தன்னோட குறையை ஜஸ்ட் அப்டி ஓரமா ஒதுக்கி, ஃபேஷன் துறையில் கலக்கும் அழகி!!

Posted By: Aashika
Subscribe to Boldsky

பேஷன் உலகில் தினமும் புதுப்புது ட்ரெண்ட் வருவதும் அதனை கடந்து செல்வதும் நம் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது. பலரது பெரும் கனவாகவே இருக்கும் மாடலிங் துறையில் சாதித்திருக்கிறார் மாற்றுத் திறானாளி பெண் ஒருவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டவுன் சிண்ட்ரோம் :

டவுன் சிண்ட்ரோம் :

மாடலிங் துறையில் பல விசித்திரங்களை பார்த்திருப்போம் மாற்றங்களை விரும்பி வரவேற்கும் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் இந்த கேட்டீ மியடேவுக்கு வரவேற்பு அதிகம்.

கடந்த வருடம் நடைப்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார் கேட்டி. இந்த வருடம் மாடல் ஆகிவிட்டிருக்கிறார். டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட பெண் மாடல் ஆவது இதுவே முதன் முறை.

Image Courtesy

அழகை உணர்ந்த தருணம் :

அழகை உணர்ந்த தருணம் :

ஒவ்வொருவருக்குள்ளும் அழகை உணரச் செய்த உன்னத தருணம் அது. டவுன் சிண்ட்ரோம் உட்பட பல குறைபாடுகளுடைய மாற்றுத்திறனாளிகள் இந்த பேஷன் உலகில் தடம் பதிப்பது அபூர்வம். அதனை மாற்றிக் காண்பித்து விட்டார் கேட்டீ. ஒவ்வொருவருக்குள்ளேயும் அழகு இருக்கும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

Image Courtesy

இளம் வயதில் :

இளம் வயதில் :

வளரும் போது அவரது பெற்றோர் மியோன்ஸ், மற்றும் லோவா கேட்டீக்கு வித விதமான ஆடைகளை மேக்கப்களையும் போட்டு அழகு பார்ப்பாராம். குழந்தையாய் இருக்கும் போதே இரண்டு முறை ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பள்ளிக்குச் செல்லவில்லை கேட்டீ.

Image Courtesy

20 வயதில் :

20 வயதில் :

பிறக்கும் போதே டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருந்த கேட்டீ உடலளவிலும் மனதளவிலும் சோர்ந்தே தான் காணப்பட்டார். தன்னுடைய 20வயதில் தான் அத்லெட் ஆவதற்கான தயாரிப்புகளை முன்னெடுத்திருக்கிறார்.

Image Courtesy

விமர்சனங்களுக்கு பதில் :

விமர்சனங்களுக்கு பதில் :

வெளியிடங்களில் எல்லாம் மற்ற சாதராண குழந்தைகளை நடத்துவது போல நடத்துவதில்லை, எப்போதும் நாங்கள் ஒதுக்கப்படுவோம். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே பல்வேறு விளையாட்டுகளில் பங்கெடுக்கிறேன் என்று சொல்லும் கேட்டீ அத்தலெட் மட்டுமல்ல பாஸ்கட்பால் ப்ளேயர் மற்றும் ஜிம்னாஸ்டிக் தெரிந்தவர்.

Image Courtesy

அழகு மட்டுமே அவசியமில்லை :

அழகு மட்டுமே அவசியமில்லை :

தற்போது 33 வயதான கேட்டீ மற்றவர்களை உற்சாகப்படுத்துவதில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். ஒவ்வொருவருமே அழகு தான் என்று சொன்ன கேட்டீ பேஷன் உலகில் கால் பதிக்க அழகு மட்டுமே அத்தியாவசியமல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion
English summary

First Down Syndrome Model

Model with Down syndrome can change your narrow thinking
Story first published: Wednesday, July 19, 2017, 16:29 [IST]