Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
Lakme Fashion Week 2023:பிரபல நடிகை சுஷ்மிதா சென் மாரடைப்பிற்கு பின் கெத்தாக பேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்தார்
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஃபேஷன் நிகழ்வுகளில் ஒன்றான லேக்மீ ஃபேஷன் வீக் நேற்று தொடங்கிவிட்டது மற்றும் இப்போதும் நடந்து வருகிறது.
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஃபேஷன் நிகழ்வுகளில் ஒன்றான லேக்மீ ஃபேஷன் வீக் நேற்று தொடங்கிவிட்டது மற்றும் இப்போதும் நடந்து வருகிறது. ஃபேஷன் உலகத்தால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் லேக்மீ ஃபேஷன் ஷோ, திரை பிரபலங்கள் மற்றும் மாடல்கள் பல்வேறு டிசைனர்கள் வடிவமைத்த ஆடைகளை அணிந்து ராம்ப் வாக் வாக் செய்வது கண்களுக்கு மட்டுமின்றி மனதுக்கும் விருந்தளிக்கிறது. அனைத்து ஆடைகளும் பார்வையாளர்களை கவரும் வகையில் கவர்ச்சியாகவும், அழகாகவும், ஆடம்பரமாகவும் உள்ளன. பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் லேக்மீ ஃபேஷன் வீக்கின் மூன்றாவது நாளில் ஷோஸ்டாப்பராக இருந்தார். நடிகை சுஷ்மிதா சென் சனிக்கிழமையன்று நடந்த லக்மே ஃபேஷன் வீக்கில் டிசைனர் அனுஸ்ரீ ரெட்டிக்காக ரேம்ப் வாக் செய்தார்.
இந்த தங்க மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட லெஹங்காவில் அவர் காண்போரை மயக்கும் படி அசத்தலாக இருந்தார். மாரடைப்புக்கு பிறகு சுஷ்மிதா சென் பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதல்முறை. சமீபத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நடிகை சுஷ்மிதா சென், சனிக்கிழமை (மார்ச் 11) லேக்மீ பேஷன் வீக்கில் ராம்ப் வாக் செய்தார். நடிகை அனுஸ்ரீ ரெட்டிக்கு ஷோ ஸ்டாப்பராக மாறினார். இந்த சிறப்பு நாளுக்காக, சுஷ்மிதா சென் அழகுபடுத்தப்பட்ட லெஹங்காவில் அழகிய தேவதைப் போல காட்சியளித்தார்.

பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் லேக்மீ பேஷன் வீக்கில் டிசைனர் அனுஸ்ரீ ரெட்டிக்காக ராம்ப் வாக் செய்தார். அவர் மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட லெஹெங்காவில் அழகாகத் தெரிந்தார் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கைதட்டல் மற்றும் ஆரவாரத்தைப் பெற்றார். சுஷ்மிதா சென் ஒரு பஞ்சாபி பாடலுக்கு க்ரூவ் செய்து பூங்கொத்துடன் நடப்பதைக் காண முடிந்தது.
சுஷ்மிதா சென் அணிந்திருந்த ஆடையைப் பொறுத்தவரை, அது ஒரு அழகுபடுத்தப்பட்ட சோளி, பொருத்தமாக பெரிதும் அலங்கரிக்கப்பட்ட லெஹங்காவாகும், மேலும் அதைச்சுற்றி நேர்த்தியான நெட் துப்பட்டா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் ஒரு நெக்லஸ், இரண்டு மோதிரங்கள், ஒரு ஜோடி ஹீல்ஸ், ஒரு அழகான பொட்டு மற்றும் மென்மையான மேக்கப் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்தார்.
சமீபத்தில், சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் பொருத்துவதற்காக நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்குப்பின் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்வுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.



Click it and Unblock the Notifications


