Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
பார்ப்போரின் விழி பிதுங்க வைக்கும் கிம் கர்தாஷியனின் மறக்க முடியாத லுக்!
இதுவரை நடந்த சிவப்பு கம்பள அம்ஃபர் காலா விழாவில் 2019 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த அம்ஃபர் காலாவில் கலந்து கொள்ளும் போது கிம் உடுத்திய உடையை மறக்க முடியாத ஓர் உடையாகக் கூறலாம்.
கிம் கர்தாஷியன் ஒரு அமெரிக்க ஊடக பிரபலம், சமூகத்தில் பெரும்புள்ளி, மாடல், தொழிலதிபர் மற்றும் நடிகையும் கூட. 39 வயதான இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். சாதாரணமாக ஒரு குழந்தை பெற்றாலே பெண்களின் உடல்வாகு போய்விடும். ஆனால் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்த பின்னரும் இவர் இன்னும் சிக்கென்று தனது உடலமைப்பைப் பராமரித்து வருகிறார்.

பொதுவாக இவர் எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், அனைவரது கவனத்தையும் தன்வசம் ஈர்க்கும் வகையிலான உடையை அணிந்து வருவார். அப்படி இதுவரை நடந்த சிவப்பு கம்பள அம்ஃபர் காலா விழாவில் 2019 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த அம்ஃபர் காலாவில் கலந்து கொள்ளும் போது கிம் உடுத்திய உடையை மறக்க முடியாத ஓர் உடையாகக் கூறலாம்.
இந்த விழாவில் கிம் கர்தாஷியன் தனது சகோதரியுடன் கருப்பு நிற உடையில் கலந்து கொண்டார். கீழே கிம் அணிந்து வந்த அந்த மறக்க முடியாத கவர்ச்சிகரமான உடை உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

விண்டேஜ் கவுன்
இது 2019 ஆம் ஆண்டு நடந்த அம்ஃபர் காலா நியூயார்க் விழாவிற்கு கிம் அணிந்து வந்த கருப்பு நிற விண்டேஜ் வெர்சேஸ் கவுன். கிம் அணிந்திருந்த இந்த கவுன் பக்கவாட்டில் ஹை ஸ்லிட் கொண்டதுடன் முன்புறம் கவர்ச்சிகரமாக மார்பகங்கள் தெரியுமாறு இருந்தது. அதோடு இந்த உடையின் பின்புறம் முதுகு முழுவதும் தெரியுமாறு இருந்தது. மொத்தத்தில் இந்த உடை அவரது தோற்றத்தை மிகவும் செக்ஸியாக வெளிக்காட்டியதுடன், மறக்க முடியாத ஒன்றாகவும் அமைத்தது.

கிம்மின் மேக்கப்
கிம் கர்தாஷியன் இந்த விண்டேஜ் கவுனிற்கு எப்போதும் போல ஸ்மோக்கி ஐ மேக்கப் மற்றும் நேச்சுரல் லிப் கலரை போட்டு வந்திருந்தார். இந்த உடைக்கு இவர் போட்டு வந்த அளவான மேக்கப் இவரை இன்னும் அழகாக காட்டியது எனலாம்.

ஹேர் ஸ்டைல்
கிம் கர்தாஷியன் இந்த உடைக்கு நேர் உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். அதோடு முடியின் முனைகளில் கர்ல்ஸ் செய்திருந்தார். மேலும் கிம் இந்த உடைக்கு ஆபரணங்கள் எதுவும் அணியாமல் வந்திருந்தது, இந்த உடைக்கு பொருத்தமாக இருந்தது.

கோர்ட்னி கர்தாஷியன்
கிம் கர்தாஷியனின் சகோதரியான கோர்ட்டி கர்தாஷியனும் கருப்பு நிற வெர்சேஸ் கவுனைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். இவர் அணிந்து வந்தது தை-ஹை ஸ்லிட் கவுன் மற்றும் இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த அடர்த்தியான ஸ்மோக்கி மேக்கப் மற்றும் ஹை போனிடைல் ஹேர் ஸ்டைல் இவரது தோற்றத்தை சிறப்பாக காட்டியது.

சகோதரியுடன் கிம்
இது கிம் கர்தாஷியன் தனது சகோதரி கோர்ட்டியுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு ஒன்றாக சேர்ந்து போஸ் கொடுக்கும் போது எடுத்த போட்டோ. என்ன தான் கோர்ட்னி கர்தாஷியன் வெர்சேஸ் கவுனை அணிந்து வந்தாலும், கிம் கர்தாஷியனுக்கு இணையாக வர முடியாது. என்ன உண்மை தானே?



Click it and Unblock the Notifications
