பேன்ட் ஜிப்பில் YKK எனும் குறியீட்டை என்றேனும் நீங்கள் கவனித்ததுண்டா?

Posted By:
Subscribe to Boldsky

தினமும் குறைந்தபட்சம் ஆண்கள் ஒருநாளுக்கு ஐந்தில் இருந்து பத்து முறையாவது ஜிப்பை பயன்படுத்தாமல் இருக்க முடியாது.

கையில் பை வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை என்றாலும், பேன்ட் போடும் போது, அவிழ்க்கும் போது, சிறுநீர் கழிக்கும் போது என ஐந்தாறு முறை ஜிப்பை நாம் பயன்படுத்தி தான் ஆகவேண்டும்.

பெரும்பாலான பேன்ட், கைப்பை மற்றும் சில உபகரணங்களின் ஜிப்பில் நீங்கள் இந்த ஒய்.கே.கே. என்ற குறியீட்டை பார்த்திருப்பீர்கள்.

இதையும் படிங்க: சட்டையில் இந்த லூப் எதற்கு தரப்பட்டுள்ளது என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா?

ஆனால், இது எதை குறைக்கிறது, இது உலகளவில் எவ்வளவு பெரியது என்பது குறித்து நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒய்.கே.கே - YKK

ஒய்.கே.கே - YKK

ஜிப்பில் இருக்கும் இந்த YKK எனும் குறியீடு 'Yoshida Kogyo Kabushikigaisha" எனும் உலகின் முன்னணி ஜிப் தயாரிப்பு நிறுவனத்தை குறிப்பது ஆகும்.

Image Source

71 நாடுகள்

71 நாடுகள்

ஏறத்தாழ உலகில் தயாரிக்கப்படும் ஜிப்பில் பாதிக்கும் மேல் இந்த நிறுவனத்தார் தான் தயாரிக்கின்றனர். உலகெங்கிலும் 71 நாடுகளில் இவர்கள் 206 தயாரிப்பு இடவசதி வைத்துள்ளனர்.

Image Source

ஜப்பான்

ஜப்பான்

ஜப்பானை சேர்ந்த தொழிலதிபர் தடோ யோஷிடா என்பவர் தான் இந்த மாபெரும் ஜிப் தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 1934-ம் ஆண்டு துவங்கினார். உடைகள் மற்றும் ஏனைய ஜிப் தேவைப்படும் பொருட்கள், உபகரணங்களுக்கு இவர்கள் ஜிப் தயாரிக்கின்றனர்.

Image Source

மெஷின் தயாரிப்பு

மெஷின் தயாரிப்பு

ஜிப்புகள் மட்டுமின்றி, ஜிப்பை வேகமாக தயாரிப்பு தேவைப்படும் மெஷின்களும் கூட ஒய்.கே.கே நிறுவனம் தயாரிக்கிறது.

Image Source

70 லட்சம்

70 லட்சம்

ஒய்.கே.கே-வின் பெரிய தயாரிப்பு ஃபேக்டரி அமெரிக்கவின் ஜியார்ஜியாவில் அமைந்துள்ளது. இங்கு மட்டுமே ஒரு நாளுக்கு 70 லடச்திற்கும் மேற்பட்ட ஜிப்புகள் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion, ஃபேஷன்
English summary

Ever Noticed The Letters ‘YKK’ On Zippers?

Ever Noticed The Letters ‘YKK’ On Zippers? This Is What It Stands For.
Subscribe Newsletter