Latest Updates
-
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
ராகு-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்க சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போறாங்களாம் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி ரெசிபி - இப்படி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும்
பெண்களைக் கவர நினைக்கும் ஆண்கள் கட்டாயம் அணியக்கூடாதவைகள்!
ஒவ்வொரு ஆணும் பெண்களையும், ஒவ்வொரு பெண்ணும் ஆண்களையும் கவர நினைப்பது பொதுவான ஒன்று தான். ஆனால் அதில் நிறைய ஆண்கள் தவறுகளை இழைக்கின்றனர். அதாவது தங்களுக்கு பொருத்தமில்லாத சில உடைகள் அல்லது ஆபரணங்களை அணிந்து, அவர்களது அழகை கெடுத்துக் கொள்கின்றனர்.
ட்ரெண்ட் என்று என்ன தான் சொல்லிக் கொண்டாலும், தங்களுக்கு பொருந்தாத ஒன்றை ஆண்கள் அணிந்தால், அது மோசமான அபிப்ராயத்தை தான் ஏற்படுத்தும். எனவே தமிழ் போல்ட்ஸ்கை ஆண்கள் தங்களது காதலி அல்லது தான் விரும்பும் பெண்ணை ஈர்க்க நினைக்கும் போது, அணியக்கூடாத சிலவற்றை கீழே பட்டியலிட்டுள்ளது.

சங்கிலி
சில ஆண்கள் கெத்து என்று நினைத்துக் கொண்டு, கண்ட சங்கிலியை அணிந்துக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் பெண்களுக்கு இம்மாதிரி சங்கிலியுடன் சுற்றும் ஆண்களைக் கண்டால் பயம் வருமே தவிர, ரொமான்ஸ் வராது.

டீப் V-நெக் டி-சர்ட்
நன்கு பாடி பில்டர் போன்ற உடல் கெண்ட சல்மான் கான் தனது திரைப்படத்தில் இம்மாதிரியான டி-சர்ட்டுகளை அணிந்திருக்கலாம். அதற்காக அந்த டி-சர்ட்டை உங்கள் சொந்த வாழ்க்கையில் அணிய நினைக்காதீர்கள். அப்படி அணிந்தால், எந்த ஒரு பெண்ணும் உங்கள் அருகில் கூட வரமாட்டார்கள்.

லெதர் பேண்ட்
மின்னும் லெதர் பேண்ட் பெண்களுக்கு நன்றாக இருக்குமே தவிர, ஆண்களுக்கு இது அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே இம்மாதிரியான பேண்ட்டுகளை வாங்க நினைக்காதீர்கள்.

உடலை இறுக்கும் டி-சர்ட்டுகள்
பை-செப்ஸ் பெரியதாக இருக்கும் ஆண்கள், உடலை இறுக்கும் படியான டி-சர்ட்டுகளை அணிய நினைப்பார்கள். ஆனால் இந்த டி-சர்ட்டுகள் திரைப்படத்தில் நடிகர்களுக்கு நன்றாக இருக்குமே தவிர, நிஜ வாழ்க்கையில் இது மோசமான தோற்றத்தை தான் கொடுக்கும்.

இறுக்கமான ஷார்ட்ஸ்
நீங்கள் காலையில் ஜாக்கிங் செல்பவராக இருந்தால், பெண்களை எளிதில் கவரலாம். ஆனால் அப்போது இறுக்கமான ஷார்ட்ஸ்களை அணிந்து சென்றால், பெண்கள் விலகித் தான் செல்வார்களே தவிர, உங்களை பார்க்கக்கூட மாட்டார்கள்.

ஸ்டாக்கிங்ஸ்
இது உடற்பயிற்சி செய்யும் போது வசதியாகவும், அழகாகவும் இருக்கும். அதிலும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். ஆனால் ஸ்டாக்கிங்ஸ் பயன்படுத்தும் போது பல வண்ணங்களைப் பயன்படுத்தாதீர்கள்.

காலணி
படத்தில் காட்டப்பட்டவாறான காலணி பெண்களுக்கு நன்றாக இருக்குமே தவிர, ஆண்கள் இதை அணிந்தால் அது மோசமான தோற்றத்தை தான் கொடுக்கும். வேண்டுமானால் ஆண்கள் இம்மாதிரியான காலணியைத் தவிர்த்து, கேஷுவல் ஸ்னீக்கர்ஸ் அணியலாம்.



Click it and Unblock the Notifications