ஜீன்ஸ்ல இந்த குட்டி பாக்கெட் இருக்கிறதுக்கு இது தான் காரணம்னு உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

எல்லா விஷயங்களும் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் உருவாக்கப்படுகின்றன. ஆனால், காலப்போக்கில் நாம் அதை ஏன்? எதற்காக என தெரியாமலேயே விட்டுவிடுகிறோம் அல்லது அதை வேறு எதற்காகவாவது உபயோகிக்க துவங்குவிடுகிறோம்.

பெரிய, பெரிய விஷயங்களில் இருந்து நாம் தினமும் உடுத்தும் ஆடைகள் வரை பலவற்றில் நாம் இதை காண முடியும். அதில் ஒன்று தான் ஆண்கள் வருடம் முழுக்க தினமும் உடுத்தும் ஜீன்ஸ் பாக்கெட்டில் இருக்கும் ஒரு குட்டி பாக்கெட். பெரும்பாலும் நாம் இதை பயன்படுத்தவே மாட்டோம்.

ஆனால், இதுவும் உருவாக்கப்பட்ட போது ஒரு தனிப்பட்ட காரணத்திற்காக தான் டிஸைன் செய்தனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கவ்பாய்!

கவ்பாய்!

1800களில் கவ்பாய் கலாசாரத்தில் அவர்கள் பயன்படுத்தும் தொப்பி, ஜாக்கெட், ஷூ, என எல்லா பொருட்களும் சற்று வித்தியாசமாக தான் இருக்கும்.

சங்கிலி கடிகாரம்!

சங்கிலி கடிகாரம்!

அந்த வித்தியாசமான பொருட்களில் கடிகாரமும் ஒன்று. அவர்கள் சங்கிலியில் இணைக்கப்பட்ட கடிகாரத்தை தான் அதிகமாக பயன்படுத்தி வந்தனர். அவர்கள் அதை கோட்டில் தொங்கவிட்டு பயன்படுத்தி வந்தனர்.

லீவிஸ் ஜீன்ஸ்!

லீவிஸ் ஜீன்ஸ்!

அது சில சமயங்களில் உடையவும் வாய்ப்புகள் இருந்தன. இதை மாற்ற தான் லீவிஸ் ஜீன்ஸ் கம்பெனி ஜீன்ஸ் பேன்ட்டில் இந்த குட்டி பாக்கெட் முறையை அறிமுகப்படுத்தியது.

டிக்கட் பாக்கெட்!

டிக்கட் பாக்கெட்!

சிலர் இதை டிக்கட் பாக்கெட் என்றும் குறிப்பிடுகின்றனர். ஆரம்ப காலத்தில் அவரவர் தனியாக தைய்த்து உடை உடுத்தும் வழக்கம் தான் இருந்து வந்தது.

அப்போது, எளிதில் தொலைந்து போகும் டிக்கட் போன்ற சிறிய பொருட்களை வைக்க டிக்கட் பாக்கெட் என்ற ஒன்றை பயன்படுத்தி வந்தனர். பின்னாளில் ஜீன்ஸ் வழக்கத்திற்கு வந்த பிறகு, அதற்காக இது சேர்க்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

காண்டம் பாக்கெட்!

காண்டம் பாக்கெட்!

லீவிஸ் ஜீன்ஸ் கம்பெனியில் பணியாற்றிய நபர் (என்ற பெயரில்) இணையத்தளம் ஒன்றில் கூறியிருக்கும் பதிலில், இது காண்டம் பாக்கெட் என்றும். 19-ம் நூற்றாண்டில் ஜீன்ஸ் உற்பத்திக்கு வந்த பிறகு இதை வாட்ச் பாக்கெட் என மாற்றி அழைக்க துவங்கினர் என்றும் கூறியுள்ளார்.

காய்ன் பாக்கெட்!

காய்ன் பாக்கெட்!

ஜீன்ஸ் உற்பத்தி துறையில் பணிபுரியும் நபர் ஒருவர், இதை காய்ன் பாக்கெட் என்று அழைப்பதுண்டு. ஆனால், இது ஆரம்பத்தில் 18-ம் நூற்றாண்டில் ஃபாப் என அழைக்கப்படும் சங்கிலி கடிகாரம் (Chain Watch) வைக்க தான் டிஸைன் செய்யப்பட்டது என கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion, ஃபேஷன்
English summary

This is the Reason Behind Why There is a Littile Pocket in Your Jeans

This is the Reason behind Why There is a Littile Pocket in Your Jeans, read here in tamil
Story first published: Friday, August 26, 2016, 16:30 [IST]
Subscribe Newsletter