Latest Updates
-
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
Fashion Week 2023: ராஷ்மிகா மந்தனா மற்றும் டாப்ஸியின் அட்டகாசமான மற்றும் ஸ்டைலான தோற்றங்கள்...!
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஃபேஷன் நிகழ்வுகளில் ஒன்றான லேக்மீ ஃபேஷன் வீக் மார்ச் 9இல் தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது.
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஃபேஷன் நிகழ்வுகளில் ஒன்றான லேக்மீ ஃபேஷன் வீக் மார்ச் 9இல் தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. நான்கு நாட்கள் நடைபெற்று வருகிற இந்த ஃபேஷன் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற ஆடை வடிமைப்பாளர்கள் மற்றும் புதிதாக துறைக்கு வந்த பல டிசைனர்கள் பங்கேற்றனர். அவர்கள் வடிவமைத்த ஆடையை பாலிவுட் மற்றும் கோலிவுட் திரை பிரபலங்கள் மற்றும் மாடல்கள் அணிந்து ராம்ப் வாக் செய்து வருகிறார்கள். எல்லா ஆடைகளும் கவர்ச்சியாகவும் அழகாகவும் அட்டகாசமாகவும் பார்வையாளர்களை கவர்ந்துவருகிறது.

மிகுவும் நேர்த்தியாகவும் தனித்துவமாகவும் வடிவமைக்கப்பட்ட பல ஆடை தொகுப்புகளை இங்கு காணலாம். மிகவும் பிரபலமான நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் டாப்ஸி இந்த ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்டது அழகாக ராம்ப் வாக் செய்தனர்.
தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தனது அழகாலும் திறமையாலும் நடிப்பாலும் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.
திறமையான நடிகை ரஷ்மிகா மந்தனா, லேக்மீ ஃபேஷன் வீக் 2023 இல், பிரபல வடிவமைப்பாளர் ஜே.ஜே.வலயா வடிவமைத்த சிறப்பு ஆடையை அணிந்து மிக அழகான ஷோஸ்டாப்பராக வலம் வந்தார்.
கருப்பு மற்றும் தங்க நிற புடவை மற்றும் டிசைனர் பிளவுஸ் ஆகிய தொகுப்பினை கொண்ட இந்த ஆடையில் மிகவும் பிரத்யேகமாக தோற்றமளித்தார் ராஷ்மிகா. ஜிக்ஜாக் பிரிண்டுடன் நவீன கலை படைப்பில் வழங்கப்பட்ட ஒரு பாரம்பரிய உடையாக அந்த புடவை இருந்தது.
ரஷ்மிகா மெட்டாலிக் சாயல் பட்டுப் புடவையை ஸ்லீவ்லெஸ் பிளவுஸுடன் சிக்கலான மேட் வண்ண நூல் விவரத்துடன் அணிந்திருந்தார். ஆடைக்கேற்ற அணிகலன் மற்றும் சிகை அலங்காரம் செய்து நேரத்தியாகவும் அழகாகவும் தோற்றமளித்தார்.
இந்தி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தன் திறமையாலும் அழகாலும் சிறந்து விளங்கி வருபவர் டாப்ஸி பன்னு. இவர் லேக்மீ ஃபேஷன் ஷோவில் மோனிஷா ஜெய்சிங் வடிவமைத்த ஆடையை அணிந்து ராம்ப் வாக் செய்தார்.இந்திய ஃபேஷனின் முன்னோடியான மோனிஷா ஜெய்சிங்கின் வடிவமைப்புகள், சமகால, புதுமையான மற்றும் அதிநவீன முறையில் ஆடம்பரமாக இருந்தது. முழு நீளமான சிகப்பு நிற கவுன் அணிந்து, கழுத்தில் ஆடம்பரமான தங்க நெக்லஸ் அணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் டாப்ஸி. சிகப்பு நிற ஆடையில் தங்கம் அணிந்து தங்கம்போல ஜிகுஜிகுவென ஜொலித்தார் டாப்ஸி.
மேலும், பல மாடல்கள் புதுப்புது டிசைன்களில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து வந்து பார்வையாளர்களின் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்கள்.



Click it and Unblock the Notifications







