3 மாதங்களாக நடந்த பிளெண்டர்ஸ் பிரைடு ஃபேஷன் டூரில் ராம்ப் வாக் நடந்த பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

2017ஆம் ஆண்டின் பிளெண்டர்ஸ் பிரைடு ஃபேஷன் டூர் இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் நடந்தது. இந்த ஃபேஷன் டூரில் ஏஸ் டிசைனர்கள் பலர் தங்களது கலெக்ஷன்களை வெளியிட்டனர். இந்த ஃபேஷன் டூர் கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பமாகி இந்த மாதம் 21 ஆம் தேதி தான் முடிவடைந்தது.

இந்த பிளெண்டர்ஸ் பிரைடு ஃபேஷன் டூர் இந்தியாவின் 5 நகரங்களில் நடைபெற்றது. ஒவ்வொரு நகரங்களிலும் ஒவ்வொரு பிரபலம் வந்து, ஃபேஷன் நிகழ்ச்சியை அட்டகாசமாக்கினர். இக்கட்டுரையில் 2017 பிளெண்டர்ஸ் பிரைடு ஃபேஷன் டூரில் ஷோஸ்டாப்பராக வந்த நடிகர், நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹைதராபாத்

ஹைதராபாத்

இந்த ஃபேஷன் டூர் முதலில் ஹைதராபாத்தில் அக்டோபர் 28 ஆம் தேதி துவங்கியது. இதில் டிசைனர்களான சாந்தனு & நிகில் மற்றும் ஃபல்குனி & ஷேன் பீக்காக் அவர்களின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. நடிகை ஜாக்குலின் ஷோஸ்டாப்பராக சில்வர் நிற உடையில் ராம்ப் வாக் நடந்து வந்தார்.

குர்கான்

குர்கான்

ஹைதராபாத்திற்கு அடுத்தப்படியாக, குர்கானில் இந்த ஃபேஷன் டூர் நடந்தது. இதில் டிசைனர் மனீஷ் அரோரா அவர்களின் கலெக்ஷன் வெளிவந்தது. நடிகை ஷ்ரதா கபூர் ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். மனீஷ் அரோராவின் கலெக்ஷன்கள் அனைத்தும் பிரமாதமாக இருந்தது.

கொல்கத்தா

கொல்கத்தா

2 நகரங்களுக்குப் பின், மூன்றாவதாக கொல்கத்தாவில் நடந்தது. இங்கு டிசைனர் நிகில் தம்பி அவர்களது கலெக்ஷன் வெளிவந்தது. நடிகர் சித்தார்த் மல்ஹொத்ரா அற்புதமான உடை அணிந்து ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இங்கு மீண்டும் சாந்தனு மற்றும் நிகில் அவர்களின் கலெக்ஷன்களும் வெளிக்காட்டப்பட்டன.

மும்பை

மும்பை

இந்தியாவில் இரண்டாவது மெட்ரோபாலிட்டன் நகரம் என்றால் அது மும்பை தான். இங்கு டிசைனர் தருண் தஹிலியானி அவர்களது மின்னும் கலெக்ஷன்கள் வெளியிடப்பட்டன. இந்த ஷோவிற்கு நடிகை சோனம் கபூர் அழகிய மின்னும் உடை அணிந்து ஷோஸ்டாப்பராக ராம்ப் வாக் நடந்தார்.

பெங்களூரு

பெங்களூரு

கடைசியாக பெங்களுருவில் பிளெண்டர்ஸ் பிரைடு ஃபேஷன் டூர் நடைபெற்றது. இங்கு நடிகை சோனாக்ஷி சின்ஹா ஷோஸ்டாப்பராக ஏஸ் டிசைனர் கவுரி மற்றும் நைனிகா அவர்களுக்கு வந்திருந்தார். அதுவும் அழகிய கருப்பு நிற கவுன் அணிந்து க்யூட்டாக வந்திருந்தார். மேலும் இங்கு டிசைனர்களான ஆப்ரகாம் மற்றும் தக்கோரே அவர்களது கலெக்ஷன்களும் வெளியிடப்பட்டன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sonam To Sonakshi Slayed The Ramp; All About The Blenders Pride Fashion Tour 2017

Blenders Pride Fashion Tour 2017 was a glamour-filled ride. Have a look.
Story first published: Friday, December 22, 2017, 18:09 [IST]