விருது விழாவிற்கு வெள்ளை நிற பட்டுப்புடவையில் தேவதை போன்று வந்த வித்யா பாலன்!

Posted By:
Subscribe to Boldsky

2017 ஆம் ஆண்டின் ஜீ சினி விருது விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த சிவப்பு கம்பள விருது விழாவில் ஏராளமான பாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் அற்புதமான உடைகளை அணிந்து வந்து அசத்தினர். இந்த சிவப்பு கம்பள விருது விழாவில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான வித்யா பாலனும் கலந்து கொண்டார்.

எப்போதும் வித்தியாசமாக வருகிறேன் என்று கேவலகமாக வரும் வித்யா பாலன், இந்த முறை அம்சமான தோற்றத்தில் வந்திருந்தார். சரி, இப்போது 2017 ஆம் ஆண்டின் ஜீ சினி விருது விழாவிற்கு வித்யா பாலன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செகண்ட் ஸ்கின் பட்டுப்புடவை

செகண்ட் ஸ்கின் பட்டுப்புடவை

இது தான் ஜீ சினி விருது விழாவிற்கு நடிகை வித்யா பாலன் அணிந்து வந்த வெள்ளை நிற பட்டுப்புடவை.

மேக்கப்

மேக்கப்

வித்யா பாலன் இந்த புடவையில் பளிச்சென்று தெரிய, முகத்திற்கு சற்று அதிகமாக மேக்கப் போட்டுள்ளார். இருப்பினும் இந்த புடவைக்கு அது பொருத்தமாகத் தான் இருந்தது. அதிலும் சிவப்பு நிற வட்ட பொட்டு வைத்து, சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்தது சூப்பராக இருந்தது.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

வித்யா பாலன் புடவைக்கு ஏற்றவாறு கொண்டை போட்டு, கொண்டையைச் சுற்றி வெள்ளை நிறப் பூ வைத்துக் கொண்டு வந்தது, அவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

வித்யா பாலன் இந்த புடவையில் இன்னும் அழகாக காட்சியளிக்க நாராயண் நகைகளை அணிந்து வந்திருந்தார். அதுவும், காது மற்றும் கைக்கு மட்டும் ஆபரணங்களை அணிந்து வந்திருந்தார்.

உங்களுக்கு வித்யா பாலனின் இந்த லுக் பிடித்துள்ளதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Vidya Balan At Zee Cine Awards 2017

Wearing a lovely ivory silk sari from Second Skin, Vidya attended the Zee Cine Awards. With flowers in her hair, she finished out the look with jewelry from Narayan Jewels.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter