Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
செக்ஸியான ஜாக்கெட் அணிந்து சிவப்பு நிற புடவையின் அழகைக் கூட்டிய பிரியங்கா சோப்ரா!
பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா தனது கணவர் ஜோனஸ் உடன் லாஜ் ஏஞ்சல்ஸில் கர்வா சவுத் பண்டிகையைக் கொண்டாடினார். இது இவர்கள் திருமணமாகி கொண்டாடும் இரண்டாவது கர்வா சவுத் பண்டிகை ஆகும்.
சமீபத்தில் வட இந்தியாவில் திருமணமான பெண்களால் கொண்டாடப்படும் கர்வா சவுத் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நாளில் பல பாலிவுட் நடிகைகள் தங்கள் கணவரின் நன்மைக்காகவும், நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்காகவும் விரதம் இருந்து, பல அட்டகாசமான உடை அணிந்து இப்பண்டிகையை கொண்டாடினர். அந்த வகையில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா தனது கணவர் ஜோனஸ் உடன் லாஜ் ஏஞ்சல்ஸில் இப்பண்டிகையைக் கொண்டாடினார்.
இது இவர்கள் திருமணமாகி கொண்டாடும் இரண்டாவது கர்வா சவுத் பண்டிகை ஆகும். இந்த பண்டிகை அன்று பிரியங்கா சோப்ரா பாரம்பரிய உடையான புடவையை அணிந்திருந்தார். அதுவும் சிவப்பு நிற புடவை அணிந்து, அதற்கு செக்ஸியான ஜாக்கெட் போட்டிருந்தார். இந்த சிவப்பு நிற புடவையில் தனது கணவருடன் சேர்ந்த எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். கீழே 2020 கர்வா சவுத் பண்டிகையின் போது பிரியங்கா சோப்ரா எடுத்த போட்டோக்கள் மற்றும் ஸ்டைல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிற புடவை
பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த சிவப்பு நிற புடவையானது இரட்டை டிசைனர்களான மோனிகா மற்றும் கரிஷ்மா வடிவமைத்தது. இந்த புடவையானது லைட் வெயிட் மட்டுமின்றி, இதன் முனையில் சற்று மார்டன் தோற்றத்தைத் தரும் வகையில் ப்ரில்களைக் கொண்டிருந்தது. மேலும் இந்த புடவைக்கு பிரியங்கா சோப்ரா கோல்டன் நிற சிங்கிள் ஸ்ட்ராப் ஜாக்கெட் அணிந்திருந்தது, அவரை அழகாகவும், சற்று கவர்ச்சிகரமாகவும் காட்டியது எனலாம்.

கணவருடன் பிரியங்கா
இது பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கணவருடன் சேர்ந்து எடுத்து வெளியிட்ட மற்றொரு போட்டோ. பிரியங்கா இந்த புடவைக்கு பொருத்தமாக உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு, கண்களுக்கு கண் மை போட்டு, நெற்றி உச்சியில் குங்குமம் வைத்து, கை, காது மற்றும் கழுத்தில் அழகிய ஆபரணங்களை அணிந்து இருந்தார்.

பிரியங்கா சோப்ராவின் 2019 கர்வா சவுத் தோற்றம்
இது 2019 ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ரா மற்றும் ஜோனஸ் கொண்டாடிய முதல் கர்வா சவுத் போட்டோ. கடந்த ஆண்டும் பிரியங்கா சோப்ரா சிவப்பு நிற புடவையைத் தான் அணிந்திருந்தார். இந்த சிவப்பு நிற புடவையானது டிசைனர் சப்யசாச்சி வடிவமைத்தது. இந்த சிவப்பு நிற புடவையின் முனைகள் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்ததுடன், அதற்கான ஜாக்கெட்டும் முழுமையாக எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது.

பிரியங்காவின் மேக்கப்
பிரியங்கா சோப்ரா இந்த புடவைக்கு பொருத்தமாக உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு, கண்களுக்கு மை போட்டிருந்தார். மேலும் கழுத்தில் மாங்கல்யத்தைத் தவிர வேறு எந்த ஆபரணமும் அணியாமல், கைகளுக்கு சிவப்பு நிற வளையலை அணிந்திருந்தார்.

அழகிய தம்பதி
இது கடந்த வருடம் கர்வா சவுத் பண்டிகையின் போது பிரியங்கா சோப்ரா தனது காதல் கணவரின் கைகளை கட்டிப்பிடித்தவாறு எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications