பிரியங்கா சோப்ராவின் செம்ம கூல் வெக்கேசன் லூக்!

Posted By: Aashika
Subscribe to Boldsky

 திரையில் பலரது உள்ளங்களைக் கவர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. நடிப்புத்திறமை, அழகு ஸ்டைல் எப்போதுமே சென்சேசனில் இருக்கும். இதற்கு காரணம் அவர் துணிந்து பல விஷயங்களை முன்னெடுப்பதில் கில்லாடி. உலகின் ஸ்டைலிஸ்ட் ஐகானாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா பயணங்களின் போது தனி ஸ்டைல் பின்பற்றி வருகிறார். ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப தன்னுடைய ஸ்டைலையும் மாற்றி வருகிறார் பிரியங்கா சோப்ரா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறந்த நாள் கொண்டாட்டம் :

பிறந்த நாள் கொண்டாட்டம் :

பிரியங்கா சோப்ரா தன்னுடைய அம்மா மது சோப்ரா மற்றும் சகோதரர் சித்தார்த் சோப்ராவுடன் பிறந்தநாள் வெக்கேஷன் படங்களை வெளியிட்டிருக்கிறார்.

ஒன்றில் குடும்பத்தினருடன் இருக்கும் பிரியங்கா, க்ராப் டாப் மற்றும் பிளாக் ஸ்கர்ட் அணிந்திருக்கிறார். கூலர்ஸுடன் உய்யார போய்தரும் பிரியாங்காவிற்கு இன்னும் அழகு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது அவர் அணிந்திருக்கும் ஜன்க் நகை.

தாய்க்கு பிறந்தது பூனையாகுமா? இதை அப்படியே மாற்றிப்போட்டால் பிரியங்காவின் அம்மாவிற்கு பொருந்தும். ஸ்டைல் ஐகானின் அம்மான்னா சும்மாவா? மகளுக்கு ஏத்த மாதிரியே கருப்பு நிற ஃப்ளோரல் லாங் டாப் மற்றும் ஷார்ட்ஸுடன் செம்ம கூல் மாம்!

நீச்சல் குளம் அருகில் :

நீச்சல் குளம் அருகில் :

அதே பயணத்தின் போது, ஒரு ரிசாட்டில் எடுக்கப்பட்ட படத்தையும் வெளியிட்டிருந்தார். ஒரே வண்ணத்தில் க்ராப் டாப், மற்றும் ப்ளாசோ பேண்ட் அணிந்திருந்தார். அவற்றுடன் ஆரஞ்சு நிற செருப்பும் கருப்பு நிற தொப்பியும் ஹைலைட்.

அப்போது கூல் மாம் மது சோப்ரா மஞ்சள் நிற ஷார்ட் குர்தாவும், ஆஃப் வொயிட் நிற ஷாட்ர்ஸும் அணிந்திருந்தார். ஷார்டஸை விட கொஞ்சம் டார்க்கான செருப்பு ஸ்ட்ரைப்ஸுடன் அணிந்திருந்தது உடைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

அவர்களோடு நின்றிருந்த சிதார்த்தா கேஸுவல் உடையில் இருந்தார். குடும்பத்தினரோடு சேர்ந்து நின்றிருந்த பிரியங்காவின் நெருங்கிய தோழியான தமன்னா தத் மஞ்சள் நிற ஹாஃப் கவுன், பெரிய தொப்பி மற்றும் பிங்க் நிற செருப்பு என வண்ணங்களின் தொகுப்பாய் இருந்தது அந்த புகைப்படம்.

பராகுவே :

பராகுவே :

கடந்த மாதம் பராகுவே சுற்றுலாச் சென்றிருந்த பிரியங்காசோப்ரா அப்போது எடுத்த பல படங்களை தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவற்றில் த பெஸ்ட்டாக இரண்டு இங்கே உங்களுக்காக

ஒன்றில் டார்க் பிங்க் மற்றும் அதற்கு சமமான மல்ட்டிகலர் ஸ்ட்ரைப்ஸ் கொண்ட ஆடை அணிந்திருந்தார். ரெட்ரோ ஸ்டைலில் க்ளாசி லூக்கில் இருந்தார் பிரியங்கா, அப்போது கருப்பு நிற ஹீல்ஸ் அணிந்திருந்தது அவரை இன்னும் லுக்காக காட்டியது.

இன்னொன்று ஸ்கை ப்ளூ நிறத்தில் ஆடையும் வெள்ளை நிற ஓவர் கோட்டும் அணிந்திருந்தார்.

போலோ லூக் :

போலோ லூக் :

பிரியங்கா சோப்ரா நியூ யார்க்கில் இருந்த போது, ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட விசி க்ளாசிக் போலோவின் 10 வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் வழக்கத்திற்கு மாறான அழகுடன் பார்ப்போரை கவரும் வண்ணம் செம்ம கெத்து லூக்!

போல்கா டாட் கொண்ட லாங் கவுன் மற்றும் கருப்பு நிறத்தில் செருப்பு உடைக்கு மேட்சிங்காக இருந்தது.

கடற் காதலி ! :

கடற் காதலி ! :

பிரியங்கா சோப்ராவிற்கு எப்போதும் கடல் மிகவும் பிடித்தமானது. தான் நடித்து வெளியான பே வாட்ச் திரைப்படத்தி ப்ரோமசன் வேலைகளுக்காக அவர் சென்ற மியாமி நகரில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இது.

டூ பீஸ் பிகினி உடையிலும் அதே இடத்தில் ஓவர் கோட் அணிந்த மாதிரியான புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.

பிறந்தநாளைக் கொண்டாடும் பிரியங்கா சோப்ராவிற்கு வாழ்த்துக்களுடன், வரும் வருடத்தில் நிறைய வெற்றிகளை சந்திக்கவும் இன்னும் பல சுற்றுலா செல்லவும் வாழ்த்துவோம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: fashion celebrities bollywood
English summary

Priyanka Chopra Birthday Special

Compilation of the wanderlust priyanka chopra's vacation looks
Story first published: Tuesday, July 18, 2017, 17:19 [IST]