Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
விருது விழா ஒன்றிற்கு அழகிய கருப்பு நிற கவுனில் வந்த இளவரசி கேட் மிடில்டன்!
இங்கு பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி விருது விழாவிற்கு இளவரசி கேட் மிடில்டன் அணிந்து வந்த உடையும், மேற்கொண்டு வந்த ஸ்டைல்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த 2017 ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி விருது விழாவிற்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் கலந்து கொண்டனர். இளவரசியான கேட் மிடில்டன் எப்போதும் சிம்பிளாக இருப்பவர்.
இந்த விருது விழாவிற்கும் சிம்பிளான மற்றும் க்யூட்டான கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து, இளவரசர் வில்லியம்ஸ் உடன் வந்திருந்தார். இங்கு பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி விருது விழாவிற்கு இளவரசி கேட் மிடில்டன் அணிந்து வந்த உடையும், மேற்கொண்டு வந்த ஸ்டைல்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அலெக்சாண்டர் மெக்குயின்
இளவரசி கேட் மிடில்டன் டிசைனர் அலெக்சாண்டர் மெக்குயின் வடிவமைத்த கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். இது தான் அந்த கவுன்.

பூ பிரிண்ட்
கேட் மிடில்டன் அணிந்து வந்த கவுன் வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் கலந்த பூ பிரிண்ட் போடப்பட்டு அழகாக இருந்தது.

சாட்டின் கருப்பு
கேட் அணிந்து வந்த கவுனில் சாட்டின் கருப்பு நிற ரிப்பன்கள் இடையிடையே வைத்து தைக்கப்பட்டிருந்தது.

வைர கம்மல்
கேட் இந்த உடைக்கு ஆபரணங்கள் அதிகம் அணியாமல், காதுகளில் வைர கம்மல், வைர பிரேஸ்லெட்டையும், திருமண மோதிரம் மட்டும் அணிந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்
கேட் மிடில்டன் இந்த உடைக்கு ஏற்றவாறு அழகாக கொண்டை போட்டு வந்திருந்தார்.

கருப்பு நிற க்ளட்ச்
கேட் தனது கையில் இந்த உடைக்கு மேட்ச்சாக கருப்பு நிற பெட்டி வடிவ க்ளட்ஸ் வைத்துக் கொண்டும் இருந்தார்.



Click it and Unblock the Notifications