Latest Updates
-
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா?
2023 லேக்மீ ஃபேஷன் வீக்கில் அட்டகாசமான உடையில் முதலில் ராம்ப் வாக் செய்த பிரபலம் யார் தெரியுமா?
பிரபல நட்சத்திரமான நேஹா தூபியாவுடன் இந்த ஃபேஷன் வீக் தொடங்கப்பட்டது. லேக்மீ ஃபேஷன் வீக்கின் முதல் நாளிலேயே தன் அழகாலும் ஆடையாலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நேஹா தூபியா
பேஷன் உலகம் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லேக்மீ ஃபேஷன் வீக் மார்ச் 9 ஆம் தேதி இன்று தொடங்கிவிட்டது. பல்வேறு வண்ணங்களில் வடிவங்களில் தாயாரிப்புகளை ஆடை வடிமைப்பாளர்கள் களம் இறக்கி வருகிறார்கள். திரைத்துறை பிரபலங்கள் மற்றும் மாடல்கள் கவர்ச்சியான அட்டகாசமான ஆடைகளை அணிந்து ராம்ப் வாக் செய்கிறார்கள். ஃபேஷன் உலகமே களைக்கட்டும் இந்த நிகழ்வு மார்ச் 12 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

பிரபலங்கள் மற்றும் மாடல்கள் டிசைனர்களின் லேட்டஸ்ட் டிசைன்களை அணிந்து வெளிவருவதை ஒட்டுமொத்த ஃபேஷன் உலகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்த ஃபேஷன் உலகம் வரும் நாட்களுக்கு புதுமையான டிசைன்களால் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லேக்மீ ஃபேஷன் ஷோ
லேக்மீ ஃபேஷன் வீக் இன்று மார்ச் 9 அன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து நடத்தப்படும் இந்த ஃபேஷன் நிகழ்ச்சி மார்ச் 12ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. நான்கு நாட்கள் கோலாகலமாக நடைபெற இருக்கும் இந்த ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் நிகழ்வு மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கார்டனில் நடைபெறுகிறது. மார்ச் 12 அன்று, மனீஷ் மல்ஹோத்ராவின் 'டிஃப்யூஸ்' பிரீட் கலெக்ஷன் மூலம் இந்த ஃபேஷன் ஷோ நிறைவடையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஷன் உலகின் திறமைகளை காணலாம்
அட்டகாசமான கவர்ச்சியான ஆடைகளுடன் வரும் பிரபலங்களையும் மாடல்களையும் காண ஃபேஷன் உலகம் காத்துக்கொண்டிருக்கிறது. வடிவமைப்பாளர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் இந்தத் துறையில் மேலும் சாதிக்கவும் இந்த ஃபேஷன் வீக் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா(FDCI) தனக்கென்று ஒரு தனித்துவமான இடத்தைக் கொண்டுள்ளது. மேலும் அது லேக்மீ ஃபேஷன் வீக் மூலம் தன்னை நிலைநிறுத்துகிறது. இந்த ஃபேஷன் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பிராண்டுகள், வடிவமைப்பாளர்கள் மற்றும் பிஸ்னஸ் மேன்கள் ஒன்றிணைவதால், ஃபேஷன் குறித்து பல விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். லேக்மீ ஃபேஷன் வீக் ஆனது வளரும் பேஷன் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாக உள்ளது.

புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள்
ராகுல் மிஸ்ரா, பெரோவின் அனீத் அரோரா, கல்லோல் தத்தா, கிருதி துலா, ருத்ராக்ஷ் த்விவேதி, ஹீரோ, சுதிர் ராஜ்பார், மசாபா குப்தா மற்றும் பவ்யா கோயங்கா உள்ளிட்ட பல புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் லேக்மீ பேஷன் வீக்கில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இந்த நான்கு நாட்களில் பேஷன் உலகில் நிகழும் அதிசயங்களை நாம் தினமும் கண்டுகளிக்கலாம். ஒவ்வொரு வடிவமைப்பாளரும் இந்த மேடையில் தங்களின் தனித்துவமான பிராண்டை வழங்க இருக்கிறார்கள்.

நேஹா தூபியாவுடன் தொடங்கிய நிகழ்வு
பிரபல நட்சத்திரமான நேஹா தூபியாவுடன் இந்த ஃபேஷன் வீக் தொடங்கப்பட்டது. லேக்மீ ஃபேஷன் வீக்கின் முதல் நாளிலேயே தன் அழகாலும் ஆடையாலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நேஹா தூபியா. நேஹாவின் அட்டகாசமான ஆடை புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேஹா ஆடை
வெளிர் மஞ்சள் நிற கவுன் அணிந்து அழகாக ரேம்ப் வாக் செய்தார் நேஹா. பிரகாசமான மஞ்சள் நிற கவுன் உடையில் கொஞ்சம் பச்சை, வெள்ளை மற்றும் கருப்பு நிறம் கலந்த பெல்ட் அணிந்திருந்தார். இந்த ஆடை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. எளிமையான தோற்றத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நேஹா, ஆடைக்கேற்ற அணிகலன் மற்றும் காலணிகளை கச்சிதமாக அணிந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
