

 

 IIFA 2017 முடிந்தாலும் இன்னும் அதைச் சுற்றியே பேச்சுக்கள் இருக்கிறது. சில ட்ரோல்கள் பல சர்ச்சைகள் என நாம் கவனம் செலுத்திக் கொண்டிருந்த அதே வேலையில் IIFA வில் அறிமுகமான புது பேஷன் ட்ரெண்ட்களை நாம் கவனிக்க தவறிவிட்டோம்.

இந்தாண்டு IIFA வில் ரீசைக்கிளிங் செய்யப்பட்ட காமோஃப்ல்ட்ஜ் ப்ரிண்ட் செய்யப்பட்ட ஆடைகளை அதிகம் முன்னுரிமை கொடுத்திருந்தனர். பல பிரபலங்களும் அந்த ஆடைகளிலேயே வந்திருந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆலியா பட் :

ஆலியா பட் :

விருது நிகழ்ச்சிக்கு வரும் போதே ஆலியா அந்த உடையில் இருந்தார். நியூயார்க் செல்வதற்காக விமான நிலையம் வந்த போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

அப்போது, காமோஃப்ல்ட்ஜ் ப்ரிண்ட்ஸில் செய்யப்பட்ட நீண்ட ஜாக்கெட்டை கருப்பு உடையுடன் அணிந்திருந்தார் அதற்கு ஏற்றார் போல கருப்பு நைக் பூட்ஸ் கச்சிதமாக் இருந்தது.

 கரன் வாஹி :

கரன் வாஹி :

நிகழ்ச்சிக்கு வரும் போது, காமோஃப்லட்ஜ் ப்ரிண்ட் சட்டையை அணிந்து வந்திருந்தார் கரன் வாஹி. வெள்ளை நிற ‘வி' நெக் சட்டையும் கார்கோ பேண்டுடனும் இந்த காமோஃப்லட்ஜ் சட்டை கச்சிதமாக இருந்தது.

நிகழ்ச்சியின் போது இன்னும் க்ராண்ட் லுக்கிற்கு அவர் அணிந்திருந்த பாசிகள் நிறைந்த ப்ரேஸ்லெட்,லெதர் வாட்ச்சுடன் குறுந்தாடியும் நக்கல் புன்னகையுடன் செம்ம லூக் ஹீரோ! கூலர்ஸ் தவிர்த்திருந்திருக்கலாம்..

கரன் ஜோஹர் :

கரன் ஜோஹர் :

எல்லாரும் காமோஃப்ல்ட்ஜ் ப்ரிண்ட் உடையில் ஒரு முறை சிக்க இவர் இரண்டு முறை காமிரா கண்களில் சிக்கியிருக்கிறார். முதலாவது தான் நியூயார்க் இறங்கியதுமே செல்ஃபி எடுத்து தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்தார் அப்போதும் பிரிண்டட் உடை.

அதே நாளில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்ற போது காமோஃப்லட்ஜ் ப்ரிண்டட் லாங் ஜாக்கெடுடன் கருப்பு நிற லூஸ் பேண்டுடன் போஸ் கொடுக்க காமெரா கண்களில் இரண்டாவது முறையாக சிக்கிவிட்டார்.

ராஜ் குந்த்ரா :

ராஜ் குந்த்ரா :

ஷில்பா ஷெட்டி தன் கணவரும் பிரபல தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவுடன் வந்திருந்தார்.

அவர் வெள்ளை நிற டீஷர்ட், ப்ளூ டெனிம் பேன்டுடன் க்ரே நிறத்திலான காமோஃப்லட்ஜ் பிரிண்டட் ஜாக்கெட் அணிந்திருந்தார்.

தன்னுடைய லுக்கை இன்னும் முழுமையாக்கும் விதமாக கருப்பு நிற கூலர்ஸ், கருப்பு நிற ஷூ என ராயல் லுக்கில் இருந்தார் ராஜ் குந்த்ரா.

சுனில் ஷெட்டி :

சுனில் ஷெட்டி :

இவர் தன்னுடைய மனைவி மானா ஷெட்டியுடன் வந்திருந்தார். இருவருமே கருப்பு நிறத்தில் ஆடைஅணிந்திருக்க, சுனில் செட்டி காமோஃப்லட்ஜ் பிரிண்டட் கார்கோ பேண்ட் அணிந்திருந்தார். டபுள் ப்ளாக் ஷர்ட்ஸ், டபுள் கூலர்ஸ் என கவர்ந்த ஜோடி .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion
English summary

IIFA Trend You OverLook.

trend of camouflage printed fashion during IIFA season
Story first published: Thursday, July 20, 2017, 11:16 [IST]