சோனம் கபூரின் பிரமிக்க வைக்கும் நாட்டுப்புற தோற்றம்!!!

By: Ashok CR
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க
    ஷேர் செய்ய    ட்வீட் செய்ய    ஷேர் செய்ய கருத்துக்கள்   மெயில்

பாலிவுட் உலகத்தில் ஃபேஷனை தீவிரமாக பின்பற்றி, ட்ரெண்ட் செட்டெராக உள்ளார் சோனம் கபூர். எப்போதுமே ஸ்டைல், எளிமை மற்றும் நம்பிக்கையுடனான மனப்பான்மையை அவர் வெளிப்படுத்துவார். சினிமா உலகத்தில் அறிமுகமானதில் இருந்து பல வெற்றிகளை சுவைத்தவர் இவர். மேலும், தன் ஸ்டைல் மூலம் ரசிகர்களுக்கு என்றுமே சோனம் கபூர் ஏமாற்றம் அளித்ததில்லை. 

Sonam Kapoor Looks Sizzling In Folk Print Anarkali

சமீபத்தில் இந்திய டுடே உச்சி மாநாடு நிகழ்வில் சோனம் கபூர் கலந்து கொண்டார். நம்புங்கள், அவர் அப்போது பிரமிக்க வைக்கும் வகையில் காட்சியளித்தார். தலை முதல் கால் வரை நாட்டுப்புற சாயல்களை அவர் தழுவியிருந்தார். அளவுக்கு அதிகமான எம்ப்ராய்ட்டரி அடர்த்தியான மற்றும் வேலைப்பாடுகள் நிறைந்த நாட்டுப்புற நிறத்திலான அனார்கலி கவுனை அவர் அணிந்திருந்தார். அவருடைய தோற்றத்தில் முக்கிய ஈர்ப்பாக அமைந்திருந்தது அவரது கம்மல். அது ஈஸ்டா பிராண்டை சேர்ந்த சேகரிப்பு. முக்கோன வைர கம்மல் அவரின் மீது இனிமையாக வீற்றிருந்தது. அன்றைய நாளுக்கு ரியா கபூர் தான் அவருடைய ஸ்டைலிஸ்ட். அவருக்கு உதவியாக இருந்தது அபிலாஷா தேவ்னணி மற்றும் சாந்தினி வாபி.

Please Wait while comments are loading...
Subscribe Newsletter