Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா?
அமிதாப் பச்சனும்.. வெல்வெட் கோட்டின் மீது அவருடைய காதலும்..
பாலிவுட்டின் ஜாம்பவானான அமிதாப் பச்சன், இந்திய சினிமாவில் மதிக்கப்படக் கூடிய நடிகர்களில் முக்கியமான ஒருவராகும். அவருடைய சினிமா வாழ்க்கையில் அவர் பல்வேறு வெற்றி படங்களை குவித்துள்ளார். அவருடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை கிட்டத்தட்ட 180 படங்கள் வரை நடித்துள்ளார். அடேங்கப்பா! தீவார் மற்றும் சஞ்சீர் போன்ற படங்களினால் இவர் பல அங்கீகாரத்தை அடைந்தார். சஞ்சீர் படத்திற்கு பின்னர் தான் இவரை பாலிவுட்டின் கோபக்கார இளைஞன் என அழைக்கப்பட்டார்.
அமிதாப் பச்சனுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர். இவருடைய ஸ்டைலை மற்றும் ஆடை அணியும் விதத்தை பின்பற்றவும், தழுவவும் பலரும் விரும்புகின்றனர். இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் இவரை தங்களின் முன்மாதிரியாக கருதுகின்றனர். இந்திய சினிமாவிற்கு அவர் அளித்துள்ள பங்களிப்பின் காரணமாக இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் போன்ற விருதுகளை வழங்கியுள்ளது.
இந்த சாதனைகள் தவிர, அமிதாப் பச்சனுக்கு அவருடைய தோற்றத்தின் மீது மிகுந்த அக்கறையுண்டு. இவர் எப்போதுமே அல்ட்ரா-பேஷனான மனிதராவார். அவருக்கென தனித்துவமான ஒரு ஸ்டைல் உண்டு. அது தான் அவருடைய வெல்வெட் கோட். பல நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் அவரை வெல்வெட் கோட் அணிந்து நாம் பார்த்திருக்கலாம்.
முதலானது, அவருடைய புதிய நிகழ்ச்சியான ஆஜ் கி ராத் ஹய் சிந்தகியில் அவர் அணிந்து வந்த ஃப்ளோரல் வெல்வெட் கோட். உயர்ந்த மனிதரான அவருக்கு அந்த சூட் மிகவும் பொருத்தமாக இருந்தது. பதினேழு முதல் எழுபது வரையிலான வயதை கொண்டவர்கள் அனைவருக்கும் பிக் பியின் ஸ்டைலான தோற்றம் பிடிக்காமல் இருக்குமா என்ன?

இரண்டாவது, ப்ளாக்கிங் ஆப் அறிமுகத்தில் பிக் பி அவர்களின் தோற்றமாகும். அப்போது மெரூன் நிறத்திலான வெல்வெட் கோட் ஒன்றுடன் சாதாரண ஃபார்மல் பேன்ட்டை அணிந்திருந்தார். மெரூன் நிறத்தில் அவர் அசத்தலாக தென்பட்டார்.



Click it and Unblock the Notifications

