Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா?
லேக்மீ ஃபேஷன் வீக் 2023: செக்ஸியான பிகினி உடையில் ராம்ப் வாக் செய்த பாலிவுட் நடிகை யார் தெரியுமா?
இந்தி நடிகையான சன்யா மல்ஹோத்ரா மிகவும் கவர்ச்சியான பிகினி வடிவ ஆடையை அணிந்து வந்து அனைவரையும் கவர்ந்தார். ஆரஞ்சு நிற பிகினி ஜாக்கெட் ஒரு கட் பாவாடை மற்றும் சல்லவான ஓவர் ஜாக்கெட் அணிந்திருந்தார்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஃபேஷன் நிகழ்வுகளில் ஒன்றான லேக்மீ ஃபேஷன் வீக் மார்ச் 9இல் தொடங்கி தற்போதுவரை நடைபெற்று வருகிறது. ஃபேஷன் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த லேக்மீ ஃபேஷன் ஷோவில் பல்வேறு ஆடை வடிவமைப்பாளர்களின் ஆடைகளை திரை பிரபலங்கள் மற்றும் மாடல்கள் அணிந்து ராம்ப் வாக் செய்து வருகிறார்கள். எல்லா ஆடைகளும் கவர்ச்சியாகவும் அழகாகவும் அட்டகாசமாகவும் பார்வையாளர்களை கவர்ந்துவருகிறது.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் மிகவும் கவர்ச்சியான தனித்துவமான உடையில் தோற்றமளித்தனர். அந்த வகையில், இந்த ஷோவில் கலந்துகொண்டு ராம்ப் வாக் செய்த திரைப்பிரபலங்கள் மற்றும் புகழ் பெற்ற டிசைனர்கள் வடிவமைத்த ஆடைகள் பற்றியும் இங்கே காணலாம்.

ஷில்பா ஷெட்டி
பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி, அபிர் என் நான்கியின் லிமெரிக் என்ற டிசைனர் வடிவமைத்த ஆடையை அணிந்து வந்து ஷோஸ்டாப்பராக வலம் வந்தார். காஷ்மீரின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் ‘பள்ளத்தாக்கின் பாடல்' என்று அந்த தொகுப்புக்கு பெயரிடப்பட்டது. பிரமிக்க வைக்கும் மெஜந்தா-ப்ளூ க்ரீப் கலரில் உடலை அணைக்கும் வகையில் ஜம்ப்சூட்டில் ராம்ப் வாக் செய்து பார்வையாளர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சுவாரசியமான வடிவங்கள், வளைந்த கோடுகள் மற்றும் மையக்கருத்துகள் எல்லா வகையிலும் ஒரு முழுமையான வடிவமைக்கப்பட்ட ஆடையாக இருந்தது. நேர்த்தியான கலைப்படைப்புடன் வடிவமைக்கப்பட்ட ஆடையில் மிக அழகாக தோற்றமளித்தார் ஷில்பா.

சன்யா மல்ஹோத்ரா
இந்தி நடிகையான சன்யா மல்ஹோத்ரா மிகவும் கவர்ச்சியான பிகினி வடிவ ஆடையை அணிந்து வந்து அனைவரையும் கவர்ந்தார். ஆரஞ்சு நிற பிகினி ஜாக்கெட் ஒரு கட் பாவாடை மற்றும் சல்லவான ஓவர் ஜாக்கெட் அணிந்திருந்தார். மேலும் அவர் வளைவில் நடக்கும்போது தன்னம்பிக்கை மற்றும் அழகான கவர்ச்சியை வெளிப்படுத்தினார்.பிரகாசமான வண்ணங்கள் முதல் கண்ணைக் கவரும் பிரிண்ட்கள் வரை, வெப்பமான கோடைகாலத்தில் கடற்கைரையில் அணியும் ஆடையாக அது இருந்தது. அந்த ஆடையில் மிக கவர்ச்சியாக தோன்றி பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தார் சன்யா.

நிஹாரிகா என்.எம்
நிஹாரிகா என்எம், டிசைனர் சமீர் மதனின் சம்மர் க்ரூஸ் '23 தொகுப்பான ‘அன்டேம்ட்- தி வைல்ட் திங்' க்கு ஷோஸ்டாப்பராக ராம்ப் வாக் செய்தார். இந்த ஆடை வடிவமைப்பு 80கள் மற்றும் 90களின் கலாச்சாரத்தின்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த அழகான ஆடை வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் பளபளப்பாக இருந்தது. 90களின் இத்தாலிய கலைஞரான மோனிகா பெலூசியினின் வடிவமைப்பை ஒத்ததாக இருந்தது. ஃபாக்ஸ் லெதர் லைன் சிறுத்தை தோல் வடிவில் இடுப்பில் பெல்ட், பிண்டக்ஸ் மற்றும் லேடெக்ஸ் லெதர் ஸ்க்ரஞ்ச் போன்ற நுட்பங்கள் இந்த ஆடைகளில் பயன்படுத்தப்பட்டன.

சஞ்சனா சங்கி
மிகவும் தனித்துவமான கவர்ச்சியான கண்ணை கவரும் வகையில் அழகான ஆடைகளை வடிவமைப்பாளர் சித்தார்த்தா பன்சால் வழங்கினார். நடிகை சஞ்சனா சங்கி ‘செவன் ஹெவன்' கலெக்ஷனின் ஷோஸ்டாப்பராக வலம் வந்தார். பன்சால், நெக்ஸாவின் ஸ்பாட்லைட் என்ற வடிவமைப்பு போட்டியில் வெற்றி பெற்றவர் மற்றும் அவரது வடிவமைப்புகள் அனைத்தும் 1960கள் மற்றும் 1970களின் வளிமண்டலத்தால் ஈர்க்கப்பட்ட ரஃபிள்ஸ் மற்றும் ரெயின்போஸ் பற்றியதாக இருந்தது. காக்டெய்ல் ஆடைகள் அனைத்தும் சுதந்திர உணர்வு மற்றும் சுய வெளிப்பாடு பற்றியது.

சோபிதா துலிபாலா
நடிகை சோபிதா துலிபாலா, தற்போது நடைபெற்று வரும் லேக்மீ பேஷன் வீக்கில், பிரபல வடிவமைப்பாளர் தருண் தஹிலியானி வடிவமைத்த சிகப்பு நிற கவுன் அணிந்திருந்து அழகாக ராம்ப் வாக் செய்தார். மிகவும் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்ட சிவப்பு நிற ஆடையில் மிகவும் கவர்ச்சியாகவும் செக்ஸியாகவும் தோற்றமளித்தார். மேலும் இது காக்டெய்ல் பார்ட்டிகள் மற்றும் வரவேற்புகள் போன்ற நிகழ்வுகளுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

சோனாக்ஷி சின்ஹா, அன்ஷுலா கபூர் மற்றும் அன்டரா மர்வா மற்றும் அனிதா ஷ்ராஃப்
லேக்மீ ஃபேஷன் வீக் 2023 இன் இரண்டாம் நாளில், நடிகை சோனாக்ஷி சின்ஹா, 'டான்சிங் குயின்' தொகுப்பிலிருந்து டிசைனர் மோஹித் ராயின் வடிவமைத்த கோல்டன் நிறத்தில் மினுமினுப்பான த்ரீ-பீஸ் மெர்மெய்ட் ஆடையை அணிந்து ராம்ப் வாக் செய்தார். ஜிகுஜிகு வென ஜொலிக்கும் ஆடையில் அனைவரின் கண்களையும் கவரும் வகையில் செக்ஸியாக இருந்தார். அன்ஷுலா கபூரும், அனிதா ஷ்ராஃப் மற்றும் அன்டரா மர்வா ஆகியோரும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளில் ராம்ப் வாக் செய்தனர். அன்ஷுலா சாம்பல் நிற டிஸ்கோ ஆடை அணிந்திருந்தார். ஒரு பளபளப்பான கோர்செட் டாப் அணிந்திருந்தார். அன்டாரா மோதிவாலா மர்வா பளபளப்பான உடையிலும், அனிதா வெள்ளை நிற ஆடையுடன் கேப் அணிந்திருந்தார்.

அன்விதா ஷர்மாவின் லேபிள் டூ பாயிண்ட் டூ
டிசைனர் அன்விதா ஷர்மா தனது டூ பாயிண்ட் டூ லேபிளுக்கு ஷோஸ்டாப்பர் இல்லை என்றாலும். அவரது வடிவமைப்பு மிகவும் தனித்துவமாக இருந்தது. இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ற ஒரு தாயாரிப்பாக இருந்தது. இது 'ஒரு வாரியர்ஸ் ஜர்னி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் ஜப்பானிய வடிவங்கள், சிவப்பு, பச்சை மற்றும் கருப்பு நிறங்களின் தடித்த சாயல்கள், சுவாரஸ்யமான வடிவங்கள், சமச்சீரற்ற வடிவங்கள் மற்றும் அச்சிட்டுகளைப் பயன்படுத்தியன் மூலம் மிக தனித்துவமாக இருந்தது.



Click it and Unblock the Notifications